ழ்ப்பாணம், வடமராட்சிப் பகுதியில் நீண்டகாலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞன் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனிடமிருந்து குறிப்பிட்ட அளவு போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது, குறித்த இளைஞன் பளைப் பகுதியில் உள்ள ஒரு போதைப்பொருள் வியாபாரியிடமிருந்து இவற்றை வாங்கி வந்து, வடமராட்சிப் பகுதியில் விற்பனை செய்து வந்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
: இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், போதைப்பொருளை விநியோகித்ததாகக் கூறப்படும் பளையைச் சேர்ந்த பிரதான போதைப்பொருள் வியாபாரியைக் கைது செய்வதற்குப் பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வடமராட்சிப் பகுதியில் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸார் முன்னெடுத்து வரும் விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.