கியூபெக் மாகாணத்தில் பணியாற்றி வரும் நூற்றுக்கணக்கான மெக்சிகோ நாட்டுத் தொழிலாளர்கள், தங்களது பணி அனுமதிப்பத்திரத்தை (Work Permit) புதுப்பிப்பதில் ஏற்பட்டுள்ள கடும் தாமதம் காரணமாக வேலையிழந்து நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பணி அனுமதிப்பத்திரம் கையில் இல்லாததால், தொழில்தருநர்கள் இந்த ஊழியர்களுக்கு சட்டப்படி ஊதியம் வழங்க முடிவதில்லை.
இதனால் தொழிலாளர்கள் கடந்த பல மாதங்களாக வருமானமின்றித் தவிக்கின்றனர்.
அனுமதிப்பத்திரம் காலாவதியானதும், கியூபெக் அரசின் இலவச மருத்துவக் காப்பீடும் (RAMQ) ரத்தாகும் நிலை காணப்படுகின்றது.
இதனால் கடும் குளிர்காலத்தில் நோய்வாய்ப்பட்டால் கூட இவர்களால் மருத்துவமனைக்குச் செல்ல முடியாத சூழல் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.