ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை திசைதிருப்பியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் (SIS) பணிப்பாளர் சுரேஷ் சாலி மற்றும் ஏனைய இரண்டு சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் இசுறு நெத்திகுமார முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.
சந்தேக நபரான சுரேஷ் சாலி தற்போது 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த வழக்கின் ஏனைய இரண்டு சந்தேக நபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னைய வழக்கு விசாரணையின் போது, சந்தேக நபரான சுரேஷ் சாலி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தாலும், நீதித்துறை நடவடிக்கைகளுக்காக அவர் பகிரங்க நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்று கொழும்பு கோட்டை நீதவான் புலனாய்வு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
நீதிமன்றத்தின் அந்த உத்தரவுக்கு இணங்க, முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.