புளியம்பொக்கனை பாலம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

A35 பரந்தன்–முல்லைத்தீவு பிரதான வீதியின் 12ஆவது கிலோமீற்றர் பகுதியில் அமைந்துள்ள 40 மீற்றர் நீளமுடைய புளியம்பொக்கனை பாலம், புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இன்று (28.07.2026) பொதுமக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
குறித்த பாலத்தின் புனரமைப்புப் பணிகள் 2020ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்த போதிலும், கொரோனா பெருந்தொற்று மற்றும் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.
May be an image of road
தற்போது அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் ரூபா 206 மில்லியன் செலவில் புனரமைப்புப் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டு, வெற்றிகரமாக நிறைவுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, வீதிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்களினால் பாலம் உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன், கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு இணைப்பாளர் மருங்கன் மோகன், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள், கண்டாவளை பிரதேச செயலாளர், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
புளியம்பொக்கனை பாலத்தின் புனரமைப்பு நிறைவடைந்ததன் மூலம் பரந்தன்–முல்லைத்தீவு பிரதான வீதியைப் பயன்படுத்தும் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் சரக்கு போக்குவரத்திற்கான பாதுகாப்பான மற்றும் சீரான போக்குவரத்து வசதி மீள உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், இப்பகுதியின் சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் இது குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
images (19)

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ்தெரிவு!

July 28, 2026

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் திருவுளச்சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி நகர சபையின் உப

5

மேகதாது விவகாரம்: பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும் – முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்!

July 28, 2026

சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அளித்த அதிரடி

photo-collage.png (4)

செம்மணி மனித புதைகுழி பேரவலத்திற்கு யார் காரணமென்பது விசாரணைகளின் இறுதியிலேயே தெரிய வரும் – நீதி அமைச்சர்

July 28, 2026

செம்மணி மனித புதைக்குழி விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படும் என நீதி மற்றும்

s

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

July 28, 2026

இலவசக் கல்வியைப் பாதுகாக்கவும், தனியார் பட்டப்படிப்பு மையங்களுக்கு எதிராகவும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் துணை மருத்துவப் பட்டதாரிகள்

a35

கிளிநொச்சி மாவட்ட A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

July 28, 2026

கிளிநொச்சி மாவட்டத்தில் A35 பரந்தன் – முல்லைத்தீவு பிரதான வீதியில் 12 ஆவது கிலோமீற்றர் தூரத்தில் உள்ள முதலாவது பாலம்

1688202098-EARTHQUAKE-6

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

July 28, 2026

ஜப்பானின் கியூஷூ (Kyushu) தீவில் அமைந்துள்ள குமாமோட்டோ (Kumamoto) பகுதியை மையமாகக் கொண்டு இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

Nali

நீதிபதிகளின் ஓய்வு; சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை – அமைச்சரவை பேச்சாளர்

July 28, 2026

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது தொடர்பான தீர்மானம் குறித்து சர்வஜன வாக்கெடுப்பிற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என அமைச்சரவை ஊடகப்

Crick

கிரிக்கெட்டின் புதிய அரசியலமைப்பு வரைவு கையளிப்பு!

July 28, 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய அரசியலமைப்பின் வரைவு, விளையாட்டுத்துறை அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழு தெரிவித்துள்ளது. புதிய

cyb

கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட சீன பிரஜையின் மரணம் தொடர்பில் மேலும் பல தகவல்கள்

July 28, 2026

துறைமுக நகரத்தில் (Port City) கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட சீன பிரஜை, கணினி சார்ந்த மோசடிகளில் ஈடுபட்டு சட்டவிரோதமாகப் பணம் ஈட்டிய

exc

மதுவரித் திணைக்களத்தின் தீர்மானத்திற்கு நிறுவனங்கள் எதிர்ப்பு

July 28, 2026

மதுபான உற்பத்தி மற்றும் சேமிப்பின் போது ஏற்படும் மதுசார வீணடிப்புச் சதவீதத்தை 1.5% இல் இருந்து 0.1% ஆகக் குறைப்பதற்குப்

kapil-sibal-saurav-das-pti

நீட் போராட்ட மாணவர்களின் சட்ட உதவிக்காக ரூ.1 கோடி நிதியுதவி அளித்தார் கபில் சிபல்!

July 28, 2026

புதுடெல்லி: தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராகத் தொடர்ந்து அறவழியில் போராட்டம் நடத்திவிட்டு,

MediaFile

எம்.பிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை!

July 28, 2026

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட