நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்சவிற்காக நீதிமன்றத்தில் ஆஜராகிய முன்னாள் அமைச்சர். அலிசப்ரி நாமல்ராஜபக்சவின் பெற்றோரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு பிணை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
கொழும்பு பிரதமநீதவான் முன்னிலையில் கிரிஷ் பணபரிபரிமாற்ற வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவேளையே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
நாமல்ராஜபக்சவின் 81 வயது தந்தைதற்போதுதான் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்,தாயார் கடும் இதயநோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என அலிசப்ரி வேண்டுகோள் விடுத்தார்.
தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் செவ்வாய்கிழமை அவருக்கு இதய சத்திரசிகிச்சை இடம்பெறவுள்ளது,மூத்த மகன் என்ற அடிப்படையில் நாமல்ராஜபக்சவிற்கு பெற்றோரை பார்த்துக்கொள்ளவேண்டிய கடப்பாடு உள்ளது என தெரிவித்தார்.
அரசியலமைப்பின் படி குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்படும் வரை அனைவரும் நிரபராதிகள் என்பதை சுட்டிக்காட்டிய அலிசப்ரி சட்டத்தின் அனைவரையும் சமமாக நடத்தவேண்டு;ம் என வாதிட்டார்.
ஏனைய வழக்குகளில் காட்டப்பட்ட மனிதநேயங்களை சுட்டிக்காட்டிய அவர் விடுதலைப்புலிகளின் தலைவரின் மரணத்திற்கு பின்னர் அவரது பெற்றோரை அரசாங்கம் பராமரித்தது என்றார்