யாழ்ப்பாண இளைஞர், யுவதிகளுக்கு அதிக தொழில் வாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை – கடற்றொழில் அமைச்சர்

யாழ்ப்பாண மாவட்டத்தில் தொழில் வாய்ப்பின்மையை குறைத்து, இளைஞர், யுவதிகளுக்கான அதிகளவிலான தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
மாவட்டச் செயலகத்தில் இன்றைய தினம்(03.10.2026) மாவட்ட செயலகமும் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களமும் இணைந்து நடத்திய மாபெரும் தொழிற்சந்தையில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து இங்கு கருத்துத் தெரிவிக்கையில்,
இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள இன்றைய நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இவ்வளவு இளைஞர், யுவதிகள் தொழில் தேடி இங்கு வந்திருக்கின்றார்கள் என்றால், அவர்களுக்குத் தேவையான தொழில் வாய்ப்புகள் இன்னும் போதுமான அளவில் உருவாக்கப்படவில்லையா?” என்கின்ற கேள்வி எம்முன் எழுகின்றது. இந்தக் கேள்விக்கான பதிலை நாம் மிகவும் பொறுப்புடன் தேட வேண்டியுள்ளது.
யாழ்ப்பாணத்தின் தொழில் வாய்ப்புக்கள் :
நாடளாவிய ரீதியில் தொழில் வாய்ப்பின்மையை எடுத்துக்கொண்டால், அது சுமார் 3.4 சதவீதமாகக் காணப்படுகின்றது. ஆனால், யாழ்ப்பாண மாவட்டத்தைப் பொறுத்தவரையில் அது சுமார் 6.7 சதவீதமாக உள்ளது. எனவே, யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த எமது இளைஞர், யுவதிகளுக்கு மேலும் அதிகளவிலான தொழில் வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய பாரிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது. தொழில் வாய்ப்பின்மை என்பது வெறுமனே ஒரு புள்ளிவிவரம் அல்ல. அது ஒரு இளைஞனின் கனவு; ஒரு யுவதியின் எதிர்காலம்; ஒரு குடும்பத்தின் எதிர்பார்ப்பு.
பெண்களுக்கான தொழில் வாய்ப்புகள் :
அதேவேளை, தொழிலாளர் பங்கேற்பைப் பார்க்கும்போது, ஆண்களில் சுமார் 68 சதவீதத்தினர் தொழிலில் ஈடுபட்டுள்ள நிலையில், பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு சுமார் 32 சதவீதமாகவே காணப்படுகின்றது. எனவே, பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரிப்பதும், அவர்களின் திறமைகளையும் ஆற்றல்களையும் பொருளாதார வளமாக மாற்றுவதும் எமது சமூகத்தின் முன்னேற்றத்திற்கு மிகவும் அவசியமானதாகும்.
தொழிற்சந்தையின் முக்கியத்துவம் :
தொழில் வாய்ப்பின்றி இருக்கின்றவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், தொழில் தேடுபவர்களையும் தொழில் வழங்குபவர்களையும் ஒரே தளத்தில் இணைக்கும் பாலமாக இன்றைய தொழிற்சந்தை அமைகின்றது எனத் தெரிவித்தார். இந்த நாட்டில் வாழ்கின்ற எந்தவொரு இளைஞரும், யுவதியும் தொழில் வாய்ப்பின்றி இருக்கக்கூடாது.
ஒவ்வொருவருக்கும் அவர்களின் கல்வித் தகுதிக்கும், திறமைக்கும், ஆற்றலுக்கும் பொருத்தமான தொழில் வாய்ப்பு கிடைக்க வேண்டும். ஒவ்வொருவரும் பொருளாதார ரீதியாக வலுவடைந்து, கௌரவத்துடனும் சுயமரியாதையுடனும் வாழக்கூடிய நிலையை உருவாக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.
அரசுத் துறைக்கு ஒரு இலட்சத்து பன்னிரண்டாயிரத்திற்கும் அதிகமானவர்களை புதிதாக இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
வெளிப்படையான நிர்வாகம் :
இதேவேளை, இலஞ்சம், ஊழல் மற்றும் முறைகேடுகளற்ற நிர்வாகத்தை உருவாக்குவதுடன், அரச வளங்களை சிக்கனமாகவும் பொறுப்புடனும் பயன்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய கொள்கையாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்ட மக்கள் வழங்கிய மக்கள் ஆணை :
யாழ்ப்பாண மாவட்ட மக்கள் வழங்கிய மக்கள் ஆணை அரசாங்கத்திற்கு பெரும் பொறுப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அந்த மக்கள் ஆணைக்கு மதிப்பளிக்கும் வகையில் மாவட்டத்தின் தொழில், அபிவிருத்தி மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
யுத்தத்தினால் நீண்டகாலமாக பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தை நிலையான அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்வதற்கும், யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் தேவையான நிதி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் குறிப்பிட்டார்.
“Clean Sri Lanka” :
அதேவேளை, “Clean Sri Lanka” வேலைத்திட்டம் நாட்டைச் சுத்தப்படுத்தும் திட்டம் மாத்திரமல்ல எனக் குறிப்பிட்ட அமைச்சர், மக்களின் மனப்பாங்கு, பழக்கவழக்கம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் பரந்த சமூக மறுமலர்ச்சித் திட்டமாக அது முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
போதைப்பொருள், வன்முறை, வாள்வெட்டு உள்ளிட்ட சமூகச் சீரழிவுகளிலிருந்து இளைஞர், யுவதிகளையும் மாணவர்களையும் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பு எனவும் வலியுறுத்தினார்.
பாடசாலைகளில் போதைப்பொருள் தொடர்பான சம்பவங்கள் இடம்பெறும் சந்தர்ப்பங்களில் அவற்றை மூடி மறைக்காமல், உரிய விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்தார்.
மேலும், பெண்கள் மற்றும் மாணவிகள் எதிர்கொள்ளும் பல்வேறு துன்புறுத்தல்கள் மற்றும் அழுத்தங்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கான சமூகப் பொறுப்பையும் வலுப்படுத்த வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
அரச செலவினங்களை குறைக்கும் நடவடிக்கைகள் :
நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதுடன், அரச செலவினங்களைக் குறைத்து, அரச வளங்களை மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தும் புதிய நிர்வாக அணுகுமுறையை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அரச நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புணர்வையும் ஏற்படுத்துவதாகும்.
மாற்றத்தை மக்களிடம் எதிர்பார்ப்பதற்கு முன்னர், ஆட்சியில் இருப்பவர்கள் தாமே அதற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.
எமது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் பதவியேற்றது முதல் அரச செலவுகளைக் குறைத்தல், தேவையற்ற அரச வளங்களின் பயன்பாட்டைத் தவிர்த்தல், மக்களின் வரிப்பணத்தை பொறுப்புடன் நிர்வகித்தல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வுக்கு மிகக் குறைந்த செலவில் செலவிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஜனாதிபதிக்கான அதிகமான பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதுடன், அதிகமான வாகனங்களும் விடுவிக்கப்பட்டன.
நாட்டில் இருந்த ஏழு ஜனாதிபதி மாளிகைகளில் இரண்டைத் தவிர ஏனையவற்றின் பயன்பாடும் ஏனைய துறைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றன.
இவை அனைத்தும் ஒரு முக்கியமான செய்தியை வெளிப்படுத்துகின்றன.
அதேபோன்று, அமைச்சர்களுக்கான சொகுசு வீடுகள், வாகனங்கள் மற்றும் ஏனைய அதிக செலவிலான வசதிகளிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
அதேபோன்று, அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட சுமார் 4 கோடி ரூபாய் பெறுமதியான வரியில்லா வாகன அனுமதிப்பத்திரத்தையும் நாங்கள் பெற்றுக்கொள்ளவில்லை.
மக்களிடம் பொறுப்புணர்வை எதிர்பார்க்கும் நாம், முதலில் அந்தப் பொறுப்புணர்வை நாமே கடைப்பிடிக்க வேண்டும்.
ஐந்து வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தால் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் கிடைக்கும் நடைமுறையை மாற்றுவதற்கும் சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதுவும் அரசியல் கலாசாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகும்.
இளைஞர்களின் எதிர்காலமும் அரச பொறுப்பும் :
அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக் கிடைக்கும் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய வசதிகளை நாம் பார்க்கும்போது, மறுபுறத்தில் தமது எதிர்காலத்திற்காக தொழில் தேடி நிற்கும் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளையும் பார்க்க வேண்டும்.
இந்த இரண்டு நிலைமைகளுக்கும் இடையிலான இடைவெளியைத்தான் நாம் நிரப்ப வேண்டும்.
புதிய அரசியல் மற்றும் நிர்வாகக் கலாசாரம் :
அரசாங்கத்தின் பணம் மக்களுக்காகச் செலவிடப்பட வேண்டும். அரச வளங்கள் மக்களுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும். அரச அதிகாரம் மக்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதற்காகப் பயன்படுத்தப்பட வேண்டும். இதுவே நாம் உருவாக்க விரும்புகின்ற புதிய அரசியல் மற்றும் நிர்வாகக் கலாசாரம்.
தொழிற்சந்தையை வேலை தேடும் நிகழ்வாக மட்டும் பார்க்காமல், எதிர்காலத்திற்கான புதிய வாய்ப்பை உருவாக்கும் தளமாகப் பயன்படுத்துங்கள் :
இன்றைய தொழிற்சந்தையை வெறுமனே வேலை தேடும் நிகழ்வாகப் பார்க்காமல், தமது திறமைகளை வெளிப்படுத்தவும், எதிர்காலத்திற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் கிடைத்துள்ள முக்கியமான தளமாக இளைஞர், யுவதிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
கல்வித் தகுதி, தொழில்நுட்பத் திறமை அல்லது அனுபவம் எதுவாக இருந்தாலும், தமது திறமைகளில் நம்பிக்கை வைத்து, புதிய திறன்களைக் கற்றுக்கொண்டு கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி எதிர்காலத்தைத் தாமே கட்டியெழுப்ப வேண்டும்.
தொழில் வாய்ப்புகளை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
அவற்றைப் பயன்படுத்தி வாழ்க்கையை முன்னேற்றுவது இளைஞர், யுவதிகளின் பொறுப்பாகும். இந்த இரு பொறுப்புகளையும் இணைக்கும் முக்கிய தளமாக இன்றைய தொழிற்சந்தை அமைய வேண்டும்.
இங்கு இடம்பெறும் ஒவ்வொரு சந்திப்பும், நேர்காணலும் புதிய வாய்ப்புகளுக்கான தொடக்கமாக அமையக்கூடும். எனவே, நம்பிக்கையுடன் முன்னேறி, தமது கனவுகளை இலக்குகளாக மாற்றிக்கொள்ள வேண்டும். யாழ்ப்பாண மாவட்டம் புதிய தொழில் வாய்ப்புகளின் முக்கிய மையமாக வளர்வதுடன், இத்தொழிற்சந்தை ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளின் வாழ்க்கையில் புதிய நம்பிக்கைக்கும் வாய்ப்புகளுக்கும் வழிவகுக்கும் தொடக்கமாக அமைய வேண்டும் எனத் தெரிவித்தார்.
8

“காங்கிரஸ் கூட சேர்ந்தவங்க யாரும் உருப்படவே முடியாது!” – தவெக – காங்கிரஸ் கூட்டணி குறித்துத் தமிழிசை சவுந்தரராஜன் கடும் விமர்சனம்!

October 6, 2026

“‘சென்னை: ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (தவெக), காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதைக் கடுமையாக விமர்சித்துள்ள பாஜக மூத்த தலைவர்

7

“வைரலாகும் வீடியோ ஜோடிக்கப்பட்டது!” – தேர்தல் செலவு சர்ச்சை குறித்துத் தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா அதிரடி விளக்கம்!

October 6, 2026

தாராபுரம்: தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் பி. சத்தியபாமா, தேர்தல் செலவினங்கள்

6

“செவிலியர்கள் மீதான பாசிச தாக்குதல் கொடூரத்தின் உச்சம்!” – முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கடும் கண்டனம்!

October 6, 2026

சென்னை: பணி நிரந்தரம், வேலைப் பாதுகாப்பு மற்றும் சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திச் சென்னையில் அறவழியில்

chennai-mtc-bus-viral-video

“பயணிகளை ஆபாசமாகத் திட்டி அட்டகாசம்!” – அரசுப் பேருந்தில் குடிபோதையில் இருந்த இளம் பெண்ணால் பெரும் பரபரப்பு!

October 6, 2026

தமிழ்நாடு: அரசுப் பேருந்து ஒன்றில் மதுபோதையில் ஏறிய இளம் பெண் ஒருவர் சக பயணிகளிடம் அத்துமீறி நடந்து கொண்டு அட்டகாசம்

4

“தாராபுரம் தவெக வேட்பாளர் மீது திமுக அதிரடி புகார்!” – ரூ.31 கோடி செலவிட்டதாக வைரலாகும் வீடியோவால் தேர்தல் களத்தில் பரபரப்பு!

October 6, 2026

சென்னை: தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் பி. சத்தியபாமா, தேர்தல் செலவினங்களை

3

“இதென்ன தாய்மாமன் தடியடி திட்டமா?” – செவிலியர்கள் கைது நடவடிக்கைக்கு உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்!

October 6, 2026

சென்னை: பணி நிரந்தரம், வேலைப் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திச் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டமைக்குத்

2

“100 பவுன் நகையைப் பறிகொடுத்த யூடியூபர் மதுமிதா மீது நகைத்திருட்டு வழக்கு!” – 89 வயது முதியவர் அளித்த புகாரின் பேரில் அதிரடி நடவடிக்கை!

October 6, 2026

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் மதுமிதா மீது, 89 வயது முதியவர் ஒருவரிடம் 5 பவுன் தங்க

1

“மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!” – கடந்த தேர்தலை விடக் குறைவு; அக்டோபர் 9-ல் வாக்கு எண்ணிக்கை!

October 6, 2026

“‘சென்னை: தமிழ்நாட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தனித் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு

839012679_1123462123527488_138327752421248103_n

பாரிஸில் பாரிய தீ விபத்தில் நாவாந்துறையைச் சேர்ந்தவர் உயிரிழப்பு!

October 6, 2026

பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் La Courneuve பகுதியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில், இலங்கைத் தமிழர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக

matala

2013 இல் மத்தல விமானநிலையத்தின் ஊடாக இலங்கைக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பெருமளவு தங்கம் – வெளியாகின புதிய விபரங்கள்

October 6, 2026

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது பதவிக்காலத்தில் – 2013ம் ஆண்டு மத்தல விமானநிலையத்தினை பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட பாரிய கடத்தல்

Kahandagama-drugs-lords

பொதுஜனபெரமுனவின் முன்னாள் மாநகரசபை உறுப்பினருக்கு போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்பு- விசாரணையில் தகவல்

October 6, 2026

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் கொழும்பு மாநகரசபை முன்னாள் உறுப்பினர் மகிந்தஹகந்தகமவிற்கு துபாய் உட்பட வெளிநாடுகளில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பிருந்தமை அவர்

suresh11

சுரேஷ் சலே வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் குற்றப்புலனாய்வுத் திணைக்களக் காவலுக்கு மாற்றப்படலாம் – நீதிமன்றத்திற்குச் சட்டமா அதிபர் அறிவிப்பு

October 6, 2026

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, மருத்துவக் குழுவொன்றின் பரிசீலனையின் பின்னர் வைத்தியசாலைப்