இலங்கை மீனவர்கள் குழுவொன்றின் மீது தாக்குதல்: அமைச்சர் சந்திரசேகர் கடும் கண்டனம்

பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்து இலங்கை மீனவர்கள் குழுவொன்றின் மீது இந்தியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள் நடத்திய தாக்குதலுக்குத் தனது கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதாகக் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அமைச்சர், இச்சம்பவம் குறித்து இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

வென்னப்புவ, வெல்லமன்கரை துறைமுகத்திலிருந்து கடற்தொழிலுக்காகப் புறப்பட்டுச் சென்ற இரண்டு படகுகளில் இருந்த 12 மீனவர்கள் மீது, கடந்த 29ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் வைத்து இந்தியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடித்துவிட்டு நாடு திரும்பிக்கொண்டிருந்த போதே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான மீனவர்களில் நால்வர் கடற்படையினரின் படகு மூலம் கரைக்கு அழைத்து வரப்பட்டு காலி, கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 6 மீனவர்களை அழைத்து வருவதற்காகக் கடற்படைக் கப்பல் ஒன்று புறப்பட்டுச் சென்றுள்ளதாகக் கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமான்டர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இச்சம்பவம் குறித்து அரசாங்கம் வெளிப்படையான விசாரணையை நடத்த வேண்டும் என அகில இலங்கைநெடுநாள் மீன்பிடி படகு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டிரோன் மென்டிஸ் வலியுறுத்தியுள்ளார்.

“மூன்று படகுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதில் இரண்டு படகுகள் இலங்கை கடற்பரப்பிலேயே தாக்கப்பட்டுள்ளன. எல்லையில் இருந்து எமது கடற்பரப்பிற்குள் நுழைந்தே அவர்கள் தாக்கியுள்ளனர். அவ்வாறு தாக்கும் வரை எமது அதிகாரிகள் என்ன செய்தார்கள் என நாம் முதலில் கேட்க வேண்டும். இது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஆராயுமாறு நாம் எமது இரு அமைச்சர்களிடமும் கோருகிறோம். கடற்படையினரிடமும் முறையான விசாரணையைக் கோருகிறோம். எமது மீனவர்களைத் தாக்கிவிட்டுச் செல்லும் வரை என்ன செய்தீர்கள் எனக் கடற்படையினரிடமும் கேட்கிறோம்.” என அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இலங்கை கடற்பரப்பிற்குள் மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக் காவல்படை நடத்திய இத்தாக்குதலின் போது, மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து ‘அத தெரண’ கடற்படையினரிடம் வினவியது.

இதற்குப் பதிலளித்த கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமான்டர் புத்திக சம்பத், இலங்கை கடற்பரப்பை முழுமையாக ஒரே நேரத்தில் கண்காணிப்பது நடைமுறைச் சாத்தியமற்றது எனக் குறிப்பிட்டார்.

11

முதல்வர் விஜய்யை புகழ்ந்த விஜய் சேதுபதி!

September 21, 2026

நடு​வுல கொஞ்​சம் பக்​கத்த காணோம், ‘சீதக்​கா​தி’ படங்​களை இயக்​கிய பாலாஜி தரணிதரன், அடுத்து இயக்கி இருக்​கும் படம் ‘பத்​தா’. விஜய்

ra

ராஷ்மிகாவின் ‘மைசா’ டீசர் வெளியீடு

September 21, 2026

ராஷ்மிகா மந்தனா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ரவீந்திரா புல்லே இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்கு ஜேக்ஸ்

667dd350-b4d2-11f1-b55d-81b847f392df.png

மொஸ்கோ மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல்: நூற்றுக்கணக்கான ட்ரோன்களை உக்ரைன் ஏவியதாக மேயர் தெரிவிப்பு

September 21, 2026

மொஸ்கோ பிராந்தியத்தை இலக்கு வைத்து உக்ரைன் தனது மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும், இதில் நகரின் பிரதான எண்ணெய் சுத்திகரிப்பு

20867fcd741b7ded3715f325c3c4c5bd17889223173851319_original

“மதுராந்தகத்தில் கொதிக்கும் கிராமங்கள்!” – வாக்கு சேகரிக்கச் சென்ற வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு!

September 21, 2026

செங்கல்பட்டு: அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள மதுராந்தகம் (தனி) தொகுதியில் அரசியல் கட்சிகளின் பரப்புரை உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில்,

6096cdd0-373b-11f1-b3bd-89f011397f28.jpg

“மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று முதல் சீமான் சூறாவளிப் பிரசாரம்!” – நாம் தமிழர் கட்சியின் 9 நாள் பிரசாரப் பயணத் திட்டம் வெளியீடு

September 21, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் மற்றும் புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் தனித்துக் களமிறங்கும் நாம்

Screenshot-2026-09-20-165758

“விஜய் லண்டனில் அஜித்தைச் சந்தித்ததில் எந்தத் தவறுமில்லை; தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தேவை!” – நடிகர் பிரகாஷ்ராஜ்

September 21, 2026

சென்னை: தவெக அரசின் செயல்பாடுகள் மற்றும் முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து

TVK-Rajmohan-2025-05-439d058ec97e01d8575aae7ecd9ea3c2

“கூட்டணிக் கட்சிகளிடம் திமுக பண்ணையார் மனப்பான்மையுடன் நடந்துகொண்டது!” – அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி

September 21, 2026

திருநெல்வேலி: திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் தயவில்தான் தவெக ஆட்சி நடைபெற்று வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும்

New Flights_mweb@2x

“மோசமான வானிலை!” – அமைச்சர் வன்னி அரசு பயணித்த விமானம் மதுரைக்குத் திருப்பல்

September 21, 2026

மதுரை: கோவையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, அமைச்சர் வன்னி அரசு உள்பட 165 பயணிகளுடன் சென்ற இண்டிகோ விமானம்

images - 2026-09-21T112851.522

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற வீராங்கனைக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து

September 21, 2026

சென்னை: ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் அடுத்தடுத்து இரண்டு வெள்ளிப் பதக்கங்களை

dailythanthi_2026-09-20_m222w2xn_karupaaiah

“காலை உணவுத் திட்ட சமையற்கூடப் பணிகளில் ரூ.10.63 லட்சம் மோசடி?” – மதுரையில் தவெக எம்.எல்.ஏ கருப்பையா அதிரடி கள ஆய்வு!

September 21, 2026

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட சமையற்கூட விரிவாக்கப் பணிகளில் போலியான பில்களைத் தயாரித்து

1342768

“இது தவெக ஆட்சியா, திமுக அரசின் நீட்சியா?” – கடலூர் சிப்காட், என்.எல்.சி நிலக்கையகப்படுத்தலுக்கு அன்புமணி கடும் கண்டனம்!

September 21, 2026

சென்னை: கடலூர் மாவட்டத்தில் புதிய சிப்காட் (SIPCOT) வளாகம் மற்றும் என்.எல்.சி (NLC) சுரங்க விரிவாக்கத்திற்காக 1,277 ஏக்கருக்கும் அதிகமான

high (3)

“முப்பெரும் விழாவா? ஒப்பாரி விழாவா?” – மு.க.ஸ்டாலினின் ‘ரீல்ஸ்’ விமர்சனத்திற்குத் தவெக ஐடி விங் பதிலடி!

September 21, 2026

சென்னை: திமுகவின் முப்பெரும் விழாவில் முதலமைச்சர் விஜய் மற்றும் தவெக அரசை ‘ரீல்ஸ் அரசு’ என விமர்சித்திருந்த நிலையில், அதற்குப்