முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை

முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (11) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு கடற்றொழில் அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள மணலை அகற்றி சந்தையில் விற்பனை செய்யும் பணிக்காக கொரிய நிறுவனம் ஒன்றைத் தெரிவுசெய்து, அப்பணிகளுக்காக கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான ‘வெலிகொவ்வா’ எனும் கப்பலை குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு அந்த கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு அழுத்தம் கொடுத்தமையின் ஊடாக ‘ஊழல்’ எனும் குற்றத்தைப் புரிந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனூடாக பிரதிவாதிக்கு எதிராக 5 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. மேலும் இவ்வழக்கில் சாட்சிகளாக 13 நபர்கள் பெயரிடப்பட்டுள்ளதுடன், வழக்குப்பொருட்களாக 25 ஆவணங்களும் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் ; சிறைக்காவலர் கைது

கொழும்பு – பொரளை மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருட்களை விநியோகிக்க முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் சிறைத்துறை அதிகாரி ஒருவர், கல்கிஸ்ஸை வலயக் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

100 கிராம் ‘ஐஸ்’ (Crystal Methamphetamine) மற்றும் 20 கிராம் ஹெரோயின் போதைப்பொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 20 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கல்கஸ்ஸைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, தெஹிவளை – மெடிக்கல் ரோட்டைச் சேர்ந்த 32 வயதுடைய நபரொருவர் முதலில் போதைப்பொருள் தொகையுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, மெகசின் சிறைச்சாலையில் தண்டனை கைதியாக உள்ள ஒருவரே தமக்கு வாட்ஸ்அப் (WhatsApp) அழைப்பு மூலம் ஒரு இடத்தை அடையாளம் காட்டியதாகவும், அந்த இடத்திற்குச் சென்றே தாம் போதைப்பொருள் பொதியைப் பெற்றுக்கொண்டதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும், பொரளை – வனத்த வீதியில் வைத்து இந்த போதைப்பொருள் பொதியைப் பிறிதொரு நபரிடம் கையளிக்கவிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, போதைப்பொருளைப் பெற்றுக்கொள்ளவிருந்த நபரை மடக்கிப் பிடிப்பதற்காக, கல்கஸ்ஸை வலயக் குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியின் வழிகாட்டலின் கீழ் விசேட பொலிஸ் குழுவொன்று திட்டமிட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

ac

கோர விபத்தில் இளம் தம்பதியினர் பலி

October 10, 2026

கம்பஹா – கிரிந்திவலை 231 ஆம் இலக்க பேருந்து பாதையில், ஹேனேகம சந்தியில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர்

Arju

பிரபாகரனால் முடியாததை நீங்கள் செய்கிறீர்கள்; ஷிராந்தியை உள்ளே போட்டதற்காகத் தமிழ் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்

October 10, 2026

மஹிந்த ராஜபக்‌ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்‌ஷவைச் சிறையில் அடைத்தமைக்காகத் தமிழ் மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர்; ஆனால், நான் மகிழ்ச்சியடைய மாட்டேன். எமது

thaya

தமிழ் மக்களின் பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கத்தில்தான் கறுப்பு ஜூலை கலவரம் தோற்றுவிக்கப்பட்டது!

October 10, 2026

தமிழ் மக்களின் பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கத்தில்தான் 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரம் திட்டமிட்டுத் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால், இறுதியில்

v

பதுளை விபத்தில் விமானப்படை அதிகாரி உயிரிழப்பு

October 10, 2026

நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், இலங்கை விமானப்படை அதிகாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இலங்கை விமானப்படையின் பயிற்சிப்

3

“அவதூறு பேசிய மிருக குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடி!” – இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் விஜய் அறிக்கை!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, அவதூறு பேசிய மிருக குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடியைத் தந்துள்ளதாக

2

“கொத்து புரோட்டா போட்டுவிட்டார்கள் மக்கள்!” – தவெக வெற்றியை விமர்சித்து மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

October 9, 2026

சென்னை: ஐந்து நிமிடம் பேசினாலே கொத்து புரோட்டா போட்டுவிடுவார் என்று சொல்லப்பட்டவரை நான்கு நாட்கள் கொளுத்தும் வெயிலில் அலைய வைத்துக்

dailythanthi_2026-10-09_tw4n5oic_Untitled-6

“இடைத்தேர்தல் மாபெரும் வெற்றி!” – அமைச்சர்களுடன் வைரல் சைகை காட்டி முதலமைச்சர் விஜய் உற்சாகக் கொண்டாட்டம்!

October 9, 2026

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வெற்றியை முதலமைச்சர் விஜய் தனது அமைச்சர்களுடன் வைரல்

556

மதுபானசாலை அனுமதிக்கு எதிராக வலி. வடக்கில் போராட்டம்

October 9, 2026

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் காணப்படும் வலி. வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதை எதிர்த்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி

brand

பிராட் பிராட்ஃபோர்ட் திட்டத்துக்கு ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள் எதிர்ப்பு?

October 9, 2026

ஸ்கார்பரோவின் 12 கி.மீ பிரத்யேக பேருந்து தடங்களை நீக்க பிராட் பிராட்ஃபோர்ட் திட்டம்: ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள்

dailythanthi_2026-10-09_2ehwx7wk_shivan (1)

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. அபார வெற்றி!” – 4 மாத ஆட்சிக்குக் கிடைத்த வெற்றி என அமைச்சர்கள் பெருமிதம்!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை வீழ்த்தி த.வெ.க. வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர்.

images (1)

நவநீதம்பிள்ளைக்கு நோபல் பரிசு: போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்

October 9, 2026

2026ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்தினை பாதுகாப்பதற்காக தளர்வின்றி போராடியமைக்காக ஐக்கியநாடுகள் முன்னாள்

hindutamil_import_hindu_uploads_news_2023_07_22_xlarge_1061734

“மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவு!” – வெளியே தெரிந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நந்தி சிலை!

October 9, 2026

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தி சிலை வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.