மீனவர் குடும்பங்களை கொக்கிளாயில் நிரந்தரமாக குடியேற்ற அனுமதிக்க முடியாது!

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு நீர்கொழும்பு உள்ளிட்ட ஏனைய வௌியிடங்களில் இருந்து காலத்திற்கு காலம் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக வந்து செல்லும் 244 மீனவர் குடும்பங்களை கொக்கிளாய் பிரதேசத்தில் நிரந்தரமாக குடியேற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் செய்யாத விடயத்தை இந்த அரசாங்கம் செய்வதை தாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழான விதிகள் மற்றும் அத்தியாவசிய பொதுச்சேவைகள் சட்டத்தின் கீழான தீர்மானம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

கொக்கிளாய் முகத்துவாரத்தில் 244 மீனவர் குடும்பங்கள், காலம் காலமாக நீர்கொழும்பில் இருந்து வந்து தற்காலிக கூடாரம் அமைத்து தமது தொழில்களை செய்வது வழக்கமாகும். அந்த குடும்பங்கள் ஒரு சில மாதங்களுக்கு வந்து தங்கிருந்து மீண்டும் தமது சொந்த ஊருக்கு திரும்புவர். இதற்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷ, கோதாபய ராஜபக்‌ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக் காலங்களிலும் இந்த குடும்பங்கள் முல்லைத்தீவில் தங்களுக்கு நிரந்தர வசிப்பிடங்களை அமைப்பதற்கு முயற்சித்த போதும், அவர்களுக்கு நிரந்திரமான இருப்பிடங்கள் இல்லாத காரணத்தினால் அது முடியாமல் போனது. இதனால் அவர்கள் அந்தந்த காலப்பகுதியில் அங்கு வந்து தொழிலில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்த அரசாங்கம் டித்வா புயலுக்கு பின்னர் அவர்களுக்கு பாதுகாப்பான வசிப்பிடம் அவசியம் என்ற போர்வையில் முதற்தடவையாக அந்த மாவட்டம் சாராத வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு நிரந்தரமாக வீடுகளை அமைப்பதற்கு மிகவும் தவறான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. அவர்களுக்கு கொக்கிளாய் வைத்தியசாலைக்கு பின்னால் கொக்கிளாய் மேற்கு கிராம சேவகர் பிரிவில் வீடுகள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது.

எங்களை பொறுத்தவரையில் இது தவறான விடயாகும். தமிழ் பிரதேசங்களில் இன விகிதாசாரத்தை மாற்ற முயற்சித்தமையினாலேயே இனப்பிரச்சினை வெடித்தது. இது இந்த அரசாங்கத்திற்கும் நன்கு தெரியும். இவ்வாறான நிலைமையில் 244 குடும்பங்களை நிரந்தமாக குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இனவாத ரீதியாக இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்கள் செயற்பட்டதென குற்றச்சாட்டுகள் முன்வைக்கும் நேரத்தில் இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்கள் செய்யாத விடயங்களை இந்த அரசாங்கம் செய்வது பொறுத்தமானது அல்ல. இதனால் இந்த விடயத்தை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கோருகின்றோம்.

இதேவேளை கொக்குத்தொடுவாய் மத்தியில் குஞ்சுக்கால்வழி என்ற பிரதேசத்தில் தமிழர்கள் உறுதிகாணிகளை வைத்துள்ள பிரதேசத்தில் தெற்கை சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு மகாவலி அபிவிருத்தி சபையின் ஊடாக 4 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளது. இது முறையற்ற வகையிலேயே நடந்துள்ளது. அந்த வர்த்தகர் மேலதிகமாக 15 ஏக்கர்காணியை பிடித்து பிரதேசத்தை ஆக்கிரமித்து உப்பளமொன்றை நடந்த முயற்சிக்கின்றார். அது தனியார் காணியே உறுதிக்காரருக்கே வழங்க வேண்டும். அந்த மண்ணுடன் தொடர்பில்லாதவருக்கு அபிவிருத்தி என்ற பெயரில் இவ்வாறு காணியை ஒதுக்குவதை அனுமதிக்க முடியாது. அங்கு மேய்ச்சல் தரைக்காக ஒதுக்கப்பட்ட காணிகள் உள்ளன. இதனால் இந்த விடயத்தை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.

naina

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய உயர் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்

June 11, 2026

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய உயர் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம்

parliment

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் உரிய விசாரணை- பிரதி சுகாதார அமைச்சர்

June 11, 2026

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் உரிய விசாரணை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பிரதி

720571922_3539434372901910_1636371394617666931_n

அம்மா, நான் அவரைப் பயமுறுத்தவே இவ்வாறு செய்தேன், சாவதற்காக அல்ல”

June 11, 2026

களுத்துறை மாவட்டம், மீவனபாலான பகுதியில் இடம்பெற்ற துயரச் சம்பவமொன்று ஒட்டுமொத்தப் பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 25 வயதுடைய ஷானிகா செவ்வந்தி

Walk-1

கனடாவில் புற்றுநோய் விழிப்புணர்வு நடைப்பயணம்; நம்பிக்கைக்காக – வாழ்க்கைக்காக நடப்போம்! உயிர்களைக் காப்போம்!

