மாவீரர் வாரத்தின் முதலாவது நாள் முதல் மாவீரர் லெப்டினன்ட் சங்கரின் இல்லத்தில் அஞ்சலி நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறையில் உள்ள மாவீரர் சங்கர் அவர்களது வீட்டின் முன்பாக சுடரேற்றி மலர் தூவி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவீரர் கப்டன் பண்டிதர் அவர்களின் தயார் மகேஸ்வரி அம்மா மாவீரர் நினைவு சுடரினை ஏற்றிவைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.