பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்!

மட்டக்களப்பில் 2008ஆம் ஆண்டு ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்றைய வழக்க விசாரணையின் போது பிள்ளையான் காணொளி ஊடாக முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு நிதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

2008ஆம் ஆண்டு கல்லடியில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தமை, காத்தான்குடியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியின் உறுப்பினர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தமை மற்றும் வவுணதீவு, கரையாக்கன்தீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்ட பின்னர் உயிரிழந்தமை உள்ளிட்ட ஐந்து சம்பவங்கள் தொடர்பில் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.

இச்சம்பவங்கள் தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார்.

பின்னர், இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகள் எனக் கூறப்படும் காத்தான்குடியைச் சேர்ந்த முகமட் சிபான் மற்றும் முகமட் சகீத் ஆகியோர் 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக 2026ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

இன்றைய விசாரணையின்போது, முகமட் சிபான் மற்றும் முகமட் சகீத் ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், பிள்ளையான் காணொளி ஊடாக முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது, மூவரையும் ஒக்டோபர் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம், இலண்டனில் வசிப்பதாகக் கூறப்படும் மற்றொரு சந்தேகநபரான முகமட் பாய்ஸ் என்பவருக்கு எதிராகத் தொடர்ந்து பிடியாணையும் பிறப்பித்துள்ளது.

#Pillayancase #sooriyannews #Srilanka #TruthAtAllCosts

Mahinda-Rajapaksa

மோசமான நிலையில் மகிந்த ராஜபக்சவின் உடல்நிலை! அனைவரையும் பிரார்த்திக்குமாறு அழைப்பு

October 13, 2026

முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலை முன்னரை விட மோசமான நிலையில் இருப்பதாக சீலரத்ன தேரர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த

Nalinda Jayatissa Cabinet Meet-790605

சிறையில் அடைக்கப்பட்ட பௌத்தமதகுருமாரின் காவியுடை விவகாரம் – சிறைச்சாலை அதிகாரிகள் தீர்மானிக்க முடியாது என்கின்றார் நளிந்த

October 13, 2026

குற்றச்செயல்களுக்காக சிறையில் அடைக்கப்பட்ட பௌத்தமதகுருமார் தொடர்ந்தும் காவியுடையை அணிந்திருக்கவேண்டுமா என்ற தீர்மானத்தை அவர்களின் பௌத்தமத பீடங்களே தீர்மானிக்கவேண்டும் என சிறைச்சாலை

Nalinda Jayatissa Cabinet Meet-790605

சிராந்தியின் உடல்நிலை- அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பது என்ன?

October 13, 2026

முன்னாள் முதல் பெண்மணி சிராந்தி ராஜபக்சவிற்கு ஆஞ்சியோகிராம்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்

Shiranthi-Rajapaksa 1

சிராந்திக்கு இதயசத்திரசிகிச்சையா? உடனடியாக உறுதிப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

October 13, 2026

முன்னாள் முதல்பெண்மணி சிராந்திராஜபக்சவிற்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இதய சத்திரசிகிச்சை இடம்பெறுவதாகஅவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளதை உடனடியாக ஆராய்ந்து உறுதிப்படுத்துமாறு கொழும்பு

8

“ஆந்திரா: கனகதுர்கை அம்மன் கோவிலில் முதல்-அமைச்சர் விஜய் சாமி தரிசனம்!” – விஜயவாடாவில் சிறப்பான வரவேற்பு!

October 13, 2026

விஜயவாடா: தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, முதல் முறையாக விஜய் ஆந்திர மாநிலம் சென்றுள்ளார். சிறப்பான வரவேற்பு: தனி விமானம்

7

“தவெக ஆட்சியில் பணவீக்கம், விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடம்” – மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

October 13, 2026

சென்னை: தவெக ஆட்சி அமைந்த 4 மாதங்களில் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளதாக திமுக தலைவர்

IMG_9407

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்!

October 13, 2026

மட்டக்களப்பில் 2008ஆம் ஆண்டு ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்

IMG_9406

பெற்றோலிய எரிவாயுவை வழங்க அமைச்சரவை அனுமதி !

October 13, 2026

2027ஆம் ஆண்டுக்கான திரவப் பெற்றோலிய எரிவாயுவை (LPG) லிட்ரோ நிறுவனத்துக்கு விநியோகிப்பதற்கான ஒப்பந்தத்தை OQ Trading Limited நிறுவனத்துக்கு வழங்குவதற்கு

IMG_9405

குறிவைக்கப்படும் பெண்கள்; பொலிஸ் விசாரணையில் அம்பலமான அதிர்ச்சி

October 13, 2026

அம்பாறை மற்றும் உகன பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு பெண்களிடம் தங்கச் சங்கிலிகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக

IMG_9404

மகிழ்ச்சிச் செய்தி – நாளை வங்கிக் கணக்குகளில் பணம்!

October 13, 2026

அஸ்வெசும நலத்திட்டத்தின் கீழ் தகுதியுடைய பயனாளிகளுக்கான நிதியுதவிகளை நாளை (14) முதல் வங்கிக் கணக்குகள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என

IMG_9403

யாழில் நடந்த கோரம்; சம்பவ இடத்திலேயே பறிபோன இரு இளைஞர்களின் உயிர்கள்!

October 13, 2026

யாழ்ப்பாணம், கைதடி பகுதியில் இன்று (13) நண்பகல் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

IMG_9402

ஆடம்பர சொகுசு காருக்குள் சிக்கிய மர்மம்

October 13, 2026

நீர்கொழும்பில் 22 மில்லியன் ரூபா பெறுமதியான ஆடம்பர BMW ரக சொகுசு காரை முடக்குவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பாரியளவிலான