முல்லைத்தீவு கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துக; கடற்றொழில் அமைச்சரிடம் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து

தற்போது முல்லைத்தீவுக் கடற்பரப்பில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆகியோரிடம் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் குறித்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கடற்படை மற்றும் துறைசார்ந்த உரிய அதிகாரிகளுக்கு கடற்றொழில் அமைச்சரும், பிரதி அமைச்சரும் உடனடியாக உத்தரவிட்டுள்ளனர்.
பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சிற்குரிய அலுவலகத்தில் 09.07.2026நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இவ்வாறு சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.
இந்நிலையில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துமாறு நாமும் தொடர்ச்சியாக பராளுமன்றிலும், கடற்றொழில் அமைச்சரிடமும், உரிய துறைசார்ந்த தரப்பினரிடமும் வலியுறுத்திவருகின்றோம்.
அந்தவகையில் முல்லைத்தீவு கடற்பரப்பில் அண்மை நாட்களாக வெளிச்சம்பாய்ச்சி மீன்பிடித்தல், சுருக்குவலை, டைனமெட் வெடிவைத்து மீன்பிடித்தல் உள்ளிட்ட சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்துக் காணப்படுவதாக 09.07.2026நேற்று முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என்னிடம் முறையிட்டிருந்தனர்.
அவ்வாறு சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் முல்லைத்தீவுக் கடற்பரப்பில் இடம்பெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் புகைப்படங்கள், காணொளிகள் உள்ளிட்டவற்றையும் ஆதாரங்களாக தம்மால் சமர்ப்பிக்கமுடியுமெனவும் கடற்றொழில் அமைப்புக்களின் பிரதிநிதிகளால் என்னிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இத்தகைய சூழலில் உடனடியாக பாராளுமன்றில் கடற்றொழில் அமைச்சருக்குரிய அலுவலகத்திற்குச் சென்று கடற்றொழில் அமைச்சர் மற்றும் கடற்றொழில் பிரதி அமைச்சர் ஆகியோரிடம் குறித்த சட்டவிரோத கடற்றொழில் செய்றபாடுகள் தொடர்பாக விரிவாக எடுத்துக்கூறியிருந்தேன்.
குறிப்பாக சிறுதொழிலாளர்கள் படும் துன்பங்களையும், வேதனைகளையும் கடற்றொழில் அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோரது கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளேன்.
இவ்வாறு சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகரித்திருப்பதால், சிறு தொழிலாளர்கள் கடற்றொழில் செய்ய முடியாத நிலை காணப்படுவதை அவர்களிடம் சுட்டிக்காட்டியிருந்தேன்.
சட்டவிரோதிகள் மாத்திரம்தான் கடற்றொழில் செய்யமுடியுமா எனவும் இதன்போது அவர்களிடம் கேள்வி எழுப்பியிருந்தேன்.
அத்தோடு கடற்படையினர் கடலில் ரோந்து நடவடிக்கைகளை மேற்கோள்ளும்போது சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை மேற்கொள்பவர்கள்மீது நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்வதில்லை எனவும், மாறாக சட்டமுறைகளுக்கு உட்பட்டு கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற சிறுதொழிலாளர்ககளிடம் அனுமதிப்பத்திரங்கள் இருக்கின்றதா என பலதரப்பட்ட விசாரணைகளை மேற்கொள்வதாக கடற்றொழிலாளர்கள் என்னிடம் முறையிட்டிருந்தனர். அதனை நான் கடற்றொழில் அமைச்சருக்கும் பிரதி அமைச்சருக்கும் தெரியப்படுத்தியிருந்தேன்.
அதேவேளை இத்தகைய சட்டவிரோத கடற்றொழிலாளர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தேன்.
இந்நிலையில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை நிறுத்துமாறு தாமும் தொடர்ந்து கூறிவருவதாகவும், அவ்வாறான சட்டவிரோத சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் தம்மால் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் இதன்போது கடற்றொழில் அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோரால் என்னிடம் தெரிவிக்கப்பட்டடிருந்தது.
அத்தோடு இவ்வாறாக முல்லைத்தீவு கடற்பரப்பில் தற்போது அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கடற்படையினருக்கும், துறைசார் திணைக்கள அதிகாரிகளுக்கும் எனக்கு முன்பாகவே கடற்றொழில் அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோரால் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்துக் காணப்படுவதை உறுதிப்படுத்தும்வகையில் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை 10.07.2026 கடற்றொழில் அமைச்சரிடமும், பிரதி அமைச்சரிடமும் சமர்ப்பிப்பதாகக் கூறிவிட்டு வந்திருக்கின்றேன்.
அந்தவகையில் இத்தகைய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளுக்கெதிராக விரைவில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கின்றேன் – என்றார்
4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது