பொதுச் சுகாதார சேவையின் நூற்றாண்டு விழா

பொதுச் சுகாதார சேவையின் பெருமைமிக்க நூற்றாண்டு விழா ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (21) முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

தெற்காசிய பிராந்தியத்தின் முதலாவது கள சுகாதாரப் பிரிவாக 1926 ஆம் ஆண்டு களுத்துறை தேசிய சுகாதாரப் பிரிவு நிறுவப்பட்டமையுடன் இலங்கையின் பொதுச் சுகாதார சேவை ஆரம்பமானது. இன்று 362 க்கும் மேற்பட்ட சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகளைக் கொண்ட பரந்த வலையமைப்பாக வளர்ந்துள்ள பொதுச் சுகாதார சேவையின் முக்கிய பலம் பொதுச் சுகாதாரக் குழுவே ஆகும்.

அக்குழுவில் சுகாதார மருத்துவ அதிகாரிகள் (MOH), குடும்ப சுகாதார சேவை அதிகாரிகள் (PHM) மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் (PHI) உள்ளிட்ட கள அதிகாரிகள் குறிப்பிடத்தக்க சேவையை ஆற்றி வருவதுடன், அவர்கள் சமூகத்துடன் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்தி, மக்களின் நம்பிக்கையை வென்று சுகாதார சேவையின் மாற்றத்திற்குப் பங்களிப்புச் செய்கின்றனர்.

இலங்கை சமூக வைத்திய நிபுணர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், நூற்றாண்டு காலமாக நாட்டின் ஆரம்ப சுகாதார சேவையின் மேம்பாட்டிற்காகச் சிறந்த சேவையாற்றிய 36 சமூகச் சுகாதார தொழில்முறைக் குழுக்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டன.

மேலும், நூற்றாண்டு நினைவு மலர், இலங்கை சமூகச் சுகாதார சேவையின் எதிர்கால வழிகாட்டலை உள்ளடக்கிய வெள்ளை அறிக்கை உள்ளிட்ட பல வெளியீடுகளும் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டன.

இங்கு உரையாற்றிய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, பொதுச் சுகாதார சேவை என்பது பெருமைமிக்க வரலாறு, நம்பகமான நிகழ்காலம் மற்றும் தெளிவான எதிர்காலத்தைக் கொண்ட ஒரு துறை எனச் சுட்டிக்காட்டினார்.

தாய்மார்களின் ஆரோக்கியம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகள் காரணமாக தாய்மார்களின் மரண எண்ணிக்கையை 2,500 இலிருந்து 25 என்ற குறைந்த மட்டத்திற்குக் கொண்டுவர முடிந்துள்ளதாகவும், 1,000 பிறப்புகளுக்கு 200 ஆக இருந்த குழந்தைகள் இறப்பு எண்ணிக்கையை 05-06 வரை குறைக்க முடிந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன் மலேரியா தொற்றினால் ஒரு இலட்சம் பேர் உயிரிழந்த ஒரு நாட்டில், அந்நோயை முற்றிலும் ஒழிக்க முடிந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

நமது நாடு சமூகச் சுகாதார சேவையில் எவ்வளவு சாதனைகளைப் படைத்துள்ளது என்பதைக் காட்ட இச்சாதனைகளே போதுமானது எனக் கூறிய அமைச்சர், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் ஒரு நாடு சமூகச் சுகாதார சேவையை எவ்வளவு தரமாக முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பதற்கு நமது நாட்டிற்கே உரிய முன்மாதிரியை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறான பெருமளவு சாதனைகளை அடைய முடிந்தமைக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றிய சுகாதார ஊழியர்களே காரணம் எனத் தெரிவித்த அமைச்சர், அதற்காகவும் அண்மையில் ஏற்பட்ட அனைத்து தொற்றுநோய்கள் மற்றும் பேரிடர் சூழ்நிலைகளின் போதும் சமூகச் சுகாதார சேவை ஊழியர்கள் செய்த மகத்தான அர்ப்பணிப்பையும் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.

இங்கு உரையாற்றிய இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளரும் உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதியுமான வைத்தியர் ராஜேஷ் சம்பாஜிராவ் பாண்டவ் (Rajesh Sambhajirao Pandav), அடுத்த நூற்றாண்டை எதிர்கொள்ளும்போது கடந்தகால வெற்றிகளை மட்டும் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வது போதாது என்றும், இலங்கையின் சுகாதாரத் துறையின் தேவைகள் வேகமாக மாற்றமடைந்து வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

தொற்றா நோய்கள், முதியோர் சனத்தொகை அதிகரிப்பு, மனநலத் தேவைகள், காலநிலை அபாயங்கள் மற்றும் தொற்றுநோய் சூழ்நிலைகளுக்கு மத்தியில் பல புதிய தேவைகள் உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

முறையற்ற உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை மற்றும் மதுபானப் பயன்பாடு போன்ற காரணிகளால் தொற்றா நோய்கள் அதிகரித்து வருவதாகவும், இந்த அபாயங்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிகழ்வுகள் அல்ல என்றும், அவை சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் உருவாகின்றன என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அபிவிருத்தி பங்காளிகள் என்ற வகையில், இலங்கையின் நிலையான வளர்ச்சி மற்றும் மக்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதற்காகத் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகத் தெரிவித்த அவர், பொதுச் சுகாதார சேவையின் பெருமைமிக்க நூற்றாண்டுப் பயணத்தைப் பாராட்டி, மாற்றத்தை ஏற்படுத்தும் எதிர்காலப் பயணத்திற்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய சுகாதார மற்றும் வெகுஜனஊடக அமைச்சின் செயலாளர் நிபுணத்துவ வைத்தியர் அனில் ஜாசிங்க, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘ஆரோக்யா’ திட்டத்தின் மூலம், மாறிவரும் சூழலுக்கு ஏற்ப சுகாதாரத் துறை எவ்வாறு முன்னோக்கிச் செல்லும் என்பது குறித்த மிக முக்கியமான தொலைநோக்குப் பார்வையும் செயல்பாடும் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

சமூகச் சுகாதார சேவையில் குறைந்த முதலீடே செய்யப்படுவதாகப் பேச்சுகள் இருந்தபோதிலும், இம்முறை ‘ஆரோக்யா’ திட்டத்தின் கீழ் முதன்மைத் திட்டமாக சமூகச் சுகாதாரமே திகழ்கிறது என்றும், இதன் மூலம் நாட்டின் சுகாதார அமைப்பில் ஒரு மாற்றம், சமத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தின் திறமையான பயன்பாடு பிரதிபலிக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, இலங்கை சமூக வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் நிபுணத்துவ வைத்தியர் விந்தியா குமாரபேலி மற்றும் சர்வோதய இயக்கத்தின் தலைவர் சமூக மருத்துவ நிபுணர் விந்தியா ஆரியரத்ன ஆகியோரும் இந்நிகழ்வில் உரையாற்றினர்.

Sajith-Premadasa-2 (1)

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும்  

October 10, 2026

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இச்சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம்

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்