வடபகுதி கடற்பரப்பு சட்டவிரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது – ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு; கடற்படையின் அலட்சியப்போக்கையும் கடுமையாக கண்டித்தார்

அத்துமீறி நுழையும் சட்டவிரோத இந்திய மீனவர்களாலும், உள்ளூர் சட்டவிரோத கடற்றொழிலாளர்களாலும் வடபகுதிக் கடற்பரப்பு முழுவதும் சட்டவிரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டதாகவும், நேர்மையான வழியில் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு கடற்றொழில் மேற்கொள்ளும் மீனவர்கள் வஞ்சிக்கப்படுவதாகவும் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு எல்லை தாண்டி வரும் இந்திய இழுவைப்படகுகளின் வருகையை முற்றாக கட்டுப்படுத்த முடியாத இலங்கை கடற்படையின் செயற்பாடு மிகவும் கேவலமானது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மிகவும் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
பாராளுமன்றில் 05.11.2026இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளால் வடக்கு கடற்பரப்பு மிக மோசமாகப் பாதிக்கப்படுகின்றது.
சட்டவிரோத இந்திய மீனவர்கள் ஒருபுறம், இலங்கை சட்டவிரோதிகள் மறுபுறம் என, கடல் முழுவதும் சட்டவிரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது.
வடக்கு மீனவர்களின் பொறுப்பில் வடக்கு கடற்பகுதியைத் தாருங்கள். கூடியவிரைவில் சீராக்கிக் காட்டுகின்றோமென மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
நீங்கள் கொஞ்சம் அங்குள்ள மீனவர்களின் குடும்பங்களை சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் உழைப்பதில்லையா? சாப்பிடவேண்டாமா? பிள்ளைகளின் கல்வி மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தையும் எண்ணிப்பாருங்கள். வடபகுதி மீனவர்களையும் வாழ விடுங்கள்.
முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், குறிப்பாக தீவுப்பகுதி, மன்னார், கிளிநொச்சி மீனவர்கள் இலங்கையின் பிரஜைகள் இல்லையா?
நீதியாக, நேர்மையின் வழியில் சீரானவகையில் கடற்றொழில் மேற்கொள்ளும் மீனவர்கள் ஏன் வஞ்சிக்கப்படுகின்றனர். ஏன் சட்டவிரோதிகளின் ஆதிக்கத்தை வடபகுதிக் கடலில் அனுமதிக்கின்றீர்கள்.
இந்திய இழுவைமடிப் படகுகள், உள்ளூர் சுருக்குவலை, வெளிச்சம்பாய்ச்சி மீன்பிடி, டைனமெற் வெடிவைத்து மீன்பிடிக்கும் சட்டவிரோதிகள் எமது கடலை அழிக்கின்றனர்.
இந்திய இழுவைமடிச் சட்டவிரோதிகளால் எமது கடல் வளங்கள் மட்டுமல்ல மீன்பிடி வலைகளும் முற்றாக அழிக்கப்படுகின்றன. இவர்களா எம்மைக் காப்பவர்கள் என்று கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.
அண்மையில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் இடம்பெற்ற ஒரு வழக்கில், இலங்கை மீனவர்கள் தமது கடலையும், அதன் வளங்களையும் சிறப்பாகப் பராமரிப்பதாகவும், அங்கு கடல் வளம் தூய்மையாக உள்ளதால் இலங்கைக் கடற்பரப்பில் கடல் வளம் அதிகரித்திருப்பதாகவும் இந்திய நீதியரசர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்திய கடற்பகுதி அசுத்தமடைந்துள்ளதால் மீன்வளம் அங்கு அழிந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மீன்வளத்தைத் தேடி இந்தியமீனவர்கள் இலங்கைக் கடற்பிராந்தியத்திற்குள் சென்றால் நிச்சயம் கைதுசெய்யப்படுவார்கள் எனவும், கைது நடவடிக்கையினைத் தவிர்க்கவேண்டுமெனில், இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைவதைத் தவிர்க்கவேண்டும் என இந்திய நீதியரசர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்திய மீனவர்கள் தவறான விடயத்தை மேற்கொள்கின்றார்கள் என்பதை இந்திய நீதியரசர்களே சுட்டிக்காட்டியுள்ளனர்.
இருப்பினும் அத்துமீறி இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழையும் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையால் முற்றுமுழுதாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஓரிரு படகுகளையும், அந்தப் படகுகளில் உள்ள மீனவர்களையுமே கடற்படையால் கைதுசெய்து நடவடிக்கை எடுக்கமுடிகின்றது. இவ்வாறு இலங்கைக் கடற்படையினர் அலட்சியப்போக்குடன் செயற்படுவது மிகவும் கேவலமானது எனச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் – என்றார்
9

“தமிழையும் பெரியார் பெயரையும் வைத்து ஊழல் செய்யும் தி.மு.க!” – முதலமைச்சர் விஜய் கடும் விமர்சனம்!

November 6, 2026

சென்னை: பெரியார் அறிவுலகத்திற்குப் புத்தகங்கள் வாங்கியதில் திமுக மாபெரும் ஊழல் செய்துள்ளதாக முதலமைச்சர் விஜய் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். இது

ju

IGP க்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நீதவான் உடனடியாக இடமாற்றம்

November 6, 2026

நீதிமன்ற உத்தரவை மீறியதாகக் கூறி பொலிஸ் மா அதிபருக்கு (IGP) எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை விடுத்த

kad

குற்றச்செயல் கும்பலின் தலைவரான ’கைவாரு முத்து’ கட்டுநாயக்கவில் கைது

November 6, 2026

பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் கும்பலின் தலைவரான மனோஜ் முத்துகுமாரண பிரியதர்ஷன என்றழைக்கப்படும் ‘கைவாரு முத்து’ என்பவரை, ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து

carney uuuuuuuuuuuuuuu

அமெரிக்காவைச் சார்ந்திருப்பக் குறைப்பதற்கு கனேடிய வரவு-செலவுத் திட்டம் உறுதிபூண்டுள்ளது

November 6, 2026

AFP செய்தி நிறுவனத்தால் வெளியிடப்பட்டது: நவம்பர் 5, 2026 – இர 23:32 கனடா வியாழக்கிழமை அன்று “பொருளாதார சுதந்திரத்தை”

canda budget

கனேடிய கூட்டாட்சி வரவு-செலவுத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய முன்மொழிவுகள்

November 6, 2026

பிரதமர் மார்க் கார்னியின் ஆட்சியில் இரண்டாவது முறையாக, கனேடிய அரசாங்கம் தனது முன்மொழியப்பட்ட வரவு-செலவுத் திட்டத்தை வியாழக்கிழமை வெளியிட்டது. அதன்

5YU33JN5JNO6HGR63EOL7VPBLE

கனடாவின் 2027-29 புதிய குடியேற்றத் திட்டத்தை வெளிப்படுத்தியது கூட்டாட்சி வரவுசெலவுத் திட்டம்

November 6, 2026

ஒட்டாவா (OTTAWA) — அரசாங்கத்தின் இற்றைப்படுத்தப்பட்ட குடியேற்றத் திட்டம், நிரந்தர மற்றும் தற்காலிக குடியிருப்பாளர்களின் சேர்க்கைக்கான பரந்த இலக்குகளைத் தக்கவைத்துக்கொள்வதோடு,

IMG_1224

யாழில் ஒரே வீட்டில் இருவர் சடலங்களாக மீட்பு!

November 6, 2026

யாழ்ப்பாணம், வேலணை – செட்டிக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து சகோதரி மற்றும் சகோதரன் ஆகிய இருவரின் சடலங்கள் இன்றையதினம் (06)

IMG_1223

வடபகுதிக் கடற்பரப்பு சட்டவிரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது

November 6, 2026

அத்துமீறி நுழையும் சட்டவிரோத இந்திய மீனவர்களாலும், உள்ளூர் சட்டவிரோத கடற்றொழிலாளர்களாலும் வடபகுதிக் கடற்பரப்பு முழுவதும் சட்டவிரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டதாகவும், நேர்மையான

IMG_1221

கொழும்பில் உணவகங்களின் தரத்தை உறுதி செய்ய அறிமுகமாகும் க்யூ.ஆர் முறை!

November 6, 2026

கொழும்பில் உணவகங்களின் உணவுத் தரம் தொடர்பில் முறைப்பாடு செய்ய புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாநகர சபையின் மக்கள் சுகாதாரத் திணைக்களம்

IMG_1220

ரயில் கடவைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவ மாணவி

November 6, 2026

24 வயதுடைய இளம் மருத்துவ மாணவி ஒருவரின் சடலம் காலி, கிந்தொட்டை பகுதியில் உள்ள புகையிரதப் பாதைக்கு அருகில் மீட்கப்பட்ட

IMG_1219

ஏ-9 வீதியில் பயங்கர விபத்து

November 6, 2026

யாழ்ப்பாணம் – கண்டி ஏ-9 பிரதான வீதியின் மெதவாச்சிப்ப பியூஸ்வெவ பகுதியில், மோட்டார் காரும் தனியார் பஸ்ஸும் ஒன்றுடன் ஒன்று

IMG_1218

கோடிகளில் நிதி மோசடி: வங்கி முகாமையாளர்கள் இருவர் கைது

November 6, 2026

இலங்கையின் முன்னணி வங்கிகள் இரண்டில் பெருந்தொகையான நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், இரு வங்கி முகாமையாளர்கள் கைது