யாழ்ப்பாணத்தில் விவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வு

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள விவசாயப் பண்ணைகளை விடுவிப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வா ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை (03) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியாகக் கடந்த 27ஆம் திகதி கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வா, வடக்கு மாகாண ஆளுநரை சம்பிரதாயபூர்வமாகச் […]

சர்ச்சைக்குரிய புத்தர் சிலை விவகாரம்; தேரர்களின் ரிட் மனு தள்ளுபடி

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் பலங்கொடை கஸ்ஸப தேரோ மற்றும் திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இன்று செவ்வாய்க்கிழமை (03) தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ரொஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெனாண்டோ ஆகியோரடங்கிய நீதியரசர்கள் குழாம் பிறப்பித்துள்ளது.

AI வைத்திய ஆலோசனையை நம்பியவர் ஆபத்தில்…

டெல்லியைச் சேர்ந்த 45 வயதான ஒருவருக்கு மருத்துவ பரிசோதனையில் எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதற்குப் பதிலாக, அவர் செயற்கை நுண்ணறிவு (AI) சாட்போட்டின் ஆலோசனையை நம்பி சிகிச்சை முறைகளைத் தேடியது பெரும் ஆபத்தாக மாறியது. ஏஐ வழங்கிய தகவலின் அடிப்படையில், அவர் ஒரு மருந்தை எச்.ஐ.வி. தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ள தொடங்கினார். இந்த மருந்துகள் எச்.ஐ.வி. தொற்று ஏற்படாமல் தடுக்கும் நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுபவை. ஏற்கெனவே தொற்று ஏற்பட்டவர்களுக்கு […]

போதைப் பொருளுடன் இருவர் கைது

ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் பணத்துடன் இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து 1 கிலோ 9 கிராம் 560 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள், 150,000 ரூபாய் பணம் ,போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு தொலைபேசிகள்,காரொன்று மற்றும் முச்சக்கர வண்டி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. வெள்ளவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டபிள்யூ. ஏ. சில்வா மாவத்தை, பாமன்கடை பகுதியில் உள்ள அங்காடி ஒன்றிற்கு முன்பாக […]

சுதந்திர தினத்தை முன்னிட்டு 49 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறையிலுள்ள 49 கைதிகள் புதன்கிழமை (04) அன்று விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ. சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 34 ஆவது உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு இணங்க, சிறைக்கதிகளுக்கு இந்த விசேட ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, சில விதிகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் இந்தக் கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் […]

இலங்கை மீனவர்கள் குழுவொன்றின் மீது தாக்குதல்: அமைச்சர் சந்திரசேகர் கடும் கண்டனம்

பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்து இலங்கை மீனவர்கள் குழுவொன்றின் மீது இந்தியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள் நடத்திய தாக்குதலுக்குத் தனது கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதாகக் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அமைச்சர், இச்சம்பவம் குறித்து இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். வென்னப்புவ, வெல்லமன்கரை துறைமுகத்திலிருந்து கடற்தொழிலுக்காகப் புறப்பட்டுச் சென்ற இரண்டு படகுகளில் இருந்த 12 மீனவர்கள் மீது, கடந்த 29ஆம் திகதி […]

15 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிப்பு

இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள 2026 ஐசிசி ஆண்கள் டி-20 உலகக் கிண்ண தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. தசுன் ஷானக தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இக்குழாமில் குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீர உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். இலங்கை அணி தனது உலகக் கிண்ணப் பயணத்தை பெப்ரவரி 8ஆம் திகதி அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியுடன் ஆரம்பிக்கவுள்ளது. இலங்கை குழாம்: தசுன் ஷானக (தலைவர்), […]

அவுஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தான் அணிகள் இலங்கை வருகை

இலங்கையில் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் நாட்டில் இடம்பெறவுள்ள போட்டிகளில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் நேற்று (02) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த 32 வீரர்களும் அதிகாரிகளும், அவுஸ்திரேலிய அணியைச் சேர்ந்த 27 வீரர்களும் அதிகாரிகளும் இவ்வாறு நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இவர்கள் பாகிஸ்தானின் லாகூர் நகரில் இருந்து ஃபிட்ஸ் எயார் (FitsAir) விமானச் சேவையின் 8D-510 ரக விமானம் மூலம் கட்டுநாயக்க […]

சாதாரண தரப் பரீட்சை; விசேட அறிவிப்பு

025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்களை தரவிறக்கம் செய்வது மற்றும் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, தனியார் விண்ணப்பதாரர்கள் தமது அனுமதிப்பத்திரங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், திணைக்கள இணையத்தளத்திற்குச் சென்று தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்து திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இந்தத் திருத்தங்களை மேற்கொள்ளும் கால அவகாசம் 2026.02.10 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடையும். திருத்தங்களுக்கான […]

போராட்டங்களின்றி பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளோம்

“தேசிய மக்கள் சக்தியின் ஹட்டன் பிரகடனத்தில் குறிப்பிட்டது போல பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை போராட்டங்களின்றி அதிகரித்துள்ளோம் . எதிர்வரும் 10ஆம் திகதி நிச்சயமாக 1750 ரூபாய் நாற்சம்பளம் கிடைக்கும்” என பெருந்தோட்ட உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார். தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியினை நிறைவு செய்து வெளியேறும் 400 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (02) ஹட்டன் டீ.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே […]