நேர்மையாக இருந்தால் நிச்சயம் விமர்சனங்கள் வரும். மாற்றங்களைச் செய்ய முற்பட்டால் சவால்கள் வரும். கிளிநொச்சி மாவட்டச் செயலருக்கு எதிராக நேற்று வியாழக்கிழமை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நடந்ததும் அதுதான்-வடக்கு மாகாண  ஆளுநர் 

நேர்மையாக இருந்தால் நிச்சயம் விமர்சனங்கள் வரும். மாற்றங்களைச் செய்ய முற்பட்டால் சவால்கள் வரும். கிளிநொச்சி மாவட்டச் செயலருக்கு எதிராக நேற்று வியாழக்கிழமை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நடந்ததும் அதுதான்’ என வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
வடக்கு மாகாண முகாமைத்துவ சேவையின் அதிசிறப்புத் தரத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பதவியுயர்வு நியமனங்கள் வழங்கும் நிகழ்வும், புதிதாகச் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட வருமான வரிப் பரிசோதகர்கள் மற்றும் நூலகர்களுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வும் ஆளுநர் செயலகத்தில் இன்று (17.07.2026) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு புதிய நியமனங்களை வழங்கி வைத்து உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஆளுநர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்:
இன்றைய தினம் புதிதாக நியமனம் பெறுபவர்கள் மற்றும் ஏற்கனவே சேவையில் உள்ளவர்களில் பதவியுயர்வு பெறுபவர்கள் என இரண்டு தரப்பினர் இங்குள்ளீர்கள். கடந்த காலங்களில் பணியாற்றிய அதிகாரிகள் இப்போது செயலாளர்களாகவும், ஆணையாளர்களாகவும் இங்கு வீற்றிருக்கிறார்கள். அன்றைய காலங்களில் அவர்கள் பணியாற்றிய போது பல்வேறு அரசியல் தலையீடுகளும் அழுத்தங்களும் இருந்தன. ஆனால், இன்று அவ்வாறான நிலைமை இல்லை. நீங்கள் மிகவும் சுதந்திரமாகப் பணியாற்றலாம்; ஆனால், நேர்மையாகப் பணியாற்ற வேண்டும்.
நீங்கள் நேர்மையாகப் பணியாற்றினால் நிச்சயமாக உங்கள் மீது அவதூறுகளைப் பரப்புவார்கள். உங்களைப் பற்றி சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படும். பல்வேறு சவால்களை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
மக்கள் உங்களிடமிருந்து விரைவான, நட்பான, மற்றும் தரமான சேவையையே எதிர்பார்க்கின்றார்கள். எனவே, நீங்கள் நேரிய சிந்தனையுடன் விடயங்களை அணுக வேண்டும். உங்களை நாடி வருகின்ற ஒரு பொதுமகனுக்கு எவ்வாறு சேவையைச் செய்து கொடுக்கலாம் என்று சிந்திக்க வேண்டுமே தவிர, அவரை எப்படித் தட்டிக் கழிக்கலாம் என ஒருபோதும் நினைக்கக் கூடாது. பொதுமக்களுக்குச் சேவை செய்வதற்காகவே உங்களுக்கு இந்தப் பதவிகள் வழங்கப்படுகின்றன என்பதைப் பதவிக் கதிரையில் அமர்ந்ததும் சிலர் மறந்து விடுகின்றார்கள்; அந்த நிலைமை மாற வேண்டும்.
முன்னைய காலங்களில் அரச நியமனக் கடிதங்களில் ‘இலங்கையின் எப்பாகத்திலும் கடமையாற்ற வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். இப்போது ‘வடக்கு மாகாணத்தில் எப்பாகத்திலும் கடமையாற்ற வேண்டும்’ என நியமனக் கடிதங்களில் நிபந்தனை வழங்கப்படுகின்றது. ஆனால், இடமாற்றங்கள் வழங்கப்பட்டால் அதனை ஏற்க மறுக்கும் போக்கு தற்போது அதிகரித்து வருகின்றது. இது அரச சேவைக்குப் பொருத்தமற்றதொரு விடயமாகும்.
நீங்கள் சிறந்த தலைமைத்துவப் பண்புடன் பணியாற்றுங்கள். அந்தத் தலைமைத்துவப் பண்பு உங்களிடம் இருக்குமாக இருந்தால், உங்களுக்கு வழங்கப்பட்ட பணியிடங்களிலிருந்து உங்களை மாற்ற வேண்டும் என்ற எண்ணமே எமக்கு வராது. மக்கள் விரும்புகின்ற சிறந்த சேவையை நீங்கள் அர்ப்பணிப்புடன் வழங்க வேண்டும் என நான் எதிர்பார்க்கின்றேன்,’ என வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் ஆரம்பமாக ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் வரவேற்புரையை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) திருமதி எழிலரசி அன்ரன் யோகநாயகம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன் ஆகியோர் புதிய நியமனதாரர்களுக்கான வழிகாட்டல் அறிவுரைகளை வழங்கினர்.
முகாமைத்துவ சேவை அதிசிறப்புத் தரம்: 26 பேர் (இவர்களில் 11 பேர் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களாகவும், 15 பேர் நிர்வாக உத்தியோகத்தர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்). வருமான வரிப் பரிசோதகர்கள்: 14 பேர். நூலகர்கள்: 02 பேர்.
இந்த நியமனம் வழங்கும் நிகழ்வில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், அமைச்சின் சிரேஷ;ட உதவிச் செயலாளர், அமைச்சின் உதவிச் செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது