மீண்டும் தாக்குதல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால், இதற்கு முன்பைவிட மிகப் பெரிய வலிமையுடன் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எச்சரித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளதால், இஸ்ரேலும் தாக்குதலுக்கு தயாராக இருப்பதாக கூறியுள்ளனர். ஈரான் – அமெரிக்கா இடையே மீண்டும் மோதல் தீவிரம் அடைந்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி முதல் அமெரிக்கா – ஈரான் இடையே யுத்தம் நடைபெற்று வந்தது.
100 நாட்களுக்கும் மேலாக இந்த போர் நீடித்து வந்த நிலையில், கடந்த மாதம் 18 ஆம் திகதி இடைக்கால ஏற்பாடாக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இஸ்ரேல் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் தங்கள் வகுத்த பாதையில் செல்லாமல் வேறு வழியை பயன்படுத்திய சரக்கு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
இதனால், கோபம் அடைந்த ட்ரம்ப், ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தார். அதோடு, ஈரான் மீது கடுமையான தாக்குதலை நடத்துவேன் என்றும் கார்க் தீவை கைப்பற்ற போவதாகவும் ட்ரம்ப் மிரட்டினார். அவர் சொன்னபடியே ஈரான் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதலை தொடங்கியது.
கடைசி நேரத்தில் நடந்த மாற்றம் பதிலுக்கு ஈரானும் அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
மீண்டும் முழு வீச்சில் ஈரான் – அமெர்க்கா இடையே போர் மூண்டு இருப்பது மத்திய கிழக்கில் உச்ச கட்ட பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.