வரலாற்று ரீதியாக வடக்கு மாகாணம் இலங்கையின் பொருளாதார மையமாகத் திகழ்ந்துள்ளது. அந்தப் பெருமையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது-ஆளுநர் 

வடக்கு மாகாணத்தின் வளங்களைச் சரியான முறையில் பயன்படுத்தி, அதற்கான வசதிகளை ஏற்படுத்துவதன் ஊடாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு வடக்கு மாகாணத்தின் பங்களிப்பை 10 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்க முடியும் என வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களை கௌரவிக்கும் இரண்டாவது வர்த்தகச் சிறப்பு விருதுகள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் ஜே ஹோட்டலில் நேற்று (19.06.2026) வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகப் பங்கேற்று உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நிகழ்வில் ஆளுநர் மேலும் உரையாற்றுகையில்,
‘வரலாற்று ரீதியாக வடக்கு மாகாணம் இலங்கையின் பொருளாதார மையமாகத் திகழ்ந்துள்ளது. அந்தப் பெருமையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது. எமது மாகாணத்தை எடுத்துக்கொண்டால் விவசாயம் மற்றும் கடற்றொழில் ஆகிய இரண்டு பிரதான துறைகளிலும் மிகப் பெரியளவிலான உற்பத்திகள் காணப்படுகின்றன. ஆயினும், அந்த உற்பத்திகளைப் பதனிடும் வசதிகள் மற்றும் குளிரூட்டப்பட்ட களஞ்சியசாலைகள் எமது மாகாணத்தில் போதுமானளவு இல்லாமையானது ஒரு பின்னடைவாக உள்ளது.
இவ்வாறான காரணங்களால் நெல் மற்றும் வெங்காயச் செய்கைகளில் ஈடுபடும் விவசாயிகள் தமது உற்பத்திகளுக்கு உரிய விலையைப் பெறமுடியாமலும், அவற்றைச் சந்தைப்படுத்துவதிலும் பல்வேறு சவால்களைத் தொடர்ச்சியாக எதிர்கொள்கின்றனர்.
இவ்வாறான தடைகளைத் தாண்டி, எமது ஐம்பதுக்கும் மேற்பட்ட தொழில்முயற்சியாளர்களை அடையாளங்கண்டு, அவர்களின் உற்பத்திகளைச் சர்வதேச ஏற்றுமதிச் சந்தைக்குக் கொண்டு செல்வதற்கு இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனம் வழங்கிவரும் ஆதரவும் பங்களிப்பும் மிகவும் பாராட்டத்தக்கது. குறிப்பாக, பெண்களை வலுவூட்டுவதற்கும், அவர்களை அபிவிருத்தியில் ஒருங்கிணைப்பதற்கும் இந்தச் சம்மேளனம் முன்னெடுக்கும் அர்ப்பணிப்பான முயற்சிகள் சிறப்புக்குரியன.
உள்ளூர் திறன்களை வளர்த்தல், தரத்தை மேம்படுத்துவதற்கான செயல்முறைப் பயிற்சிப் பட்டறைகளை நடத்துதல் மற்றும் பிராந்திய உற்பத்திகளைச் சர்வதேச ரீதியில் காட்சிப்படுத்துவதற்கான சந்தை வாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற அறிவுப் பகிர்வுச் செயற்பாடுகளின் ஊடாகவே நிலையான அபிவிருத்தியை நாம் அடைய முடியும்.இந்த நிகழ்வில் விருதுகளை வென்றுள்ள தொழில்முயற்சியாளர்களாகிய நீங்களே எமது பொருளாதார எதிர்காலத்தின் சிற்பிகள். நீங்கள் வெறுமனே சிறிய அளவோடு நின்றுவிடாது, எதிர்காலத்தில் நாட்டினுடைய மிகப் பெரிய ஏற்றுமதியாளர்களாக உருவெடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் எம்.எச்.ஏ.முஹம்மட் ஹமிஸ், சம்மேளனத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், தொழில்முயற்சியாளர்கள், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் மாவட்டச் செயலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
Sakara

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் – சாகர காரியவசம்!

October 13, 2026

நாட்டின் தேசியம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஞானசார தேரர் பலவிடயங்களை வெளிப்படுத்தினார். சிங்கள பௌத்த இனத்தை பாதுகாப்பதற்காக தவறுகளை

mini

அமைச்சரைச் சந்திக்க தமிழ் பெண்கள் சங்கம் கோரிக்கை

October 13, 2026

சிறுவர்கள் மற்றும் யுவதிகளின் கலை, கலாசாரத் திறனை மேம்படுத்தும் நோக்கில் நிறுவுவதற்கு உத்தேசித்துள்ள நவீனமயமாக்கப்பட்ட கலாலயா கலாசார மற்றும் இளைஞர்

zer

சர்வதேச இலத்திரனியல்-கழிவு தினம்; 2050 இல் பூஜ்ஜிய கார்பன் இலக்கு!

October 13, 2026

2050 ஆம் ஆண்டளவில் ‘பூஜ்ஜிய கார்பன்’ (Net Zero) இலக்கை அடைவதே அரசாங்கத்தின் முதன்மையான எதிர்பார்ப்பாகும் என சுற்றாடல் பிரதி

fue

75 புதிய அரச எரிபொருள் நிரப்பு நிலையங்களை நிறுவ நடவடிக்கை

October 13, 2026

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் 75 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 2026

arju

அர்ச்சுனாவின் பதவியில் சிக்கல்: விரைவில் விசாரணை!

October 13, 2026

டாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை மேலதிக விசாரணைக்காக எதிர்வரும்

Navi Pillay York University (6) harini

நவி பிள்ளை: நீதியின் தூதர் மற்றும் தமிழ் மக்களுக்கு ஒரு உத்வேகம் ஹரிணி சிவலிங்கம்

October 12, 2026

ஹரிணி சிவலிங்கம்-கனடா சட்டத்தரணி இந்த வாரம், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கான தளராத அர்ப்பணிப்பால் தனது அசாதாரணமான வாழ்க்கைப்

Chamara_Sampath_1200x675px_06_08_25

சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டது ஏன்?

October 12, 2026

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டமைக்கான காரணங்களை இலங்கை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. இரத்தினக்கல் வியாபாரியொருவரிடம்

anura may 26

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் – எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு

October 12, 2026

சிறையிலடைக்கப்படும் பௌத்தமதகுருமாரின் காவியுடை தொடர்பில் பௌத்தமத பீடாதிபதிகள் முன்மொழிந்த பரிந்துரைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவித்துள்ளது அறிக்கையொன்றில்

batti land

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் இரா சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு

844137579_1823350292179398_4868269684370359471_n

கொக்குவில் பிரம்படி படுகொலையின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்!

October 12, 2026

ஈழத் தமிழர் வரலாற்றில் இந்திய இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட கொடூரமான படுகொலைகளில் ஒன்றான யாழ்_கொக்குவில்பிரம்படி_படுகொலையின்39ஆம்ஆண்டுநினைவு நாள் இன்றாகும் (அக்டோபர் 12, 2026).

gary

நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி

October 12, 2026

ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமை ஆணையாளரும் 2026 நோபல் சமாதான பரிசை பெற்றுள்ளவருமான நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின்