மாற்றுத்திறனாளி சமூகம் – ஜனாதிபதியின் செயலாளர் சந்திப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்ற ஒன்றியம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சமூகம் ஆகியவற்றினால் முக்கியமான 6 துறைகளின் கீழ் தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட முன்மொழிவு, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று முன்தினம் பிற்பகல் கையளிக்கப்பட்டது.

இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சமூகத்திற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டு பெருமளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமைக்காகவும், அவர்களுக்கான அணுகல் வசதிகளை மேம்படுத்துவதற்கு நிதி ஒதுக்கப்பட்டமைக்காகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாஸாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்திற்கு மாற்றுத்திறனாளிகள் சமூகத்தின் சார்பில் அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

மாற்றுத்திறனாளிகளை வலுவூட்டுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் அவர்களை சமூகத்தின் சாதாரண பங்காளிகளாக மாற்றுவது இன்றியமையாதது. அதற்காக ‘ஒன்றாக பிடி தளராது’ தேசிய கொள்கை வரைபு தயாரிக்கப்பட்டுள்ளதுடன், வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளும் அதற்கேற்பவே அமைக்கப்பட்டுள்ளதாக மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா இதன் போது தெரிவித்தார்.

அத்துடன், சுற்றுலாத் துறையில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அதிகரிப்பது மற்றும் அவர்களுக்கான அணுகல் வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. பாரம்பரியமாக மாற்றுத்திறனாளிகளை வலுவூட்டுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள பயிற்சிகள் மூலம் அவர்களுக்கு வேலைவாய்ப்பு சந்தையில் போதுமான வாய்ப்புகள் உருவாக்கப்படுவதில்லை என்பதும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளை சமூகத்தின் சம பங்காளிகளாக மாற்றுவதற்கு அரசாங்கம் பல கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதியின் செயலாளர், அதற்குத் தேவையான சுற்றறிக்கைகள் மற்றும் பணிப்புரைகளை விரைவாக வெளியிடுவதற்கும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் தெரிவித்தார்.

SPHU2A42SZGE7MVH4PDL2ITFMY

காணாமல் போன கால்கரி சிறுவன் பார்க்கர் வெல்ஸ் கடத்தப்படவில்லை; காவல்துறை தகவல்

July 27, 2026

11 வயதான பார்க்கர் வெல்ஸைக் கண்டறிவதற்கு வேறு என்னென்ன வழிமுறைகளைப் பயன்படுத்தியிருக்கலாம் என்பது குறித்து கனடாவின் காணாமல் போன குழந்தைகளுக்கான

NJBRXZLYK5F3BKA4TRRZ2H2UBA

பிஃபா உலகக் கோப்பை போட்டிகளைத் தொடர்ந்து கனடாவில்  பலர்அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பம்

July 27, 2026

2026 பிஃபா (FIFA) உலகக் கோப்பை போட்டிகளுக்காக கனடாவுக்குப் பயணம் செய்த பலர் நபர்கள், போட்டிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அந்நாட்டில்

8

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு ‘சிக்கல்’ – லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

July 27, 2026

சென்னை: கடந்த 2015-2016 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராகப் பதவி வகித்த வைத்திலிங்கம், அடுக்குமாடி வீடு

55OGDDGBRNDMDLRPGLCJT6AH5Q

கேப் பிரெட்டன் (Cape Breton) தீ விபத்து நடந்த இடத்தில் சடலம் மீட்பு; காவல்துறையினர் தீவிர விசாரணை

July 27, 2026

மெக்ஆடம்ஸ் ஏரி பகுதியில் நடந்த உயிரிழப்பை ஏற்படுத்திய தீ விபத்து குறித்து கேப் பிரெட்டன் பிராந்திய போலீசார் விசாரணை நடத்தி

7

அடையாளம் தெரியாத நபர் தொல்லை: மேயர் பிரியா பரபரப்பு புகார்!

July 27, 2026

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி மேயராக பதவி வகித்து வரும் பிரியா, தனக்கு சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்ஆப் மூலம்

6

ஆட்சிக்கு வந்த இரண்டரை மாதங்களில் ரூ.20,881 கோடி கடன்- தவெக அரசை விளாசிய கீதாஜீவன்!

July 27, 2026

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் திமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்

ED5JQPYN5NF6XDCAHMETPYHFMM

காணாமல் போன 23 வயது டொராண்டோ பெண்ணைத் தேட கட்டளை மையம் (Command Post) அமைப்பு

July 27, 2026

டிக்சன் மற்றும் மார்ட்டின் குரோவ் வீதிகளுக்கு அருகே கடைசியாகக் காணப்பட்ட 23 வயது பெண்ணை டொராண்டோ போலீசார் தேடி வருகின்றனர்.

AAFNGBSIVY7P5CLUU3MZCILP4M

ஆஜாக்ஸ் பூங்காவில் சிறுவர்கள் நிறைந்திருந்த விளையாட்டுப் பகுதியில் காரை ஓட்டிச் சென்றதாக நபர் மீது குற்றம்சாட்டப்பட்டு வழக்குப்பதிவு

July 27, 2026

இம்மாத தொடக்கத்தில், ஆஜாக்ஸ் (Ajax) பகுதியிலுள்ள பூங்கா ஒன்றில் சிறுவர்கள் நிறைந்திருந்த விளையாட்டுப் பகுதியிலும் நடைபாதைகளிலும் காரை ஆபத்தான முறையில்

XUP2KI6NKFC6BB6QNVCW5Y4UCQ

அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு; அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

July 27, 2026

அமெரிக்க தூதரகத்திற்கு அருகே அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை திங்கட்கிழமை அதிகாலை அமெரிக்க தூதரகத்திற்கு

Rev.ASirisumana-263x263

யுத்த காலத்தில் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க காவி உடையும் பிக்குகளின் தியாகமும் முக்கிய பங்கு வகித்தது – அகலகட சிறிசுமண தேரர்

July 27, 2026

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்ட காலத்தில் நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்துவதில் பௌத்த பிக்குகளும், காவி உடையும்

5

காமன்வெல்த் போட்டியில் சாதித்த தமிழ்நாட்டை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி!

July 27, 2026

ஹைதராபாத்: கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு தொடரில் பளுதூக்கும் போட்டியில் இந்தியாவை சேர்ந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி

missing per fa

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சர்வதேச மாநாடு: யாழ்ப்பாணத்தில் ஓகஸ்ட் 30இல் நடத்த ஏற்பாடு!

July 27, 2026

இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான வரும் ஓகஸ்ட் 30ஆம் திகதியன்று யாழ்ப்பாணத்தில் பிரமாண்ட சர்வதேச மாநாடு ஒன்றை