மூக்குத்தி அம்மன் 2 வெளியீடு எப்போது?

2020-இல் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வரும் நிலையில், அப்படத்தின் வெளியீடு எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது

இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே. பாலாஜி மற்றும் என்.ஜே. சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி, கடந்த 2020-ஆம் ஆண்டு நேரடியாக ஓ.டி.டியில் வெளியானது மூக்குத்தி அம்மன். இப்படத்தை வேல்ஸ் நிறுவனத்தின் மூலம் ஐசரி கே. கணேஷ் தயாரித்திருந்தார். மக்களிடையே பேராதரவு பெற்று இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கடந்த ஆண்டு மூக்குத்தி அம்மன் 2 அறிவிப்பு வெளியானது. வேல்ஸ் நிறுவனம் மற்றும் நயன்தாரா & விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். ஆர்.ஜே. பாலாஜிக்கு பதிலாக இப்படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்குகிறார்.

இப்படத்தில் ரெஜினா, சினேகா, குஷ்பூ, ஊர்வசி, யோகி பாபு, துனியா விஜய், மைனா நந்தினி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறார்கள். மேலும், ஹிப் ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைக்கிறார். மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், போஸ்ட் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் இப்படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து காத்திருப்பது போலவே, நடிகை நயன்தாராவும் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்து காத்திருக்கிறாராம். காரணம், இப்படத்தில் பிரம்மாண்டம், உணர்ச்சிபூர்வமான விஷயங்கள், நகைச்சுவை என பல அம்சங்கள் ரசிகர்களை கண்டிப்பாக திருப்திப்படுத்தும் என்றும், மேலும் தனது திரை வாழ்க்கையில் இப்படம் மிகப்பெரிய திருப்பத்தை உண்டாக்கும் என்பதால் ஆவலுடன் காத்திருப்பதாக திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

maalaimalar_import_h-upload_2025_11_04_21098709-ponmudi

“பொன்முடிக்கு மீண்டும் சிக்கல்?” – செம்மண் குவாரி வழக்கில் உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

November 24, 2026

சென்னை: செம்மண் வெட்டி எடுத்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்துக் காவல்துறை தாக்கல் செய்த மனுவுக்கு

dailythanthi_2026-11-24_llb7aoxx_mane

“கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ மீதான வழக்கு!” – விசாரணை மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்!

November 24, 2026

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகத் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில்,

photo-collage.png

கனமழையிலும் உணர்வுபூர்வமாக மாவீரர் தின நினைவேந்தல்

November 24, 2026

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பொற்கேணி பிள்ளையார் கோயில் முன்றலில் மாவீரர்களை நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வு இன்று (24.11.2026) கொட்டும் கனமழைக்கு

muji

இலங்கையில் மொசாட் உளவாளிகளா?

November 24, 2026

இலங்கையில் இஸ்ரேலிய நடவடிக்கைகளுக்கும் மொசாட் உளவாளிகளுக்கும் அனுமதி வழங்குவது நாட்டின் தேசிய பாதுகாப்பு, எதிர்காலம் மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாக

robb

கொழும்பில் தங்க நகைக் கொள்ளை

November 24, 2026

கொழும்பில் உள்ள தங்க நகைக் கடைகளில் சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைத் திருடியதாகக் கூறப்படும் 37

IMG_2560

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான விசேட அறிவித்தல்

November 24, 2026

இலங்கையின் இலத்திரனியல் பயண அனுமதிப் பத்திரம் வழங்கும் உத்தியோகபூர்வ இணையதளம் தற்காலிகமாகச் செயலிழந்துள்ளதாகக் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

IMG_2585

நாட்டின் காற்றின் தரம் ஆரோக்கியமான நிலைக்குத் திரும்பியது

November 24, 2026

நாட்டின் வளிமண்டலத் தரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த இந்தியாவின் நச்சுப் புகை, வடகிழக்குப் பருவக்காற்றுடன் இணைந்து விலகிச் சென்றுள்ளதாக மத்திய சுற்றாடல்

IMG_2584

தெற்காசியாவின் முதலாவது ‘எயார் டோம்’ கட்டமைப்பு கொழும்பு துறைமுக நகரில்!

November 24, 2026

தெற்காசியாவின் முதலாவது ‘எயார் டோம்’ (Air Dome) கட்டமைப்பு கொழும்பு துறைமுக நகரில் நிறுவப்பட்டுள்ளது. 4,000 பேர் வரை பங்கேற்கக்கூடிய

IMG_2583

திருமண விளம்பரங்கள் குறித்து அரசாங்கம் அவதானம்!

November 24, 2026

சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளியாகும் மூடநம்பிக்கை விளம்பரங்கள், சமூகத்தைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் உள்ளடக்கங்கள் மற்றும் வன்முறையை

IMG_2582

இலங்கை அகதிகள் உருக்கமான கோரிக்கை!

November 24, 2026

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது நாட்டைவிட்டு வெளியேறி, இந்தோனேசியாவில் கடந்த 15 ஆண்டுகளாகப் பல இன்னல்களுக்கு மத்தியில் தங்கவைக்கப்பட்டுள்ள

vikatan_2026-11-23_ubr0qbgo_New-Project-44

“அமைச்சர் ராஜ்மோகன் மீது வழக்குப்பதிய முன் அனுமதி வேண்டும்!” – ஆளுநருக்கு திமுக கடிதம்!

November 24, 2026

சென்னை: தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவிக்கு ரூ.5 கோடி கொடுக்க ஒருவர் முன்வந்ததாகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

pil

இரண்டு பிள்ளைகளுடன் உயிரை மாய்த்துக் கொள்ள முற்பட்ட நபரால் பரபரப்பு

November 24, 2026

தமது இரண்டு குழந்தைகளுடன் மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திலிருந்து நபர் ஒருவர் வாவியில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்ள முற்பட்ட சம்பவத்தால்