June 11, 2026

ஒரு நோயை எதிர்த்து போராடுவது மருத்துவர்களின் கடமை மட்டும் அல்ல… அது ஒவ்வொரு மனிதனின் மனிதநேயப் பொறுப்பும் கூட. புற்றுநோயால்

makkas

தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இன அழிப்பு உண்மைகளை வெளிப்படுத்திய ஜீவந்த பீரிஸின் கருத்தை வரவேற்கிறோம் – அருட்தந்தை மாக்கஸ் அடிகளார்

June 11, 2026

அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் வரலாற்றில் நடந்த அனைத்தும் இன அழிப்பு என்றும், தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இன அழிப்பு

sun

தற்போதைய நிர்வாகத்தில் சட்டத்தின் முன் அனைவரும் சமம்; செல்வாக்கால் தப்ப முடியாது

June 11, 2026

கடந்த காலங்களைப் போலன்றி, தற்போதைய நிர்வாகத்தில் சட்டம் அனைவருக்கும் சமமாக அமுல்படுத்தப்பட்டு வருவதுடன், செல்வாக்கு அல்லது அரசியல் அதிகாரம் கொண்ட

kaj

மீனவர் குடும்பங்களை கொக்கிளாயில் நிரந்தரமாக குடியேற்ற அனுமதிக்க முடியாது!

June 11, 2026

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு நீர்கொழும்பு உள்ளிட்ட ஏனைய வௌியிடங்களில் இருந்து காலத்திற்கு காலம் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக வந்து செல்லும் 244 மீனவர்

KXQH3VQHQ565YO7OI3PWRRR3JU

ஈஸ்ட் வில்லேஜில் கத்திக்குத்துச் சம்பவம்: சந்தேக நபரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்

June 11, 2026

கால்கரி (Calgary) நகரின் ஈஸ்ட் வில்லேஜ் பகுதியில் நிகழ்ந்த கத்திக்குத்துச் சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேக நபர் ஒருவரைப் போலீஸார் தீவிரமாகக்

trump june 26

கனடாவிடம் உள்ள எதுவும் நமக்குத் தேவையில்லை:’ வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க விருப்பமில்லை என டிரம்ப் அதிரடி

June 11, 2026

கனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையிலான இலவச வர்த்தக ஒப்பந்தமான ‘கனடா-அமெரிக்கா-மெக்சிகோ ஒப்பந்தம்’ (CUSMA /

calgary police

டெம்பிள் இல்லத்தில் பெண் மற்றும் குழந்தை சடலமாகக் கண்டெடுப்பு: கால்கரி போலீஸ் தகவல்

June 11, 2026

கால்கரி (Calgary) நகரின் டெம்பிள் குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்த இரண்டு மரணங்கள் குறித்து கால்கரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BAN6UJQJQVHRHJEZ3LBQDOOY6Y

கனடாவை ‘போர்வெறியர்’ என விமர்சிக்கும் ரஷ்யா; ட்ரோன் ஒப்பந்தத்திற்குப் பதிலடி கொடுக்கவும் சபதம்

June 11, 2026

உக்ரைனுடன் ட்ரோன் (ஆளில்லா விமானம்) தயாரிப்பு ஒப்பந்தம் செய்துகொண்டதற்காகக் கனடாவை “போர்வெறியர்” (Warmonger) என்று மாஸ்கோ சாடியுள்ளதுடன், உக்ரைன் தலைநகர்

721702804_122296711556194641_7490025560383065704_n

குற்றவியல் சுற்றுலாவுடன் தொடர்புடைய பிஎம்டபிள்யூ (BMW) மோசடித் திட்டம்: இரண்டு ருமேனியர்களுக்கு வலைவீச்சு

June 11, 2026

கனடாவிலிருந்து சொகுசு வாகனங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு முன்பு, பிக்கரிங் (Pickering) வாகன விற்பனையகத்திலிருந்து போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி அவற்றை