மயிலத்தமடு–மாதவனையில் மீண்டும் பசு கொலை! துப்பாக்கியால் சுடப்பட்டு தோல் உரிக்கப்பட்ட நிலையில் பசு மீட்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கால்நடைகள் மீதான வன்முறைகளின் தொடர்ச்சியாக,  மாணிக்கம் வடிவேல் என்பவருக்குச் சொந்தமான பசு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டு, தோல் உரிக்கப்பட்ட நிலையில் மயிலத்தமடு பகுதியிலுள்ள குளத்துவெட்டை என்ற இடத்தில் வீசப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் கடும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து  தெரிவித்துள்ள கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் ச சிவயோகநாதன் மேலும் தெரிவித்துள்ளதாவது

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கால்நடைகள் மீதான வன்முறைகளின் தொடர்ச்சியாக, நேற்று (05.11.2026) மாணிக்கம் வடிவேல் என்பவருக்குச் சொந்தமான பசு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டு, தோல் உரிக்கப்பட்ட நிலையில் மயிலத்தமடு பகுதியிலுள்ள குளத்துவெட்டை என்ற இடத்தில் வீசப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் கடும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அரசாங்கத்தின் உறுதிமொழி என்னவாயிற்று?

கடந்த 02.11.2026 அன்று மயிலத்தமடு–மாதவனை பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் அத்துமீறல்கள் மற்றும் கால்நடைகளுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து, மேய்ச்சல் தரையைப் பாதுகாக்கக் கோரி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்னால் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், கால்நடைப் பண்ணையாளர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

அன்றைய சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர், இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதவாறு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, அடுத்த நாள் மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் அதிகாரிகள் குழுவொன்று மேற்படி பகுதிக்குச் சென்று நிலைமைகளை ஆராய்ந்துவிட்டுத் திரும்பியிருந்தது.

ஆனால், அதிகாரிகளின் விஜயத்திற்குப் பின்னரே மீண்டும் இத்தகைய சட்டவிரோதச் செயல் இடம்பெற்றிருப்பது, அரச அதிகாரிகளின் உறுதிமொழிகளின் நம்பகத்தன்மை தொடர்பில் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.

அரச அதிகாரிகளின் பொறுப்பற்ற செயற்பாடுகளே தொடரும் வன்முறைகளுக்குக் காரணம்!

மயிலத்தமடு–மாதவனை பகுதியில் இதுவரை இடம்பெற்ற கால்நடைகள் மீதான தாக்குதல்கள், துப்பாக்கிச் சூடுகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பில் அரச அதிகாரிகள் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியதன் விளைவாகவே இத்தகைய சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

இவ்விடயம் தொடர்பில் நாம் பல தடவைகள் ஊடகங்கள் வாயிலாக அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். கவனயீர்ப்புப் போராட்டங்கள், ஊடகச் சந்திப்புகள், நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் நேரடியாக அரச அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் ஆகியோருடனான சந்திப்புகள் மூலமாகவும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளோம்.

இருந்தபோதிலும், கால்நடைகள் மீதான வன்முறைகள் தொடர்வதும், பண்ணையாளர்களின் உயிருக்கும் வாழ்வாதாரத்திற்கும் பாதுகாப்பு இல்லாத நிலை நீடிப்பதும் அரசாங்கத்தின் ஒருபக்கச் சார்பான இனவாத அணுகுமுறையையே வெளிப்படுத்துகின்றது.

மேய்ச்சல் தரைக்காகப் போராடிய பண்ணையாளர்களை மாடுகளைக் காப்பாற்றப் போராட வைத்த அரசாங்கம்!

மேய்ச்சல் தரையைப் பாதுகாத்து தமது வாழ்வாதாரத்தை நிலைநிறுத்துவதற்காகப் போராடிய கால்நடைப் பண்ணையாளர்கள், இன்று தமது கால்நடைகளைக் கொலை செய்யப்படுவதிலிருந்து காப்பாற்றுவதற்காகப் போராட வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இது ஒரு சாதாரண கால்நடைக் கொலைச் சம்பவம் மட்டுமல்ல. தமிழ் கால்நடைப் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தையும், அவர்களின் பாதுகாப்பையும் திட்டமிட்டு அச்சுறுத்தும் தொடர்ச்சியான செயற்பாடுகளின் வெளிப்பாடாகவே நாம் இதனைப் பார்க்கின்றோம்.

கரடியனாறு பொலிஸ் அதிகாரி பதவி விலக வேண்டும்!

மயிலத்தமடு–மாதவனை பகுதியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, கால்நடைகள் தொடர்ச்சியாகக் கொல்லப்பட்டு வருகின்ற நிலையில், அதனைத் தடுக்கத் தவறிய கரடியனாறு பொலிஸ் அதிகாரி தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் வலியுறுத்துகின்றது.

அத்துடன், அந்தப் பதவி வெற்றிடத்திற்கு நேர்மையான, சட்டம் ஒழுங்கைப் பாரபட்சமின்றி நடைமுறைப்படுத்தக்கூடிய பொறுப்பான பொலிஸ் அதிகாரி ஒருவரை நியமிக்குமாறும் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றோம்.

மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரையைப் பாதுகாப்பதுடன், கால்நடைப் பண்ணையாளர்களின் உயிர், வாழ்வாதாரம் மற்றும் கால்நடைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் அடிப்படைப் பொறுப்பாகும்.

தொடர்ச்சியாக இடம்பெறும் இத்தகைய வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தி, கால்நடைப் பண்ணையாளர்களுக்கு நீதியை வழங்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

thamizhalai_2026-11-07_ez053nqe_2dd3cb85-04b2-48b2-9595-4d7250a46fcb

“வெற்றி மடிக்கணினி திட்டத்திற்காக ரூ.2,000 கோடி ஒதுக்கீடு!” – முதலமைச்சர் விஜய் உத்தரவு!

November 7, 2026

சென்னை: கல்லூரி மாணவர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தும் வெற்றி மடிக்கணினித் திட்டத்தைச் செயல்படுத்த 2,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து

6

“போலி பதிப்பகத்திற்கு திமுக ஆட்சியில் கொள்முதல் ஆணை!” – ஆவணத்தை வெளியிட்ட தவெக!

November 7, 2026

சென்னை: போலிப் பதிப்பகங்களுக்கு திமுக ஆட்சியில்தான் புத்தகங்கள் கொள்முதல் ஆணை பிறப்பிக்கப்பட்டதாகத் தவெக ஐ.டி விங் முக்கிய ஆவணத்தை அதிரடியாக

dsfsd

நாடு திரும்பினார் பிரதமர்!

November 7, 2026

அன்டிகுவா மற்றும் பார்புடாவில் நடைபெற்ற 28ஆவது பொதுநலவாய அரச தலைவர்களின் உச்சிமாநாட்டில் (CHOGM 2026) பங்கேற்ற பிரதமர் ஹரிணி அமரசூரிய,

d

Manpower ஊழியர் முறையை ஒழிக்க அரசாங்கம் நடவடிக்கை

November 7, 2026

நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் ‘மேன்பவர்’ ஊழியர் முறையை ஒழிப்பதற்காக தற்போதைய அரசாங்கம் புதிய சட்டங்களை இயற்றி வருவதாக வர்த்தக, வாணிப, உணவுப்

in

இந்தியாவின் புதிய கடவுச்சீட்டு மற்றும் விசா விதிகள்; இலங்கைத் தமிழர் நிலை?

November 7, 2026

இந்திய அரசு வெளிநாட்டினருக்கான புதிய கடவுச்சீட்டு மற்றும் விசா விதிகளில் திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாற்றங்கள் குறிப்பிட்ட பாகிஸ்தான் குடிமக்கள்,

sa

விகாரை வளாகத்தில் சத்தியாகிரகத்தில் ஈடுபடுவோர் வௌியேற வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு!

November 7, 2026

அனுராதபுரம் – ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினரை குறித்த

wa

தெனியாய பகுதியில் 4 பேர் நீரில் மூழ்கி மாயம்!

November 7, 2026

தெனியாய, பெவரலிய பகுதியில் உள்ள நீரோடையில் நீராடச் சென்ற நால்வர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். நுகேகொட பகுதியிலிருந்து சென்ற

ff

Google Gemini எமக்காகப் பேசவும் தயாராகிவிட்டது!

November 7, 2026

தொழில்நுட்ப வசதிகள் வளர வளர, நம்முடைய அன்றாட வாழ்க்கையும், உலகமும் மிக வேகமாக மாறி வருகின்றன. இந்த வளர்ச்சி மனித

5

“திரையரங்குகளில் தினமும் 6 காட்சிகளுக்கு அனுமதி: அரசாணையை திரும்பப் பெற வேண்டும்!” – அன்புமணி!

November 7, 2026

சென்னை: திரையரங்குகளில் தினமும் 6 காட்சிகள் திரையிட அனுமதி அளித்த அரசாணையைத் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்

4

“பெரியார் அறிவுலகம் ஊழல்: ஒரு தலைமுறையின் அறிவு வளர்ச்சியை பாதிக்கும் மாபெரும் முறைகேடு!” – சீமான்!

November 7, 2026

சென்னை: தவறான தகவல்களை நூலகத்தின் வழியாக மக்களிடம் கொண்டுசேர்ப்பது, பண மோசடியையும் கடந்து ஒரு தலைமுறையின் அறிவு வளர்ச்சியையே பாதிக்கும்

3

“தவெக ஆட்சி விரைவில் கவிழப்போகிறது!” – செல்லூர் ராஜூ பேட்டி!

November 7, 2026

மதுரை: தமிழகத்தில் தவெக ஆட்சி விரைவில் கவிழப்போகிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இவரது

DWOKMSEIDZBZTOCULVN7VXVQXQ

கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்த பெண்ணை அடையாளம் கண்டது பொலிஸ்

November 7, 2026

9 வயதுடைய காத்லீன் ஸ்கார்லெட் (Kathleen Scarlett) என்பவரைக் கத்திக் குத்தி கொலை செய்த வழக்கில், 50 வயதுடைய மெல்வின்