கிரியுல்லையில் பொலிஸார் நிறுத்துமாறு உத்தரவிட்டபோதிலும் அதனை மீறி பயணித்த காரி;ன் சக்கரத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து காரை நிறுத்திய பொலிஸார் அதில் பயணம் செய்த இரண்டு பெண்கள் உட்பட மூவரை கைதுசெய்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தலுக்கு கார் ஒன்றினை பயன்படுத்துகின்றனர் என கிடைத்த தகவலின் பேரில் இந்த வாகனத்தை காவல்துறையினர் அடையாளம் கண்டனர்.
எனினும் வாகனத்தை நிறுத்துமாறு பொலிஸார் பிறப்பித்த உத்தரவினை புறக்கணித்த வாகனசாரதி வாகனத்தை வேகமாக செலுத்தி தப்பிசெல்ல முயன்றார்.
இதனை தொடர்ந்து வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற பொலிஸார் அதன் ஒரு சக்கரத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து பன்னல பகுதியில் வாகனத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.
இதன்போது வாகனத்திற்குள் இருந்த பெண்கள் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டனர்.வாகனத்தை சோதனையிட்டதில் ஐந்து கிராம் போதைப்பொருளை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.