பாடகரின் கைது தோல்வியடைந்த அரசியல்வாதிகளுக்கு இனிக்கலாம். எங்களுக்கு அது மனவேதனையே – தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன்

தோல்வியடைந்த சில அரசியல்வாதிகளுக்கு, இன்றைய அரசியல் சூழலில் ஒரு இளைஞர் பாடகர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் எமக்கு அது மகிழ்ச்சியல்ல; மனவேதனையே.
இன்று கைது செய்யப்பட்ட பின்னரே அந்த இளைஞர் கலைஞரைப் பற்றி பலரும் பேசுகின்றனர். இதுவரை அவரது திறமையையும் படைப்புகளையும் கண்டுகொள்ளாதவர்கள், இன்று அவரை பற்றி கருத்து தெரிவிக்க முன்வருகின்றனர். குறைந்தபட்சம் இப்போது அவரது திறமை வெளிச்சத்திற்கு வந்திருப்பது ஒரு வகையில் ஆறுதலாக இருக்கிறது.
இசை என்பது மக்களின் உணர்வுகளையும் அனுபவங்களையும் வெளிப்படுத்தும் ஒரு கலை வடிவமாகும். கலைஞர்கள் தங்களது உணர்வுகளை இசை ஊடாக வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களில், அதனால் அவர்கள் பாதிக்கப்படாத வகையில் எதிர்காலத்தில் சட்டங்களில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு எனக்குள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பல திறமையான பாடகர்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் உள்ளனர். எனினும், அவர்களது திறமைக்கேற்ற அங்கீகாரமும் பிரதிபலனும் பல சந்தர்ப்பங்களில் கிடைப்பதில்லை. சிலரின் திறமைகள் திருடப்படுகின்றன; சிலரின் படைப்புகள் பிறரால் பயன்படுத்தப்பட்டு பொருளாதார பலன்கள் பெற்றுக்கொள்ளப்படுகின்றன. ஆனால் உண்மையான திறமையாளர்கள் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன.
இன்று காவல்துறையினர் கைது செய்த பிறகே இந்தப் பாடகரை அனைவரும் திரும்பிப் பார்க்கின்றனர். ஆனால் அதற்கு முன்னர் அவரது பாடல்களை எத்தனை பேர் கவனமாகக் கேட்டார்கள், அவரது திறமையை எத்தனை பேர் மதித்தார்கள் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.
கைது செய்யப்பட்டவர் சட்டத்தின் அடிப்படையில் நியாயமான விசாரணையைப் பெற்று, சட்டத்தின் ஊடாகவே விடுதலையாக வேண்டும் என்பதே எமது நிலைப்பாடும் இலக்குமாகும்.
4

“கூட்டணியை தக்க வைக்க தி.மு.க. முயற்சிக்கவில்லை!” – திருமாவளவன் அதிரடி!

October 12, 2026

விழுப்புரம்: கூட்டணியைத் தக்கவைக்க திமுக முயற்சிக்கவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். திமுக தவறு: திண்டிவனம்

New Project (37)-a4wa4

“அரசு நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரனை அமர வைத்தது தவறான முன்னுதாரணம்!” – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் காட்டம்!

October 12, 2026

மதுரை: பிரதமர் மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அமர வைக்கப்பட்டது தவறான முன்னுதாரணம்

7a6516900cae56f628c7ce9da506af3e

“திருவள்ளுவர் சிலைக்கு காவி உடையா?” – பாஜகவின் செயலுக்குத் தவெக கடும் கண்டனம்!

October 12, 2026

சென்னை: பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், திருவள்ளுவர் சிலைக்குக் காவி உடை அணிவிக்கப்பட்டதற்குத் தமிழக வெற்றிக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

1

“பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம்!” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

October 12, 2026

விழுப்புரம்: அமைச்சர் பதவி போனாலும், பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம் என சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி

images - 2026-10-12T104122.246

“முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சற்றுமுன்னர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி – திடீர் உடல்நலக்குறைவு”

October 12, 2026

கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திடீரென ஏற்பட்ட உடல்நல பிரச்சினை காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய

ano

சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் அனோஜன் சார்பில் மேன்முறையீடு

October 12, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்று

war

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

October 12, 2026

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (11) மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்

president-1

எரிபொருள் ஒப்பந்தங்கள் திருத்தப்படும் – ஜனாதிபதி

October 12, 2026

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்