யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடைபெற்ற சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் “Peace Summit & Conference 2026”

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் ஏற்பாட்டில் “Peace Summit & Conference 2026” சர்வதேச மாநாடு சிறப்பாக நடைபெற்றது.

2026 செப்டம்பர் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்ற இம்மாநாடு, பல்கலைக்கழகத்தில் இரண்டாவது முறையாக இடம்பெற்றது.

குறிப்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களை மையப்படுத்தி, உலக சமாதானம், மனித உரிமைகள், சமூக நல்லிணக்கம், பெண்களின் உரிமைகள், பெண்களின் பாதுகாப்பு மற்றும் சமூக சமத்துவம் உள்ளிட்ட முக்கிய சமூக விடயங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.

மங்கள விளக்கேற்றல் மற்றும் தேசிய கீதத்துடன் நிகழ்வு ஆரம்பமானதுடன், வரவேற்பு நடனமாக பரதநாட்டிய நிகழ்வும் இடம்பெற்றது.

தொடர்ந்து வரவேற்புரை, சிறப்புரைகள், விழிப்புணர்வு உரைகள் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. குறிப்பாக பாடசாலை மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நிகழ்வில் சிறப்பிடம் பெற்றன.

இந்நிகழ்வின் பிரதம அதிதிகளாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் நாகமுத்து பிறதீபராஜா, பொறுப்பதிகாரியும் காவல் ஆய்வாளருமான சிவானந்தம் நித்தர்சன் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் பேராசிரியர் பொன். பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

“A Drug-Free Motherland – Paradise of the Future” என்ற தொனிப்பொருளின் கீழ், போதைப்பொருள் இல்லாத தாயகத்தை உருவாக்குவதன் அவசியம் தொடர்பாகவும் மாநாட்டில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

இளைஞர்கள் மற்றும் எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் பாவனையிலிருந்து பாதுகாப்பதுடன், ஆரோக்கியமானதும் பாதுகாப்பானதுமான சமூகத்தை உருவாக்குவதில் ஒவ்வொருவருக்கும் உள்ள சமூகப் பொறுப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அதேவேளை, பெண்களின் பாதுகாப்பு, பெண்களின் உரிமைகள் மற்றும் சமத்துவம் தொடர்பான விடயங்களும் வலியுறுத்தப்பட்டன.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதும், பெண்களின் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதிப்படுத்துவதும் ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பு எனவும் நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்விற்கு சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் இலங்கைத் தலைவர் A.R. அமீர்கான் தலைமை தாங்கினார். நிகழ்வை சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் யாழ். மாவட்டப் பணிப்பாளர் அப்துல் ஃபரீத் ஆரிஃப் ஒருங்கிணைத்திருந்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் நாகமுத்து பிறதீபராஜா மற்றும் பொறுப்பதிகாரியும் காவல் ஆய்வாளருமான சிவானந்தம் நித்தர்சன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் சிறப்புரைகளை வழங்கினர்.

நிகழ்வின் மற்றுமொரு முக்கிய அம்சமாக, சமூக மற்றும் மனிதநேய சேவைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருபவர்கள் பல்வேறு சிறப்பு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது, சமூகத்திற்கும் தேசத்திற்கும் ஆற்றிய சேவைகளைப் பாராட்டும் வகையில் “Man of the Nation – தேசத்தின் மனிதன்” விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டதுடன், மனிதநேயம் மற்றும் சமூக சேவையில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களுக்கு “மனித புனிதர்” விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அத்துடன், சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியுடன் புதிதாக இணைந்து செயற்பட்டு வரும் உறுப்பினர்கள் மற்றும் நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இதனிடையே, “வாழும் போதே வாழ்த்துவோம்” என்ற தொனிப்பொருளின் கீழ், சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் மூத்த உறுப்பினர் குபேர லிங்கம் ஐயா அவர்களின் நீண்டகால சமூக மற்றும் மனிதநேய சேவைகளைப் பாராட்டி, சிறப்பு கௌரவம் வழங்கப்பட்டது.

அவரைக் கௌரவிக்கும் வகையில் 50 ரூபாய் பெறுமதியான தபால் முத்திரையும் வெளியிடப்பட்டது.

மேலும், யாழ்ப்பாணக் கல்விசார் ஊழியர்கள் சார்பில் குபேர லிங்கம் ஐயாவுக்கு பொன்னாடை போர்த்தி, மலர் மாலை அணிவித்து சிறப்பு கௌரவமும் வழங்கப்பட்டது.

சமூகத்திற்கும் மனிதநேயப் பணிகளுக்கும் அவர் ஆற்றிய பங்களிப்பை பாராட்டும் வகையில் இடம்பெற்ற இந்தக் கௌரவிப்பு, நிகழ்வின் முக்கிய சிறப்பு அம்சங்களில் ஒன்றாக அமைந்தது.

இந்நிகழ்வில் சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் நிர்வாகிகள், பணிப்பாளர்கள், பிரதிப் பணிப்பாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், உறுப்பினர்கள், கல்வியாளர்கள், சமூக சேவையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

“போதை இல்லாத தாயகம் – எதிர்காலத்தின் சொர்க்கம்” மற்றும் “பெண்களின் பாதுகாப்பு – சமூகத்தின் பொறுப்பு; பெண்களின் உரிமைகள் – மனித உரிமைகள்” என்ற கருத்துக்களை முன்னிறுத்திய இம்மாநாடு, உலக சமாதானம், மனிதநேயம், மனித உரிமைகள், சமூக நல்லிணக்கம் மற்றும் பாதுகாப்பான எதிர்காலம் தொடர்பான முக்கிய செய்திகளை சமூகத்திடம் கொண்டு சென்றது.

நிகழ்வின் நிறைவில், சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் இயக்குநரும், யாழ்ப்பாண முஸ்லிம் சங்கத்தின் பொதுச் செயலாளரும், சமாதானத் தூதுவருமான அப்துல் ஃபரீத் ஆரிஃப் நன்றியுரை வழங்கினார்.

 

சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற “Peace Summit & Conference 2026”, பல்கலைக்கழக மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களை ஒன்றிணைத்து, சமாதானம், மனித உரிமைகள், பெண்களின் பாதுகாப்பு, சமூக நல்லிணக்கம் மற்றும் போதைப்பொருள் இல்லாத எதிர்காலம் உள்ளிட்ட முக்கிய சமூக நோக்கங்களை முன்னிறுத்திய நிலையில், பல்வேறு கௌரவங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நிறைவடைந்தது

images (1)

நவநீதம்பிள்ளைக்கு நோபல் பரிசு: போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்

October 9, 2026

2026ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்தினை பாதுகாப்பதற்காக தளர்வின்றி போராடியமைக்காக ஐக்கியநாடுகள் முன்னாள்

hindutamil_import_hindu_uploads_news_2023_07_22_xlarge_1061734

“மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவு!” – வெளியே தெரிந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நந்தி சிலை!

October 9, 2026

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தி சிலை வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.

vikatan_2024-10-04_jsw1i91t_WhatsApp-Image-2023-12-26-at-1.12.38-PM

“சாலைகளில் ரத்த ஆறு ஓடுகிறது… விஜய் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது!” – எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!

October 9, 2026

சென்னை: முதல்-அமைச்சர் விஜய் ஆட்சியில் கடந்த ஐந்து மாதங்களாகச் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2

“நிரந்தர முதல்-அமைச்சராக விஜய் இருப்பார்!” – அமைச்சர் என்.ஆனந்த் அதிரடிப் பேச்சு!

October 9, 2026

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மண்டல மாநாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்

parliment

உயர் நீதிமன்றத் தீர்மானம் அறிவிப்பு!

October 9, 2026

நச்சுக்கள், அபின்கள் மற்றும் ஆபத்தான மருந்துகள் கட்டளைச் சட்டத்தின் இரண்டு திருத்தச் சட்டமூலங்களையும் சாதாரண பெரும்பான்மையால் நிறைவேற்ற முடியும் என

thu

சட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்ற பெயரில் புத்தசாசனத்தின் கௌரவத்தைச் சீர்குலைக்க முடியாது!

October 9, 2026

சிறைச்சாலையிலுள்ள கலபொடஅத்தே ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சம்பவமானது மிகவும் பாரதூரமானது என ‘தேசத்தைக் காக்கும்

kal

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு!

October 9, 2026

களுத்துறை, நாகொட பகுதியில் உணவகம் ஒன்றில் இன்று (9) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில்

images - 2026-10-09T112650.899

“மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக தொடர்ந்து முன்னிலை!” – வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு

October 9, 2026

தமிழக அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று

tvkmadhuranthagam-down-28521791085533

“மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல் முடிவுகள் – 11 மணி நிலவரம்!” – தவெக வேட்பாளர்கள் முன்னிலை!

October 9, 2026

சென்னை: தமிழகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக

6fe740e3-d63a-4122-8ada-4e8754dc10ee

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடைபெற்ற சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் “Peace Summit & Conference 2026”

October 9, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் ஏற்பாட்டில் “Peace Summit & Conference 2026” சர்வதேச மாநாடு

gs

கிராமத்திற்குள்ளேயே பொருளாதார வாய்ப்பு; 1,540 கிராம உத்தியோகத்தர்களுக்கு நியமனங்கள்

October 9, 2026

தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் சமூகப் பயணமானது கிராமிய மக்களை நகரங்களுக்கு அழைத்து வராமல், கிராமத்திற்குள்ளேயே பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கி,

tru

இடைத்தேர்தலுக்கு முன் ஈரான் மீது தாக்குதல் இல்லை – ட்ரம்ப்

October 9, 2026

எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலுக்கு முன்பு எந்த நேரத்திலும் அமெரிக்கா ஈரானைத் தாக்காது என அமெரிக்க