மொராக்கோவில் இருந்து ஸ்பெயினுக்குள் கடல் வழியாக நுழைய முயன்ற 34 பேர் பலி

மொராக்கோவில் இருந்து ஸ்பெயினின் சியூட்டா எல்லைக்குள் பல்லாயிரக்கணக்கானோர் நுழைய முயன்றபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளு நிகழ்வு, நெரிசல், கடலில் மூழ்கியமை முதலான காரணங்களால் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் அமைந்துள்ள ஸ்பெயினும், ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மொராக்கோ நாடும் அருகருகே அமைந்துள்ளன. இரு நாடுகளுக்கு இடையிலான மிகக் குறைந்த தூரமே, அதாவது 13 கிலோ மீற்றர் இடைவெளி மட்டும்தான். ஸ்பெயினில் உள்ள சியூட்டா தான் மொராக்கோவுக்கு அருகிலுள்ள எல்லைப் பகுதி ஆகும்.

முஸ்லிம் நாடான மொராக்காவில் வறுமை, வேலையின்மை போன்றவை காரணாக ஏராளமானோர் புலம்பெயர்ந்து ஸ்பெயினுக்குள் வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக மொராக்கோ நாட்டு மக்கள் சட்டவிரோதமாக ஸ்பெயினுக்குள் புலம் பெயர்ந்து வருகின்றனர்.

மொராக்கோ மக்களை உடனடியாக திருப்பி அனுப்பக் கூடாது என்று ஸ்பெயின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஸ்பெயின் அரசு உள்ளது.

இதனிடையே, மொராக்கோ நாட்டின் ஃபனிடெக், பெலியூன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 70,000 பேர் நேற்று முன்தினம் தரை மற்றும் கடல் வழியாக ஸ்பெயின் எல்லையான சியூட்டாவை நோக்கி ஒரே நாளில் குவிந்துவிட்டனர்.

ஸ்பெயின் நாட்டு உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக இருப்பதைப் பயன்படுத்திக்கொண்டு ஒரே நாளில் ஏராளமான மக்கள் சியூட்டா வழியாக ஸ்பெயினுக்குள் நுழைய முயன்றனர். பொலிஸாரின் கட்டுப்பாட்டையும் மீறி அவர்கள் கடல்வழியாக நுழைந்தனர். நிலைமையைக் கட்டுப்படுத்த ஸ்பெயின் அரசு எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்களையும், போலீஸாரைம் அதிக அளவில் குவித்திருந்தது.

ஸ்பெயின் எல்லைக்குள் வரும் மொராக்கோ மக்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்து பொலிஸார் விரட்ட முயன்றனர். இருந்தபோதும் 64,000-க்கும் அதிகமானோர் சியூட்டா எல்லையைக் கடந்து ஸ்பெயினுக்குள் சென்றுவிட்டதாக ஸ்பெயின் நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தின்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு, நெரிசல், கடல் நீரில் மூழ்கியது போன்ற காரணங்களால் மொராக்கோவைச் சேர்ந்த 34 பேர் உயிரிழந்து விட்டனர். உயிரிழந்தவர்களின் சடலங்களை போலீஸார் மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பியுள்ளனர். மேலும், மொராக்கோவில் இருந்து சியூட்டா வழியாக ஸ்பெயினுக்குள் நுழைவதைத் தடுக்க ஸ்பெயின் அரசு தீவிர கண்காணிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எல்லைப் பகுதியில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சியூட்டா பகுதியை நோக்கி வரும் பொதுமக்களைத் தடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

mahara in

மஹர சிறைச்சாலையில் பதற்றமான சூழ்நிலை; கைதிகள் பலர் காயம்

August 1, 2026

மஹர சிறைச்சாலை வளாகத்தினுள் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலைமையைக் கண்டறிந்து அதைக் கட்டுப்படுத்துவதற்காகச் சிறப்பு பொலிஸ் குழுக்கள் பல

crime

நோர்த் யார்க்கில் (North York) இரவில் நடந்த கத்திக்குத்து: தீவிர காயங்களுடன் நபர் வைத்தியசாலையில் அனுமதி

