மணல் கிரவல், அகழ்வு மற்றும் விநியோகம் தொடர்பான கலந்துரையாடல் .

கிளிநொச்சி மாவட்டத்தின் மணல், கிரவல் அகழ்வு மற்றும் விநியோகம் தொடர்பான கலந்துரையாடல்
கடற்றொழில் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான கெளரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில்
மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.
காலை 9.30மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் வரவேற்புரை ஆற்றிய மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்கள் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்த அனைவரையும்
வரவேற்று கருத்து தெரிவிக்கையில்……….
அபிவிருத்தி திட்டங்களுக்கு தேவையான மணலைப் பெற்றுக் கொள்வது மிகவும் சவாலான விடயமாக உள்ளதாகவும் குறிப்பாக சாதாரணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையை விட மணலின் விலை அதிகரித்து காணப்படுவதால் ஒப்பந்தக்காரர்களிடமிருந்து மணலைப் பெற்றுக்கொள்வதில் தடங்கல்கள் ஏற்படுவதாகவும் அத்துடன் அயல் மாவட்டத்திற்கான மணல் தேவையை பூர்த்தி செய்வது பிரச்சினையாக உள்ளதாகவும் இதனால் அபிவிருத்திதிட்டங்களை விரைவுபடுத்த முடியாத நிலை உள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து மணல் ஒப்பந்தகாரர்களிடமிருந்து மணலை பெற்றுக் கொள்வது தொடர்பாக கடந்த மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய பிரதேச சபையின் ஊடாக மணல் யாட் அமைத்து அதனூடாக மணல் விநியோக தீர்மானிக்கப்பட்டது.
அதற்கமைய கரைச்சி பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட ஆற்றுப்பகுதியில் மணல் பெற்றுக்கொள்ளல், கனகராயன் ஆற்றுப்பகுதியில் படிந்துள்ள மணல் திட்டுக்களை அகழ்ந்து பொருத்தமான இடத்தில் களஞ்சியப்படுத்தல், மண் அகழ்ந்து இயந்திரத்தின் மூலம் கழுவுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளின் போது தோற்றம் பெறும் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
கிளிநொச்சி மற்றும் யாழ் மாவட்டத்தில் பல வீட்டுத்திட்ட மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் நடைபெற்று வருவதால் மணல் விநியோகம் தொடர்பாக அனைத்து துறைசார்ந்த திணைக்கள தலைவர்களின் முன்மொழிவிற்கேற்ப எடுக்கப்பட்ட தீர்மானங்களை நெகிழ்வுத் தன்மையுடன் விரைவாக செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்,பிரதேச செயலாளர்கள், கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர்,பிரதம கணக்காளர்,
பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள்,கிளிநொச்சி மாவட்ட Clean srilanka திட்டத்தின் தலைவர்,பிரதேச சபை தலைவர்கள்,மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவரின் இணைப்பாளர்,கௌரவ உறுப்பினர்கள், துறைசார் திணைக்கள தலைவர்கள் ,பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்கள்,
என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.
4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது

sa

சவூதி விமான நிலைய தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட 12 பேர் பலி!

October 11, 2026

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் அமரும் முனையப் பகுதி மீது

thriuvu

திருவள்ளுவர் பண்பாட்டு மைய நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் முதலாவது கூட்டம்

October 11, 2026

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை எதிர்காலத்தில் முறையாக நிர்வகித்து, அதன் செயற்பாடுகளைத் திட்டமிட்ட வகையில் முன்னெடுப்பதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டுள்ள

ind

Toronto இந்தியத் துணைத் தூதரகத்தால் ‘கனடாவில் இந்தியப் பெண்களுக்கு அதிகாரத்தை வழங்குதல்’ கருத்தரங்கு

October 11, 2026

கனடாவில் உள்ள இந்தியப் பெண்களுக்குக் கிடைக்கும் ஆதரவு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பெண்கள், சமூக அமைப்புகள், சட்ட மற்றும்

nav

‘தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றி’ – இன்று ஆரம்பிக்கிறது நவராத்திரி விரதம்!

October 11, 2026

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று (11) தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்க்கையாக,