சென்னை
டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை வெறும் 24 மணி நேரத்திற்குள் தவெக அரசு அதிரடியாக நீக்கியுள்ள சம்பவத்தைக் குறிப்பிட்டு, அதிமுக ஐடி விங் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளது.
திடீர் தடையும் காரணமும்:
கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி பூந்தமல்லியில் உள்ள என்ரிகா எண்டர்பிரைசஸ் (Enrica Enterprises) ஆலையில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய (FSSAI) அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில், அங்குத் தயாரிக்கப்படும் 10 பிராந்தி வகைகள் மற்றும் ஒரு ரம் வகையில் செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், விஸ்ஓபி எக்ஸ்ஷா கோல்ட், மெக்டொவல்ஸ், ஹனி பீ உள்ளிட்ட 10 பிராந்தி வகைகளுக்கும், என்ரிகா ஓல்ட் இண்டி கிளாசிக் டார்க் ரம் என்ற ஒரு ரம் வகைக்கும் டாஸ்மாக் கடைகளில் விற்கத் தடை விதிக்கப்பட்டது.
24 மணிநேரத்தில் திரும்பப் பெறப்பட்ட உத்தரவு:
தடை விதிக்கப்பட்ட 24 மணிநேரத்திற்குள், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006-ன் பிரிவு 36(3)(b)-ன் கீழ் மேற்படி 11 மதுபான பிராண்டுகள் மீதான தடை உடனடியாகத் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் ஆர். கஜலட்சுமி ஐ.ஏ.எஸ்., இந்த 11 மதுபானங்கள் மீதான தடை நீக்கப்பட்டு விட்டதாக டாஸ்மாக் மேலாண் இயக்குநருக்கு அதிகாரப்பூர்வ உத்தரவைப் பிறப்பித்தார். இதன் மூலம் அந்த மதுபானங்கள் மீண்டும் வழக்கம்போல் விற்பனைக்கு வந்துள்ளன.
“பேக்கரி டீலிங்கா?” – அதிமுக ஐடி விங் அட்டாக்:
இந்தத் திடீர் தடை நீக்கத்தைக் கடுமையாக விமர்சித்துள்ள அதிமுக ஐடி விங், முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் விக்னேஷ் ஆகியோரைக் குறிப்பிட்டு எக்ஸ் (X) தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “கொடுத்த தடையை வெறும் 24 மணி நேரத்தில் நீக்கும் அளவிற்கு அப்படி என்ன நடந்தது? பயமா? பதற்றமா? பேக்கரி டீலிங்கா? என்னவா இருக்கும்?” என்று தவெக அரசைக் கடுமையாகக் சாடியுள்ளது.
#AIADMK #ITWing #TASMAC #LiquorBan #ChiefMinisterVijay #JosephVijay #ThalapathyVijay #TVKGovernment #MinisterVignesh #TamilNaduNews #ChennaiNews #TNPolitics #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates