இரத்தினபுரி – கஹவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஹவத்தக்கந்த பகுதியில் உள்ள சுரங்கக் குழி ஒன்றில் ஆண் ஒருவரின் சடலம் காண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் லெந்தொர பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த 28ஆம் திகதி ஒபநாயக்க பொலிஸ் பிரிவின் லெந்தொர பகுதியில் நபர் ஒருவர் காணாமல் போனமை தொடர்பில் ஓபநாயக்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதற்கமைய முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளுக்கமைய குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சடலம் பிரேத பரிசோதனைக்காக கஹவத்தை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து கஹவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.