மாலைதீவு கடல் எல்லையில் புதிய விதிகள் அமுல்!

அரபுக் கடலில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக புறப்பட்டுச் செல்லும் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளை முடித்துக்கொண்டு மீண்டும் கரை திரும்பும் அனைத்து நெடுநாள் மீன்பிடிக் கலன்களும், மாலைத்தீவின் பிரத்தியேக பொருளாதார வலயத்தை (EEZ) கடக்கும்போது பின்பற்ற வேண்டிய புதிய நடைமுறைகளை கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசாந்த கஹவத்த விடுத்துள்ள விசேட அறிவிப்பில் பின்வருமாறு வலியுறுத்தியுள்ளார்.

“மாலைத்தீவு அரசாங்கத்தின் சட்டதிட்டங்களுக்கு மாறாக அந்நாட்டின் கடல் எல்லைக்குள் நுழையும் கலன்கள் மாலைத்தீவு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்படும். அவ்வாறு கைப்பற்றப்படும் கலன்களை விடுவிப்பதற்கு மாலைத்தீவு அதிகாரிகள் மிக அதிகளவிலான அபராதங்களை விதிக்கின்றனர்.

இவ்வாறான பாரிய அபராதங்களைச் செலுத்துவது கலன் உரிமையாளர்களுக்கு தாங்கிக்கொள்ள முடியாத பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்.

இத்தகைய சட்ட ரீதியான சந்தர்ப்பங்களில் தமக்காகப் பேசுவதற்கோ அல்லது தலையிடுவதற்கோ கடற்றொழில் திணைக்களத்திற்கு எவ்வித வாய்ப்பும் வழங்கப்படமாட்டாது. எனவே, அரபிக் கடலுக்குச் செல்லும் போதும் மற்றும் மீண்டும் கரை திரும்பும் போதும் அத்துறைசார் புதிய சட்டதிட்டங்களை மீனவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.”

புதிய நடைமுறையின்படி மீனவர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய விடயங்கள்:

மாலைத்தீவு கடல் எல்லைக்குள் நுழைவதற்கு குறைந்தது 96 மணித்தியாலங்களுக்கு முன்னதாக, உரிய விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து compliance@fisheries.gov.mv மற்றும் maldivestansitdfar@gmail.com ஆகிய இரண்டு மின்னஞ்சல் முகவரிகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் கலனின் பதிவுச் சான்றிதழ், வெளியேறல் படிவம் (Departure Form), ஊழியர்களின் விபரங்கள், கலனின் தெளிவான புகைப்படம் மற்றும் எல்லைக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் இடங்களைக் (Waypoints) குறிக்கும் வரைபடம் ஆகியவற்றைச் சமர்ப்பிப்பது கட்டாயமாகும்.

இந்த சட்டதிட்டங்களை மீறுவதால் ஏற்படும் நிதி மற்றும் தொழில்சார் பாதிப்புகளைத் தவிர்த்துக்கொள்ள அனைத்து கலன் உரிமையாளர்களும் மீனவர்களும் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பணிப்பாளர் நாயகம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ananda

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் விரைவில் நிறைவடையும்: அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

April 21, 2026

உயிர்த்த ஞாயிறுஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறுகிய காலத்திற்குள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்படும் என பொது பாதுகாப்பு மற்றும்

default (3)

2 நாட்களாக மருத்துவமனையில் காத்திருந்து உயிரிழந்த பூர்வீகக்குடியை சேர்ந்த பெண்: இது ஒரு ‘கொலை’ எனத் தீர்ப்பளிக்கக் கோரும் குடும்பத்தினர்

April 21, 2026

கனடாவின் ஒண்டாரியோவில் உள்ள மருத்துவமனையில் இரண்டு நாட்கள் சிகிச்சைக்காகக் காத்திருந்து, இறுதியில் முறையான கவனிப்பின்றி உயிரிழந்த பூர்வீகக்குடியை சேர்ந்த பெண்ணான

hungary pm

நெதன்யாகு ஹங்கேரிக்கு வந்தால் கைது செய்வோம்: புதிய பிரதமர் பீட்டர் மக்யார் அதிரடி

April 21, 2026

ர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) இருந்து ஹங்கேரி விலகும் முடிவை தாம் நிறுத்தப்போவதாக ஹங்கேரியின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ள பீட்டர்

Screenshot

இலங்கைக்கருகே ஈரானுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பலில் அமெரிக்கப் படைகள் அதிரடி சோதனை: பென்டகன் அறிவிப்பு

April 21, 2026

ஆசியக் கடற்பரப்பில் ஈரானிய எண்ணெய் கப்பல் (Oil Tanker) ஒன்றில் அமெரிக்கப் படைகள் ஏறிச் சோதனை நடத்தியுள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்புத்

tn-chief-electoral-officer-archana-patnaik-has-said-sir-forms-have-been-6-16-crore-people-in-tamil-nadu

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: உடனடியாக அமலுக்கு வந்த கெடுபிடிகள்! மீறினால் 2 ஆண்டு சிறை – தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

April 21, 2026

சென்னை, தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு

hwar

வடக்கு மாகாண ஆளுநருடன் யாழ். கட்டளை தளபதி சந்திப்பு

April 21, 2026

யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதியாக அண்மையில் பதவியேற்ற மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பி.கே. நவரத்ன, வடக்கு மாகாண ஆளுநர்

Diana

முன்னாள் அமைச்சர் டயனா கமகேயிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

April 21, 2026

கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு தவறான தகவல்களை வழங்கியமை மற்றும் செல்லுபடியாகும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை

heat

சிவப்பு எச்சரிக்கை!

April 21, 2026

நாளை (22) பகல் வேளையில் பல மாகாணங்களில் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலுக்கு உணரப்படும் வெப்பத்தின் அளவு ‘கவனம்

ddsfd

கடும் மழை காரணமாக சுமார் 50 தோட்ட வீடுகள் நீரில் மூழ்கின!

April 21, 2026

ஹட்டன் – டிக்கோயா பகுதியில் இன்று (21) பிற்பகல் பெய்த கடும் மழை காரணமாக, டிக்கோயா போடைஸ் தோட்டத்தின் தாழ்நிலப்பகுதிகளில்

war

இந்திய போர்க்கப்பல் கொழும்பு வந்தது

April 21, 2026

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ‘INS NIREEKSHAK’ போர்க்கப்பல், ‘கலப்பு வாயு முக்குளிப்புப் பயிற்சி’ (Mixed Gas Diving Training) திட்டத்தை

17405459651

“பிள்ளை அப்பாவுக்கு 5 கோடி கொடுக்கக்கூடாதா?” – மகன் விஜய் குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் உருக்கம்!

April 21, 2026

சென்னை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வரும் சட்டசபை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு

semm

எதிர்வரும் 27 ஆம் திகதி; செம்மணி மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள்!

April 21, 2026

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. செம்மணி மனித புதைகுழியில்