“முழு நாடுமே ஒன்றாக” 99,000-க்கும் அதிகமான சந்தேகநபர்கள் கைது

நாடு முழுவதும் போதைப்பொருள் விநியோகத்தை முடக்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள “முழு நாடுமே ஒன்றாக” தேசிய நடவடிக்கையின் கீழ் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களின் எண்ணிக்கை 99,000-ஐத் தாண்டியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், இந்த நடவடிக்கையின் கீழ் இதுவரை 99,540 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், குறித்த நடவடிக்கையின் ஊடாக 137 சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் 1,973 சந்தேகநபர்களுக்கு எதிராக தடுப்பு காவல் உத்தரவுகளைப் பெறவும், 1,639 பேரை புனர்வாழ்விற்காக அனுப்பி வைக்கவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, இந்த சுற்றிவளைப்புகளின் போது 524 கிலோ 906 கிராம் ஹெரோயின் மற்றும் 1,416 கிலோ 41 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவை தவிர 11 கிலோ 674 கிராம் கொக்கேய்ன், 199 கிலோ 864 கிராம் குஷ் போதைப்பொருள், 121 கிலோ 962 கிராம் ஹஷீஸ் மற்றும் 932,976 போதைப்பொருள் மாத்திரைகள் உள்ளிட்ட பெருமளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 100,247 சுற்றிவளைப்புகளின் ஊடாக இந்த சந்தேகநபர்கள் சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, நேற்றைய தினம் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய நடவடிக்கையின் கீழ் 764 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

766 சுற்றிவளைப்புகளின் ஊடாகவே இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்புக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள விசேட நடவடிக்கைத் தொடரின் கீழ் நேற்றைய (19) தினமும் பல சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த நடவடிக்கையின் கீழ் 552 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதில் குற்றங்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 17 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 259 பேரும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 164 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், மதுபோதையில் வாகனம் செலுத்திய 289 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் 55 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் 3,997 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் பொலிஸார் இதன்போது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

jud

சட்டத்தரணிக்கு 12 வருட சிறைத்தண்டனை

March 5, 2026

போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12

olugala

மோசடி ஒழிப்புப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

March 5, 2026

வலான மோசடி ஒழிப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக ASP ஓலுகல இன்று கடமையேற்பு! பாணந்துறை, வலான மத்திய ஊழல் ஒழிப்புச்

un

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. கடும் கண்டனம்

March 5, 2026

போர் நிலைமைக்கு மத்தியில் ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன

Car

கனேடிய பொதுச் சேவை சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தார் பிரதமர் மார்க் கார்னி!

March 5, 2026

னேடியப் பிரதமர் மார் கார்னி பொது சேவையின் சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அரசாங்க இயந்திரத்தில் தனது அடையாளத்தைப்

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த

cen

ட்ரம்பைக் கட்டுப்படுத்தும் பிரேரணை தோல்வி!

March 5, 2026

ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு செனட் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை

he

கரடியனாறு பகுதியில் கனரக வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார்

March 5, 2026

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிச் சென்ற கனகர வாகனம், பொலிஸாரின் தடையை மீறி நிறுத்தாமல்,

ch

உயர் தர வளர்ச்சிக்கான புதிய சமிக்ஞைகளை வெளியிடவுள்ள சீனா

March 5, 2026

வருடாந்திர தேசிய “Two Sessions” கூட்டங்கள் நெருங்கி வரும் நிலையில், சீனா தனது பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்துக்கான புதிய

one

மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு

March 5, 2026

நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் அழிவுகரமான சமூகப் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில், “நாடே ஒன்றாக” எனும் தேசிய பணித்திட்டத்தின் கீழ்

veth

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுங்கள் – ஆளுநர் பணிப்பு

March 5, 2026

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை எவ்வளவு விரைவாக நிறைவு செய்ய முடியுமோ அவ்வளவு துரிதமாக நிறைவு செய்யுமாறும், அதற்காகத்