மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17வது நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு பிள்ளையாரடியில் உள்ள புரவி பிள்ளையார் ஆலயத்தின் முன்றலில் சனிக்கிழமை (16) காலை 8.30 மணியளவில் படுகொலைச் சம்பவத்தில் உயிர் நீத்தவர்களுக்கு நினைவுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தி கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மண்முனை வடக்கு பிரதேச கிளையின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.
யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளுக்காக அகவணக்கம் செலுத்தி அஞ்சலி மரியாதை அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த நினைவேந்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஸ்ரீநாத், மட்டக்களப்பு மாநகர பிரதி முதல்வர் டினேஷ், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மாநகர சபை உறுப்பினர்கள், இளைஞர் அணி தலைவர் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.