தொடர்ந்து 43 போட்டிகளாக தோற்காத ஸ்பெய்னுக்கு முதல் தோல்வியை இங்கிலாந்து பரிசளித்துள்ளது.
ஸ்பெய்னில் நடைபெற்ற அவ்ணியுடனான தேசங்களுக்கான லீக்கின் ஏ3 குழுப் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வென்றிருந்தது.
இறுதியாக 2024 மார்ச்சில் கொலம்பியாவிடம் தோற்றிருந்தது.
இங்கிலாந்து சார்பாக ஹரி கேன், எஸ்ரி கொன்ஸா, பென் வைட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். ஸ்பெய்ன் சார்பாக மிகேல் ஒயர்ஸபல், நிகோ வில்லியம்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை தம்நாட்டில் நடைபெற்ற இத்தாலியுடனான குழு ஏ1 போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் வென்ற பெல்ஜியம் காலிறுதிப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றது.