வவுனியாவில் அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபட்ட சொகுசு பேருந்துகள் கைப்பற்றல்

வவுனியா மாவட்டத்தில் உரிய வழித்தட அனுமதிப்பத்திரமின்றி பொதுமக்கள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட இரண்டு சொகுசுப் பேருந்துகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

வடக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் பொலிஸார் இணைந்து வவுனியா மாவட்டத்தில் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது, அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபட்ட இரண்டு சொகுசு பேருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

வடக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரனின் நேரடி கண்காணிப்பின் கீழ் இடம்பெற்ற இந்நடவடிக்கையில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்குப் பொறுப்பான பணிப்பாளர், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பறக்கும் படை, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் பறக்கும் படை மற்றும் வவுனியா பொலிஸார் இணைந்து செயற்பட்டனர்.

பொதுமக்கள் போக்குவரத்து சேவையில் உரிய வழித்தட அனுமதிப்பத்திரமின்றி ஈடுபடும் பேருந்துகளை அடையாளம் கண்டு, அவற்றின் அனுமதிப்பத்திரங்கள் மற்றும் ஏனைய சட்டபூர்வ ஆவணங்களை பரிசோதித்து, சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுப்பதே இந்நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும்.

இதன்போது உரிய அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபட்ட இரண்டு பேருந்துகள் கண்டறியப்பட்டதையடுத்து, அவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளன.

இதனால் பயணிகளுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களை குறைக்கும் வகையில் மாற்று பேருந்துகள் உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

எனினும், பேருந்து சேவை இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக சிறுவர்கள், முதியவர்கள் உள்ளிட்ட பயணிகள் குறிப்பிடத்தக்க அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.

இதேவேளை, கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த சுமார் ஐந்து பேருந்துகள் மதவாச்சி பகுதியில் இருப்பதாகவும், அவற்றிடம் உரிய வழித்தட அனுமதிப்பத்திரங்கள் இல்லாத காரணத்தால் வவுனியாவுக்குள் நுழைவதை தவிர்த்து அப்பகுதியில் தங்கியுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

அனுமதியின்றி இயங்கும் இவ்வாறான பேருந்துகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டால், நீதிமன்றத்தில் முற்படுத்தப்படும் வரை அவற்றை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலை ஏற்படும்.

தற்போதைய நிலையில் பயணிகளின் தேவையை ஈடுசெய்ய போதுமான மாற்றுப் பேருந்துகள் இல்லாததையும் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பையும் கருத்திற்கொண்டு, முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

எவ்வாறாயினும், அனுமதிப்பத்திரமின்றி இயங்கும் பேருந்துகளுக்கு எதிரான சட்ட நடைமுறைப்படுத்தல் நடவடிக்கை கைவிடப்படவில்லை என்பதுடன், மேலும் ஒரு விசேட நடவடிக்கை மிக விரைவில் முன்னெடுக்கப்படும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்தார்.

இந்நிலையில், தற்போது உரிய வழித்தட அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபட்டு வரும் அனைத்து பேருந்து உரிமையாளர்களும் இயக்குநர்களும் உடனடியாக அவ்வாறான சேவைகளை நிறுத்தி, தேவையான வழித்தட அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

nav

‘தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றி’ – இன்று ஆரம்பிக்கிறது நவராத்திரி விரதம்!

October 11, 2026

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று (11) தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்க்கையாக,

ch

சீனத் தூதுவர் – விஜித ஹேரத் சந்திப்பு

October 11, 2026

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதையும், இரு நாடுகளுக்கும் இடையிலான இறப்பர் – அரிசி

sm

புகையை வெளியேற்றும் வாகனங்களை கண்டறிவதற்கு புகைப்படப் பிரிவு

October 11, 2026

அதிகளவில் புகையை வெளியேற்றும் வாகனங்களைக் கண்டறிவதற்காக, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகை பரிசோதனைத் திட்டத்தின் கீழ் விசேட புகைப்படப்

acci main

மெட்ரோ பஸ்ஸுடன் மோதிய குற்றச்சாட்டில் பஸ் சாரதி கைது

October 11, 2026

கொழும்பு – கெஸ்பேவ வீதியில், மிரிஸ்வத்த பகுதியில் மெட்ரோ பஸ்ஸுடன் வேண்டுமென்றே மோதியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், 44 வயதுடைய

chow

சௌவின் முன்னிலையை நெருங்கும் பிரட்போர்ட்: புதிய கருத்துக்கணிப்பு

October 11, 2026

செப்டம்பர் இறுதிப் பகுதியில் வெளியிடப்பட்ட முந்தைய கருத்துக்கணிப்புடன் ஒப்பிடுகையில் சௌவின் முன்னிலை 6 புள்ளிகளிலிருந்து 2.9 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. ரொறன்ரோ

Ont

பார்வையற்ற வாக்காளருக்கு ரகசியமாக வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது? Ontario மனித உரிமைகள் தீர்ப்பாயத்தில் விசாரணை!

October 11, 2026

வாக்களிக்கும் போது தனது வாக்கின் ரகசியத்தன்மையையும் சுயாதீனத்தையும் உறுதிசெய்யத் தவறியதன் மூலம், ‘ஒன்டாரியோ தேர்தல் ஆணையம்’ தனது மனித உரிமைகளை

Sajith-Premadasa-2 (1)

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும்  

October 10, 2026

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இச்சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம்

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்