நுணுக்கமான முறையில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த குழு கைது

நீண்டகாலமாக தரை மற்றும் கடல் வழியாக மிகவும் நுணுக்கமான முறையில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை (09) இரவு, அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் உள்ள சந்தேகத்திற்கிடமான வீடு ஒன்றில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அம்பாறை மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கே.ஏ.எம். பிரியங்கர தலைமையிலான குழுவினர் இந்த சோதனையை நடத்தினர்.

கைதானவர்களில் ‘கடற்குதிரை’ என அழைக்கப்படும் பிரதான சந்தேக நபரிடமிருந்து 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டது. மற்றைய சந்தேக நபரிடமிருந்து 20 கிராம் 100 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும், 5 கிராம் 250 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

கடத்தல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டர் வகை மோட்டார் சைக்கிள், 80 ஆயிரம் ரூபாய் பணம், இலத்திரனியல் தராசு மற்றும் நவீன கைத்தொலைபேசிகள் என்பனவும் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் 31 மற்றும் 40 வயதுடையவர்கள் ஆவர். இவர்களில் ஒருவர் தலைமுடி வெட்டும் தொழிலில் ஈடுபடுபவர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவர்கள் புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலிருந்து கடல் மற்றும் தரை வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்தி வந்து விற்பனை செய்து வந்துள்ளனர்.

சந்தேக நபர்கள் காரைதீவு பகுதியில் வீடு ஒன்றினை வாடகைக்கு பெற்று, அங்கிருந்தே இந்தக் கடத்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் முன்னுக்குப் பின் முரணான வாக்குமூலங்களை வழங்கி விசாரணையைத் திசைதிருப்ப முயன்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கிழக்குப் பிராந்திய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய, அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவின் கீழ் இச்சுற்றிவளைப்பு நடத்தப்பட்டது. அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டாரவின் வழிகாட்டலில், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் விக்ரமரத்னவின் மேற்பார்வையில் உப பொலிஸ் பரிசோதகர் பிரியங்கர தலைமையிலான குழுவினர் இக்கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் சான்றுப்பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

IUSF-Basil-malwana-house

மல்வானையில் பசில் ராஜபக்ஷவுடன் தொடர்புடைய ‘உரிமையாளர் அற்ற’ காணியை ஆக்கிரமித்ததுபல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

May 14, 2026

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் தொடர்புடையது எனக் கூறப்படும் மல்வானையில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய காணியை, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின்

dailythanthi_2026-05-13_fg2tx4ye_0

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்வு – முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!

May 14, 2026

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை (DA) 60 சதவீதமாக உயர்த்தி முதலமைச்சர் ச. ஜோசப்

rain-rules

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

May 14, 2026

சென்னை: தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை

768-512-26672389-thumbnail-16x9-shan

“அதிமுக அலுவலகம் எங்களின் கோவில்; தூசி கூட பட விடமாட்டோம்!” – சி.வி.சண்முகம் பேட்டி!

May 14, 2026

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்திற்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், “நாங்கள் உண்மையான தொண்டர்கள் என்பதைச் சட்டப்படி நிரூபித்த

687648807_1285529470437523_5068884044641172277_n4

“ரூ.2,500 தருவதாகக் கூறிவிட்டு ரூ.1,000-ஐயும் இழுத்தடிப்பதா?” – முதலமைச்சர் விஜய்க்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!

May 14, 2026

சென்னை: மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து, முதலமைச்சர் விஜய்யை முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகக் கடுமையாக

1fb8d4e582643c30a07cba7b79d80a531778748271620113_original

“EPS உட்பட 22 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்க!” – சபாநாயகரிடம் சி.விஜயபாஸ்கர் தரப்பு அதிரடி மனு!

May 14, 2026

சென்னை: அதிமுக-வில் ஏற்பட்டுள்ள பிளவு உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கம் செய்யக்

ff4c6bd1bec4c8927e87c50e0deb633b_original

திருச்சி கிழக்கு தொகுதி காலி! 6 மாதங்களில் இடைத்தேர்தல்; ஸ்டாலின் போட்டியா? – அரசியல் களத்தில் பரபரப்பு!

May 14, 2026

சென்னை: தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தனது திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து,

dmk-stalin

“தோல்விக்கு நானே பொறுப்பு; ஒருத்தரை ஒருத்தர் குறை சொல்லாதீங்க!” – திமுக மா.செக்கள் கூட்டத்தில் ஸ்டாலின் உருக்கம்!

May 14, 2026

சென்னை: “தேர்தல் தோல்விக்குக் கழகத்தின் தலைவர் என்ற முறையில் நானே பொறுப்பேற்கிறேன்” என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின்

image1-2026-05-14t131334-184-1778744675

“முன்கூட்டியே ஆர்டர் செய்த சோபா அது!” – விசிக அலுவலக சர்ச்சை குறித்து திருமாவளவன் விளக்கம்!

May 14, 2026

சென்னை: தவெக ஆட்சிக்கு ஆதரவளிக்கும் முடிவை விசிக அறிவிக்கத் தாமதமான நிலையில், அக்கட்சியின் தலைமை அலுவலகத்திற்குப் புதிய சோபாக்கள் வந்திறங்கியது

nana

நானாட்டானில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

May 14, 2026

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாள் நினைவேந்தல், இன்று (14) மன்னார், நானாட்டான் பகுதியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இலங்கைத் தமிழரசுக்

put

சீரற்ற காலநிலை; புத்தளம் ரயில் சேவை பாதிப்பு

May 14, 2026

சீரற்ற காலநிலை காரணமாக நிலவும் வெள்ளப்பெருக்கினால், புத்தளம் ரயில் பாதையிலான ரயில் சேவைகள் சிலாபம் ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக

dd

திட்டமிடல் மற்றும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்

May 14, 2026

கிளிநொச்சி மாவட்டத்தின் திட்டமிடல் மற்றும் தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடல் இன்று(14.05.2026)