பௌத்த மதத்தையோ மதத் தலைவர்களையோ இழிவுபடுத்த எவருக்கும் உரிமையில்லை

பௌத்த மதத்தையோ அல்லது எந்தவொரு மதத் தலைவர்களையோ இழிவுபடுத்த எவருக்கும் உரிமை கிடையாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாட்டின் விகாரைக் கட்டமைப்புகள் தற்போது போதிய கவனமின்றி சிதைவடைந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ளபடி பௌத்த மதத்தைப் போற்றிப் பாதுகாப்பதற்காக ரணசிங்க பிரேமதாச புத்தசாசன அமைச்சு மற்றும் நிதியத்தை உருவாக்கினார். அதன் மூலம் ஏனைய மதங்களுக்கான அமைச்சுக்களையும் ஏற்படுத்தி அந்தந்த மதக் கலாச்சாரங்களைப் பாதுகாப்பதன் ஊடாக நாட்டின் இறையாண்மையும் ஒருமைப்பாடும் உறுதிப்படுத்தப்பட்டது என்று அவர் கூறினார்.

சில தரப்பினர் புத்தசாசனத்திற்கு அச்சுறுத்தல் விடுப்பதாகவும், இல்லறத்திலுள்ளவர்களுக்கு அத்தகைய அச்சுறுத்தல்களை விடுக்கவோ அல்லது மகா சங்கத்தினருக்கு எதிராக விரல் நீட்டவோ உரிமை இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார். காவி உடைக்கும் புத்தசாசனத்திற்கும் மதிப்பளித்து ஏனைய மதங்களையும் மதத் தலைவர்களையும் மதிக்க வேண்டியது அனைத்துப் பிரஜைகளினதும் பொறுப்பாகும் என அவர் தெரிவித்தார்.

“மதம், இனம், சாதி அல்லது வகுப்பைப் பயன்படுத்தி அரசியல் இலாபம் தேடக்கூடாது. அவ்வாறு செய்வது ஒரு தனிநபரின் இயலாமையையே காட்டுகிறது. அரசியல் என்பது மக்கள் சேவையும் சமூக மேம்பாடுமே ஆகும்,” என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார். நாட்டின் உன்னத சட்டமான அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள விசேட இடத்தை உறுதிப்படுத்தும் அதேவேளை, ஏனைய மதங்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே தனது நம்பிக்கை என அவர் குறிப்பிட்டார்.

photo-collage.png (12)

கனடாவில் கல்முனை பிராந்திய மக்களின் மரநடுகை விழா

April 18, 2026

இன்றைய தினம்(18) கனடா மிசிஸாக்காவில் கல்முனை பிராந்திய மக்களின் மரநடுகை விழா கனேடிய நேரம் காலை 10 மணி தொடக்கம்

net

நெத்தலியாறு விவசாயிகள் ரவிகரன் எம்.பியிடம் கோரிக்கை

April 18, 2026

தமது சொந்தக் காணிகளிலேயே சிறுபோக நெற்செய்கையை மேற்கொள்வதற்கு அனுமதியைப் பெற்றுத்தருமாறு கல்மடுக்குளத்தின் சிறுபோக நீர்ப்பாசன பங்காளர்களான விசுவமடு மேற்கு கமக்கார

ds

வடக்கு, கிழக்கு சிகையலங்கார நிலைய சம்மேளனங்களை இணைப்பது குறித்து ஆய்வு

April 18, 2026

வடக்கு – கிழக்கு மாகாணத்தில் உள்ள அழகக சம்மேளனங்களை இணைத்து ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வருவது குறித்து ஆராய்ந்து வருகிறோம்

ind

இலங்கை விஜயத்தின் போது இந்திய துணை குடியரசு தலைவர் இந்திய வம்சாவளி தமிழர்களை நோக்கி நேசக்கரம் நீட்டுவார்- இந்திய தூதுவர்

April 18, 2026

பரந்த அளவிலான இராஜதந்திர மற்றும் மக்கள் நலன் சார்ந்த பயணமாக, இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள்

chaco

நிலக்கரி முறைகேடு; அடுத்த வாரம் விசாரணை ஆரம்பம்

April 18, 2026

இலங்கையில் நிலக்கரி இறக்குமதி மற்றும் மின் உற்பத்தி நடவடிக்கைகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின்

cana gu

கனடாவின் நோவா ஸ்கோடியா கிராமப்புற துப்பாக்கிச் சூடு: ஆறாம் ஆண்டு நினைவேந்தல்!

April 18, 2026

கனடாவின் நோவா ஸ்கோடியா கிராமப்புற பகுதியில், பொலிஸ் அதிகாரி வேடமணிந்த நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு இளைஞர்

her

லெபனானில் பிரெஞ்சு அமைதிப்படை சிப்பாய் பலி: ஹிஸ்புல்லா மீது மக்ரோன் குற்றச்சாட்டு

April 18, 2026

தெற்கு லெபனானில் இன்று காலை இடம்பெற்ற தாக்குதலில், சர்வதேச அமைதிப்படைப் பணியில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர்

sea

பொலிஸாரிடமிருந்து தப்பிக்க கடலில் குதித்த நபர் உயிரிழப்பு

April 18, 2026

பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர், பொலிஸாரிடம் சிக்காமல் இருக்க கடலில் குதித்த நிலையில், நீரில்

Parl

இலங்கை அமைச்சரவையில் மாற்றங்கள்?

April 18, 2026

நிலக்கரி கொள்முதல் மோசடி குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் குமார ஜெயக்கொடி பதவி விலகியதைத் தொடர்ந்து, அந்த வெற்றிடத்திற்குத் துறைமுகங்கள் மற்றும் விமான

lan

லங்லியில் அடுத்தடுத்த நாட்களில் கத்திக்குத்து: இரு இளைஞர்கள் காயம்

April 18, 2026

லங்லி பகுதியில் இரண்டு நாட்களில் இரண்டு வெவ்வேறு கத்திக்குத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எனினும், இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையில் எந்தத்

colo

மாணவர்களை இலக்கு வைக்கும் ‘கொலைப்பட்டியல்’: பதற்றத்தில் பிரிட்டிஷ் கொலம்பியா சமூகம்

April 18, 2026

பிரிட்டிஷ் கொலம்பியாவின் சிறிய நகரம் ஒன்றில் 16 மாணவர்களைக் குறிவைத்து “கொலைப்பட்டியல்” என்று அழைக்கப்படும் பட்டியல் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து,

hur

ஹோமுஸ் நீரிணையில் கப்பல் மீது ஈரான் தாக்குதல்

April 18, 2026

மான் கடற்கரையிலிருந்து சுமார் 20 கடல் மைல் (30 கி.மீ) தொலைவில் பயணித்துக் கொண்டிருந்த எண்ணெய் தாங்கிக் கப்பல் ஒன்றைத்