மயிலத்தமடு–மாதவணை மேச்சல் தரை விவகாரத்தில் சட்டத்தை மீறிய குடியேற்றங்களுக்கு வழிவகுக்கும் தீர்வை ஏற்க முடியாது! நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்தி, மேச்சல் தரையை பண்ணையாளர்களிடம் மீள ஒப்படைக்க வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலமாகத் தொடரும் மயிலத்தமடு–மாதவணை மேச்சல் தரை விவகாரம் தொடர்பாக, மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் இன்று 30.09.2026 நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் தீர்மானங்கள் தொடர்பில் கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக்கொள்கிறது.

முக்கிய கோரிக்கைகள்:

1. மயிலத்தமடு–மாதவணை மேச்சல் தரை தொடர்பாக ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ள நீதிமன்ற உத்தரவுகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

2. சட்டவிரோதமாக அல்லது அத்துமீறி மேற்கொள்ளப்பட்டுள்ள குடியேற்றங்கள் தொடர்பில் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3. கால்நடைப் பண்ணையாளர்களின் பாரம்பரிய மேய்ச்சல் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

4. மேச்சல் தரையை வேறு நோக்கங்களுக்காக மாற்றும் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
5. மயிலத்தமடு–மாதவணை பிரதேசத்தை மகாவலி B வலயத்திற்குள் உள்வாங்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.

6. இன விகிதாசாரத்தை மாற்றும் வகையிலான எந்தவொரு திட்டமிட்ட குடியேற்ற நடவடிக்கையும் மேற்கொள்ளப்படக் கூடாது.
7. கால்நடை பண்ணையாளர்கள், மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினருடனும் வெளிப்படையான கலந்துரையாடலை நடத்தி நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும்.

மயிலத்தமடு–மாதவணை பிரதேசத்தில் கால்நடைப் பண்ணையாளர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர். இந்நிலையில், இன்று நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இந்தப் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடப்பட்டு, இரு தரப்பினரும் தத்தமது நடவடிக்கைகளை ஒரே பிரதேசத்தில் மேற்கொள்ளும் வகையில் ஒரு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கால்நடைகளும் அதே பிரதேசத்தில் மேயும்; விவசாயமும் அதே பிரதேசத்தில் இடம்பெறும் என்ற வகையிலான தீர்வு, நடைமுறையில் நீண்டகாலமாக நிலவும் நிலப்பயன்பாடு, மேய்ச்சல் உரிமை மற்றும் குடியேற்றம் தொடர்பான முரண்பாடுகளை எவ்வாறு தீர்க்கும் என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

ஏற்கனவே இந்தப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் இடம்பெற்று, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்தாமல் புதிய நிர்வாக இணக்கப்பாடுகள் மூலம் பிரச்சினையைத் தீர்க்க முயற்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத அணுகுமுறையாகும்.

மகாவலி B வலயம் குறித்து வெளிப்படையான விளக்கம் தேவை

மயிலத்தமடு–மாதவணை பிரச்சினையின் பின்னணியில் மகாவலி B வலயம் தொடர்பான அரசின் திட்டங்களும் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளன.

மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் பெருமளவிலான நிலப்பகுதிகள் உள்வாங்கப்பட்டு, எதிர்காலத்தில் அவை வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படக்கூடிய நிலை உருவாகுமானால், அது மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலப்பயன்பாடு, விவசாயம், கால்நடை வளர்ப்பு, சுற்றுச்சூழல் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவம் ஆகியவற்றில் நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.

குறிப்பாக, அரசின் நில ஒதுக்கீடு மற்றும் குடியேற்றக் கொள்கைகள் வெளிப்படையாகவும், இன அல்லது மொழி அடிப்படையிலான மக்கள் தொகை மாற்றத்தை ஏற்படுத்தாத வகையிலும் அமைய வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் இன–மக்கள் தொகைச் சமநிலை பாதிக்கப்படக் கூடாது

மகாவலி B வலயத்தின் பெயரில் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் பெருமளவிலான நிலப்பகுதிகள் நிர்வாக ரீதியாக இணைக்கப்பட்டு, பின்னர் குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால், மாவட்டத்தின் மக்கள் தொகையில் மாற்றம் ஏற்படும் என்ற அச்சம் தமிழ் மக்களிடையே நிலவுகிறது.

இத்தகைய மாற்றங்கள் நீண்டகாலத்தில் நாடாளுமன்றம், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான மக்கள் பிரதிநிதித்துவத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

எனவே, எந்தவொரு அபிவிருத்தித் திட்டமும் மக்கள் தொகை அமைப்பை செயற்கையாக மாற்றுவதற்கான கருவியாகப் பயன்படுத்தப்படக் கூடாது.

மேச்சல் தரை என்பது வெறும் நிலப்பிரச்சினை அல்ல

மயிலத்தமடு–மாதவணை மேச்சல் தரை விவகாரம் வெறுமனே காணி தொடர்பான பிரச்சினையல்ல.

இது ஆயிரக்கணக்கான கால்நடைகளை வளர்த்து வரும் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்துடன் நேரடியாகத் தொடர்புடையது.

இயற்கையாகக் கிடைக்கும் மேச்சல் நிலங்கள் அழிக்கப்பட்டால்,

– நாட்டின கால்நடை வளம் பாதிக்கப்படும்;
– கால்நடைப் பண்ணையாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும்;
– பால் மற்றும் பால் சார்ந்த உற்பத்திகள் பாதிக்கப்படும்;
– இறைச்சி உற்பத்தி மற்றும் உணவுப் பாதுகாப்பில் தாக்கம் ஏற்படலாம்;
– இயற்கையான மேய்ச்சல் சூழல் அழிவடையும்;
– நிலம், நீர் மற்றும் சுற்றுச்சூழல் வளங்களின் சமநிலையில் மாற்றங்கள் ஏற்படலாம்.

எனவே, அபிவிருத்தி என்ற பெயரில் இயற்கையான மேய்ச்சல் நிலங்களை அழிக்கும் எந்தவொரு திட்டத்தையும் அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

நீதிமன்ற உத்தரவுகளை முதலில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்

ஒரு ஜனநாயக நாட்டில் எந்தவொரு நிர்வாகத் தீர்வும் நீதிமன்ற உத்தரவுகளுக்கு மேலாக இருக்க முடியாது.

எனவே, மயிலத்தமடு–மாதவணை விவகாரத்தில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ள நீதிமன்ற உத்தரவுகள் அனைத்தையும் முழுமையாக நடைமுறைப்படுத்தி, சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்த வேண்டும்.

புதிய குடியேற்றங்களை உருவாக்குவதன் மூலமோ, நிலப்பயன்பாட்டை மாற்றுவதன் மூலமோ அல்லது மேச்சல் தரையைப் பிரிப்பதன் மூலமோ இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது.

அரசுக்கு எமது வேண்டுகோள்

அபிவிருத்தி என்ற போர்வையில் மக்களின் பாரம்பரிய வாழ்வாதார உரிமைகளையும், இயற்கை வளங்களையும், மாவட்டத்தின் மக்கள் தொகைச் சமநிலையையும் பாதிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் அரசு கைவிட வேண்டும்.

மயிலத்தமடு–மாதவணை விவகாரத்தில்,

சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட வேண்டும்.
நீதிமன்ற உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
பண்ணையாளர்களின் மேச்சல் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.
சட்டவிரோத குடியேற்றங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மகாவலி B வலயம் தொடர்பான அனைத்து திட்டங்களும் மயிலத்தமடு மாதவணைப் பகுதியில் நிறுத்தப்பட வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்ட மக்களின் நிலம், வாழ்வாதாரம் மற்றும் எதிர்காலத்தைப் பாதிக்கும் எந்தவொரு முடிவும் சம்மந்தப்பட்ட மக்களின் பங்கேற்பின்றி எடுக்கப்படக் கூடாது.

இன முரண்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தக்கூடிய நிலைமைகளை உருவாக்காமல், சட்டம், நீதி, சமத்துவம் மற்றும் அனைத்து மக்களின் உரிமைகளையும் அடிப்படையாகக் கொண்டு நிரந்தரத் தீர்வை அரசு ஏற்படுத்த வேண்டும் என கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் சார்பில் அதன் தலைவர் ச. சிவயோகநாதன் அவர்கள் அரசிடம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

bre

நாளாந்தம் 15–17 மார்பகப் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்!

