“பயணிகளின் கவனத்திற்கு!” – வார விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 2,120 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

சென்னை
வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் நெரிசலைக் குறைக்கும் வசதிக்காகச் சென்னையில் உள்ள முக்கியப் பேருந்து முனையங்கள் மற்றும் பிற நகரங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகளை இயக்கத் தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் (SETC) விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இது குறித்துப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் குணசேகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பின் முழுமையான விவரம்:
கிளாம்பாக்கத்தில் இருந்து தென்தமிழகத்திற்கு:
புதிய புறநகர் பேருந்து நிலையமான கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) 505 சிறப்புப் பேருந்துகளும், நாளை 15-ஆம் தேதி (சனிக்கிழமை) 570 சிறப்புப் பேருந்துகளும் அதிரடியாக இயக்கப்பட உள்ளன.
கோயம்பேடு மற்றும் மாதவரம் பேருந்து நிலையங்கள்:
  • கோயம்பேடு: இங்கிருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூரு ஆகிய முக்கிய இடங்களுக்கு இன்றும், நாளையும் (14 மற்றும் 15-ஆம் தேதிகளில்) நாள் ஒன்றுக்குத் தலா 110 சிறப்புப் பேருந்துகள் வீதம் இயக்கப்படுகின்றன.
  • மாதவரம்: மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, போளூர் மற்றும் புதுச்சேரி ஆகிய ஊர்களுக்கு இன்றும் நாளையும் நாள் ஒன்றுக்குத் தலா 80 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
பிற நகரங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள்:
சென்னை மட்டுமின்றி, வெளி மாவட்டப் பயணிகளின் வசதிக்காகப் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய முக்கிய நகரங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை ஊர் திரும்பும் பயணிகளுக்கு:
வார விடுமுறை முடிந்து பொதுமக்கள் மீண்டும் தங்களது சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களுக்குச் சிரமமின்றித் திரும்பும் வகையில், வரும் 16-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பயணிகளின் தேவைக்கேற்ப பல்வேறு இடங்களில் இருந்து 465 சிறப்புப் பேருந்துகளைக் கூடுதலாக இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
#TNSpecialBuses #TNSTC #SETC #WeekendTravel #Kilambakkam #Koyambedu #MadhavaramBusTerminus #ChennaiTraffic #TamilNaduNews #ChennaiNews #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates
1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்

mala thiru

மலேஷிய நாடாளுமன்றில் திருக்குறள்!

October 10, 2026

மலேஷிய நாடாளுமன்றில் திருக்குறளை மேற்கோள் காட்டி மலேசிய பார்லியில் அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் உரையாற்றியது, வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

17-2026-10-09-16-04-25

“நான் தளபதி விஜய்யின் தங்கச்சி… உண்மைக்கு கிடைத்த வெற்றி இது!” – மரகதம் குமரவேல்!

October 10, 2026

செங்கல்பட்டு: மதுராந்தகம் இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல், இது உண்மைக்குக் கிடைத்த வெற்றி என

26-6ac8ee4988b7d

“இடைத்தேர்தல் வெற்றி: சட்டசபையில் த.வெ.க. பலம் 109 ஆக அதிகரிப்பு – பெரும்பான்மைக்கு இன்னும் 9 இடங்கள் தேவை!”

October 10, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு சட்டசபையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பலம் 109