வங்காள விரிகுடாவில் உருவாகும் புயல்

வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் இலங்கைக்குக் கிழக்காக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் மட்டக்களப்புக்குக் கிழக்காக ஏறத்தாழ 650 கி.மீ தூரத்தில் நிலை கொண்டுள்ளது.

இத் தொகுதி வடமேற்குத் திசையில் நாட்டின் கிழக்குக் கரையை விட்டு விலகி இன்று ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அதன் பின் அத் தொகுதி நவம்பர் 16 ஆம் திகதியளவில் மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு புயலாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

எனவே, கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் வட அகலாங்குகள் 050N – 150N இற்கும் கிழக்கு நெட்டாங்குகள் 800E – 900E இற்கும் இடையில் உள்ள ஆழம் கூடிய கடற்பரப்புகளிலும் காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் இன்று அதிகாலை 05.30 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்தப் பிரதேசத்தில் கடலில் இருப்போர் உடனடியாக இப் பிரதேசங்களை விட்டு விலகி பாதுகாப்பான பிரதேசத்திற்கு நகருமாறு அறிவுறுத்தப் படுகின்றார்கள்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்குத் திசையிலிருந்து அல்லது வடக்குத் திசையிலிருந்து வீசக் கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

je

10 ஆண்டுகளுக்கு பிறகு ரோபோ உதவியுடன் எழுந்து நடந்த இளம்பெண்!

November 15, 2026

கடந்த 2014 ஆம் ஆண்டு, ஜெசிகாவுக்கு 16 வயதாக இருந்தபோது நேரிட்ட ஒரு கொடூர கார் விபத்து, அவரது இடுப்புக்குக்

Srilanka

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை இலாபமீட்ட செய்ய 5 ஆண்டு திட்டம்

November 15, 2026

ஸ்ரீலங்கன் விமான சேவை எதிர்நோக்கியுள்ள நிதி நெருக்கடி, அதிகளவிலான விமானப் பயணத் தாமதங்கள், கடன் சுமை மற்றும் புதிய விமானங்களைக்

bela

இலங்கையர்களுக்கு விசா கட்டணம் ரத்து

November 15, 2026

உயர் கல்வி கற்பதற்காக முதன்முறையாக பெலாருஸ்ஸுக்கு வருகை தரும் இலங்கை மாணவர்களிடம் இருந்து அறவிடப்படும் நுழைவுக் விசா கட்டணத்தை ரத்து

har

வங்காள விரிகுடாவில் உருவாகும் புயல்

November 15, 2026

வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் இலங்கைக்குக் கிழக்காக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் மட்டக்களப்புக்குக் கிழக்காக ஏறத்தாழ 650 கி.மீ தூரத்தில்

madh

பாடசாலைகளில் மாணவர் சேர்க்கை 40,000ஆல் குறைவு

November 15, 2026

ஆண்டுதோறும் முதலாம் தரத்திற்கு மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை சுமார் 40,000 பேரால் குறைந்து வருவதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளதாக கல்வி

5

5 மாதங்களுக்கு முன் காணாமல்போன சிறுமி 2 மாதக் குழந்தையுடன் மீட்பு

November 15, 2026

ஐந்து மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன சிறுமி ஒருவர் இரண்டு மாத கைக்குழந்தை ஒன்றுடன் அடர்ந்த வனப்பகுதியில் குகை ஒன்றில்

906291012_122177831984726712_9167757603619029684_n

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் காலமானார்

November 15, 2026

வல்வெட்டித்துறை நகரசபையின் முன்னாள் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் காலமானார். அன்னாரின் மறைவுச் செய்தி தமிழ் அரசியல்

8

“மேகதாது அணை கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததா?!” – டி.கே.சிவக்குமார் பேச்சுக்கு வைகோ கண்டனம்!

November 14, 2026

சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துவிட்டதாகக் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தொடர்ந்து கூறி

45

வெளிநாட்டுப் பயங்கரவாதி போராளிகளைத் தடுத்தல் சட்டமூலத்துக்கு அங்கீகாரம்!

November 14, 2026

வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகளைத் தடுத்தல் சட்டமூலத்திற்கு பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அங்கீகாரம்

DEMNBJ3YVJAMFA4CWRQP7ON734

மிசிசாகா வீடொன்றிற்குள் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் நபர் ஒருவர் உயிரிழப்பு

November 14, 2026

மிசிசாகாவில் (Mississauga) உள்ள வீடொன்றிற்குள் சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள

6

இங்கிலாந்து முழுவதும் சுமார் 70 சிறுமிகள் இணையவழியில் பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 30 ஆண்டுகள் சிறை!

November 14, 2026

இங்கிலாந்து முழுவதும் உள்ள குறைந்தது 70 சிறுமிகளை இணையவழியில் ஏமாற்றி, அவர்களது பாலியல் ரீதியான படங்கள் மற்றும் காணொளிகளைப் பெற்ற

64BACECQSBGQJIJLIMRLB5ULJY

எட்டு வயதுச் சிறுமி வாகனத்தால் மோதப்பட்டதைத் தொடர்ந்து போக்குவரத்து சமிக்ஞை விளக்கு கோரும் நோர்த் யோர்க் குடியிருப்பாளர்கள்

November 14, 2026

கடந்த மாதம் நோர்த் யோர்க் (North York) சந்திப்பு ஒன்றில் எட்டு வயதுச் சிறுமி ஒருவர் வாகன விபத்தில் சிக்கிப்