August 1, 2026

சனிக்கிழமை அதிகாலை நோர்த் யார்க்கில் (North York) இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தையடுத்து, நபர் ஒருவர் அவசரமாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

AWUN5RGOHZEHZG4Y54UHWA4OKA

மிசிசாக்காவில் (Mississauga) நடந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் நபர் ஒருவர் பலத்த காயம்; தப்பிச் சென்ற சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்

August 1, 2026

சனிக்கிழமை (ஆகஸ்ட் 1, 2026) அதிகாலை மிசிசாக்காவில் நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி பலத்த காயமடைந்ததைத் தொடர்ந்து, பீல் பிராந்திய

2

மேகதாது அணைக்காக காடுகள் அழிக்கப்படுவதை எதிர்ப்பாரா ராகுல்காந்தி? – கேள்வியெழுப்பிய அன்புமணி ராமதாஸ்!

August 1, 2026

சென்னை: மேகதாது அணைக்காகக் காடுகள் அழிக்கப்படுவதை ராகுல் காந்தி எதிர்ப்பாரா என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சரமாரியாகக் கேள்வி

1

ஆவின் பால் பாக்கெட்டுகளில் ரசாயன நெடி: 160 பிலிம் ரோல்களை அதிரடியாக திருப்பி அனுப்பிய மதுரை ஆவின்!

August 1, 2026

மதுரை: மதுரை மாவட்டத்தில் ஆவின் பால் பாக்கெட்டுகளில் பிளாஸ்டிக் மற்றும் ரசாயன நெடி வீசியதையடுத்து, 160 பாலித்தீன் பிலிம் ரோல்களை

nilakshan

ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்‌சனின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல்

August 1, 2026

சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்‌சனின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது. யாழ். ஊடக

752391120_122112474525381022_3499782480351502009_n

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டம்; செம்மணி எழுச்சி – அணையா தீபம் விழித்தெழு தமிழா!

August 1, 2026

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டமான ‘விழித்தெழு தமிழா!’ நிகழ்வு எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது. செம்மணி சித்துப்பாத்தி மனிதப்

court-judge-hammer-gavel-696x398

சுதுமலை அம்மன் கோவில் வழக்கு முழுமையாகத் தள்ளுபடி – யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

August 1, 2026

யாழ்ப்பாணம், சுதுமலை அம்மன் ஆலயத் திருப்பணி வேலைகளை உடனடியாக நிறுத்துமாறும், அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்களை இடித்தழிக்குமாறும் கோரி ஐந்து தனிநபர்களால்

Uthaya

சானி அபேசேகர, ரவி செனவிரத்னவுக்கு எதிராக வழக்குத் தொடுத்தால் இருவருக்கும் மரண தண்டனை நிச்சயம் – உதய கம்மன்பில

August 1, 2026

கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சானி அபேசேகர மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

acci main

புளியங்குளத்தில் ரயிலில் மோதி நபரொருவர் பலி!

August 1, 2026

புளியங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரயில் பாதையின் 290ஆம் கட்டைக்கு அருகில் ரயிலில் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார்

tr

பரிசுப் பொதியில் 10 கோடி பெறுமதியான போதைப்பொருள்?

August 1, 2026

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்த வான்வழிப் சரக்குத் தொகுதியொன்றில் இருந்து, ரூபா 10 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களைக் கட்டுநாயக்க விமான

bl

’பாரமிதா’ இரத்ததான முகாம்

August 1, 2026

ஜனாதிபதி அலுவலக நலன்புரிச் சங்கம், தேசிய குருதியேற்றல் சேவையுடன் இணைந்து முதன்முறையாக ஏற்பாடு செய்த ‘பாரமிதா’ இரத்ததான முகாம் நேற்று