தேசியத் தலைவர் என்று தமிழ் மக்களால் போற்றப்படும் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்த வட்டுக்கோட்டை – பொன்னாலையில் இன்றையதினம் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது இனப்படுகொலை நிரைவுச் சின்னத்துக்கு முன்பாக ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, மலர்தூவி அக் வணக்கத்துடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சியானது சமைக்கப்பட்டு, உணர்வு ரீதியாக வழங்கப்பட்டது.
பி.பொன்ராசா தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தலில் முன்னாள் போராளிகள், தமிழ் தேசிய உணர்வார்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் குழுவினர், பொன்னாலை கிருஷ்ணன் ஆலயத்திற்கு முன்பாக வைத்து முன்னாள் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் ஆல்பிரட் துரையப்பாவை சுட்டுக் கொலை செய்ததில் இருந்து ஆயுதப் போராட்டமானது ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.