தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) 11 ஆவது மாநாட்டை எதிர்வரும் மார்ச் மாதம் 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடாத்துவதற்கு கட்சியின் மத்திய குழுதீர்மானித்துள்ளது.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) மத்திய குழுவின் இறுதிக்கூட்டம் சனிக்கிழமை (14) காலை 10.00 மணிக்கு வவுனியாவில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நிர்வாக ரீதியிலான பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டதுடன், கட்சியின் மாநாட்டை நடாத்துவது குறித்தும் ஆராயப்பட்டது.
அதற்கமைய கட்சியின் 11 ஆவது மாநாட்டை எதிர்வரும் மார்ச் மாதம் 13, 14, 15 ஆம் திகதிகளில் வவுனியாவில் நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டதுடன், அதனை முன்னிறுத்திய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
மேலும் இம்மாநாட்டைத் தொடர்ந்து ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியைப் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் தமிழ்த்தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான சாத்தியம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இம்மத்திய குழுக்கூட்டத்தில் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.