October 2, 2026

ட்டில் நாளாந்தம் சுமார் 15 தொடக்கம் 17 வரையான மார்பகப் புற்ற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதோடு, நாள்தோரும் 3 பேர் உயிரிழப்பதாக

s

இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை

October 2, 2026

இலங்கை கடற்பரப்புக்கு அருகில் சிக்கியுள்ள ஈரானிய எண்ணெய் தாங்கி கப்பல்களுக்குத் தேவையான அத்தியாவசியச் சேவைகளை வழங்கினால், இலங்கை மீது தடைகள்

dr

2 மாதங்களில் போதைப்பொருள் தொடர்பான 17,506 இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகள் வெளியீடு

October 2, 2026

கடந்த இரண்டு மாதங்களில் போதைப்பொருள் தொடர்பாக 17,506 இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர்

7

“ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு!” – மதுராந்தகம் பிரச்சாரக் களத்தில் விசிக நிலைப்பாட்டை உறுதி செய்த தொல். திருமாவளவன்!

October 2, 2026

மதுராந்தகம்: மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.

5

“மதுராந்தகம் தொகுதியில் முதலமைச்சர் விஜய் சாலை வலம்!” – வழிநெடுக மலர் தூவி உற்சாக வரவேற்பளித்த பொதுமக்கள்!

October 2, 2026

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதலமைச்சர் விஜய்

4

“2031-லும் விஜய்யே முதலமைச்சர்!” – மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரக் களத்தில் முதலமைச்சர் விஜய்க்கு வைகோ புகழாரம்!

October 2, 2026

செங்கல்பட்டு: எதிர்வரும் 2031 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று விஜய்யே முதலமைச்சராகத் தொடர்வார் என மதிமுக

Soumiya-anbumani-2024-03-9bafa948f012b541ca11b19b49b71553-3x2

“மது இல்லாத் தமிழகம்!” – பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி தொடங்கிய புதிய இயக்கம்; முழு ஆதரவு கோரும் அன்புமணி!

October 2, 2026

சென்னை: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் மதுப்பழக்கத்திலிருந்து மக்களை மீட்கும் நோக்கில், பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி “மது இல்லாத் தமிழகம்”

1200-675-27091173-thumbnail-16x9-ministerramesh

“கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை உதயநிதிக்கு ஸ்டாலின் கற்றுத்தரவில்லை!” – இரட்டை அர்த்தப் பேச்சுகளுக்கு அமைச்சர் ரமேஷ் கடும் கண்டனம்!

October 2, 2026

திருச்சி: அண்ணாவின் கொள்கைகளான கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றை மு.க. ஸ்டாலின் தனது மகனான உதயநிதிக்கு முறையாகக் கற்றுத்தரவில்லை என

van

வங்கதேசத்தில் கால்வாயில் மிதந்து வந்த டிரம்மில் இருந்து இந்து மதத்தை சேர்ந்தவரின் உடல் மீட்பு

October 2, 2026

வங்கதேசத்தில் கால்​வா​யில் மிதந்த டிரம்​மில் இருந்து இந்து மதத்​தைச் சேர்ந்​தரின் உடல் கண்​டெடுக்​கப்​பட்ட சம்​பவம் கடும் அதிர்ச்​சியை ஏற்​படுத்தி உள்​ளது.

download

வடக்கு மாகாண பண்பாட்டுப் பெருவிழா 2026!

October 2, 2026

வடக்கு மாகாண பண்பாட்டுப் பெருவிழா கடந்தவாரம் யாழ். முற்றவெளியில் ஆரம்பமாகி யாழ் நகரின் வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது. இப்பகுதியின் பாரம்பரிய

WhatsApp Image 2026-10-02 at 09.10.41

சாகித்யம் நுண்கலைக் கழகத்தில் புதிய மாணவர் சேர்க்கை

October 2, 2026

கொழும்பு, வெள்ளவத்தையில் கர்நாக சங்கீத ஆசிரியை திருமதி சாகித்யா கஜமுகனால் நிர்வகிக்கப்பட்டுவரும் சாகித்யம் நுண்கலைக் கழகத்தில் எதிர்வரும் 20ஆம் திகதி

sa

சட்டவிரோத மீன்பிடி; 59 பேர் கடற்படையினரால் கைது

October 2, 2026

ப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சட்டவிரோத மீன்பிடி