முன்னாள் போராளிகளின் புதிய ஜனநாயக அரசியல் பயணம் – “தாயக அரசியல் துறை” இன்று ஆரம்பம்

வடக்கு–கிழக்கு
தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் எதிர்கால அரசியல் இலக்குகளை ஜனநாயக வழிமுறைகளின் ஊடாக முன்னெடுப்பதற்காக “தாயக அரசியல் துறை” என்ற புதிய ஜனநாயக மக்கள் அரசியல் இயக்கம் இன்று ஆரம்பிக்கப்படுகிறது.
இது தொடர்பில் குறித்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் செயலாளர்நாயகமுமான செ. அரவிந்தன் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த காலத்தில் ஆயுதப் போராட்டத்தின் வழியில் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடிய முன்னாள் போராளிகள், தமது வரலாற்று அனுபவங்களையும் அரசியல் உணர்வுகளையும் அடிப்படையாகக் கொண்டு, இனிவரும் காலத்தில் ஜனநாயக அரசியலை தமது அரசியல் கருவியாகக் கொண்டு மக்களுடன் இணைந்து செயலாற்றுவதற்கு தீர்மானித்துள்ளனர்.
இது கடந்த காலத்தை மறுப்பதற்கான முயற்சி அல்ல. மாறாக, கடந்த கால அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டு, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை ஜனநாயக வழியில் முன்னெடுக்கும் புதிய அரசியல் பாதையின் தொடக்கமாகும்.
மக்கள் மயமான அரசியல் இயக்கம்
தாயக அரசியல் துறை முன்னாள் போராளிகளை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாக இல்லாமல், தமிழ் மக்களின் அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒன்றிணைக்கும் மக்கள் மயமான அரசியல் இயக்கமாக வளர்த்தெடுக்கப்படும்.
இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில் முனைவோர், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் பங்களிப்பையும் ஒன்றிணைத்து, மக்களின் அரசியல் பங்கேற்பை வலுப்படுத்துவதே எமது நோக்கமாகும்.
எமது அரசியல் அடித்தளம்
தாயகம் – தன்னாட்சி – சுயநிர்ணயம் – தமிழ் தேசியம் தமிழ் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு உரிமைகளை பாதுகாப்பதுடன், வடக்கு–கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் தொடர்பான தீர்வுகளை ஜனநாயக ரீதியில் முன்னெடுப்பதற்கு தாயக அரசியல் துறை செயற்படும்.
மக்களின் வாக்குரிமை மற்றும் ஜனநாயக பங்கேற்பை மாற்றத்திற்கான முக்கிய கருவியாகக் கொண்டு, எதிர்காலத்தில் தேர்தல் அரசியலிலும் பங்கேற்று, மக்களிடமிருந்து நேரடியான அரசியல் ஆணையைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
புதிய தலைமுறைக்கான புதிய அரசியல் பாதை “ஆயுதப் போராட்டத்தின் வழியில் நின்ற நாம், இனி ஜனநாயக அரசியலை ஆயுதமாகக் கொண்டு மக்களுடன் இணைந்து பயணிப்போம்.”
எமது அரசியல் பயணம் எந்தவொரு தனிநபரின் அதிகாரத்திற்காகவும் அல்ல. அது தமிழ் மக்களின் உரிமைகள், கண்ணியம், அரசியல் பங்கேற்பு மற்றும் எதிர்கால தலைமுறைகளின் நல்வாழ்வை மையமாகக் கொண்டதாக இருக்கும்.
தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் அரசியல் எதிர்காலத்திற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்ற விரும்பும் அனைவரையும் இந்தப் புதிய அரசியல் பயணத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம்.
mansari

மண்சரிவு எச்சரிக்கை

September 16, 2026

கொழும்பு, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு விழிப்புணர்வு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,

ff

செயற்கை நுண்ணறிவின் AI ஆபத்தானது: எலான் மஸ்க் கடும் எச்சரிக்கை

September 16, 2026

செயற்கை நுண்ணறிவின் (AI) விரைவான வளர்ச்சி குறித்து எலான் மஸ்க் இதுவரை விடுத்துள்ள மிக வலுவான எச்சரிகைகளில் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

mas

சவூதி எரிபொருள் குழாய் முடக்கம்: மசகு எண்ணெய் விலை பீப்பாய் 108 டொலரைத் தாண்டியது

September 16, 2026

சவூதி அரேபியாவின் முக்கிய கிழக்கத்திய – மேற்கத்திய மசகு எண்ணெய் விநியோகக் குழாய்த் தொகுதி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை அடுத்து,

Harini-amarasooriya

க.பொ.த. சாதாரண தரப் பாடங்களின் எண்ணிக்கை 7 ஆகக் குறைக்க திட்டம்?

September 16, 2026

எதிர்வரும் 2031ம் ஆண்டு தொடக்கம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கையை 7 ஆகக் குறைக்க கல்வி மறுசீரமைப்பு

acc

விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் பலி

September 16, 2026

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் இரவு இடம்பெற்ற மிக மோசமான விபத்தொன்றில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

parliment

2027 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம்

September 16, 2026

2027 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், அதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு

thip

நல்லூரில் தியாக தீபம் திலீபனுக்கு வெண்கல உருவ சிலை

September 15, 2026

தியாக தீபம் திலீபனுக்கு நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் வெண்கல உருவ சிலை வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், நல்லூர் பின்

muk

முள்ளிவாய்க்கால் நினைவு வளாகத்திற்கு செல்லும் பாதையில் உள்ள நினைவுக்கல் அகற்றம்

September 15, 2026

முள்ளிவாய்க்கால் நினைவு வளாகத்திற்கு செல்லும் பாதையினை அடையாளப்படுத்தும் முகமாக புதுக்குடியிருப்பு- முல்லைத்தீவு A35 பிரதான வீதியோரத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுக்கல்லை வீதி

download

பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு செல்கிறார் அர்ச்சுனா; மஹிந்தவின் கூட்டத்தில் தன்னை ஒரு “புலி” என்றார்!

September 15, 2026

அநுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) கூட்டத்தில் தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பு தொடர்பில் கருத்து

image_e9c84944c5

காலநிலைத் தாக்கத்திற்கு முகங்கொடுக்க விசேட அமைச்சரவைக் கூட்டம்

September 15, 2026

எல்-நினோ காலநிலைத் தாக்கத்திற்கு முகங்கொடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, சுற்றாடல் அமைச்சர் டாக்டர் தம்மிக பட்டபெந்தியின் தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட

**EDS: SCREENGRAB VIA PTI VIDEOS** Chennai: VCK leader Thol Thirumavalavan talks to the media, after his party received a request from TVK for support to form the Tamil Nadu government following the recent Assembly elections, in Chennai, Thursday, May 7, 2026. (PTI Photo) (PTI05_07_2026_000160B)

“தமிழகத்தில் மின்வெட்டு இருப்பது உண்மைதான்; தவெக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!” – விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்

September 15, 2026

திருச்சி: திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் (விசிக) தலைவர் தொல். திருமாவளவன், தமிழகத்தில் நிலவும் மின்தட்டுப்பாடு, திமுகவின்

2

அண்ணா பிறந்தநாள் பேரணிக்கு அனுமதி மறுப்பு: தவெக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்!

September 15, 2026

சென்னை: வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் நடைபெறவிருந்த பேரணிக்குக் காவல்துறை அனுமதி மறுத்துள்ளதற்கு,