கொழும்பின் பல பகுதிகளில் தற்போது நடைமுறையிலுள்ள திட்டமிடப்பட்ட நீர்வெட்டு நேரத்தை மேலும் குறைப்பதற்குத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) திட்டமிட்டுள்ளது.
நீர் வழங்கல் சபையின் தலைவர் பொறியியலாளர் சந்தன பண்டார இது குறித்துத் தெரிவிக்கையில், நிலவும் சூழ்நிலையைப் பொறுத்து நீர் விநியோகத் தடையை 8 முதல் 12 மணிநேரம் வரை குறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார்.
தொடர்ந்து நிலவும் வறட்சியான வானிலை காரணமாக நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் பாதுகா, ஹோமாகம, பாலன்வத்தை மற்றும் பன்னிப்பிட்டிய போன்ற பகுதிகளில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை நீர்வெட்டு அமல்படுத்தப்பட்டது.
பொதுமக்களின் அசௌகரியங்களைக் குறைக்கும் நோக்கில், நேற்று (ஏப்ரல் 3) நீர்வெட்டு நேரத்தை 24 மணிநேரத்திலிருந்து 18 மணிநேரமாகச் சபை குறைத்திருந்தது. தற்போது அதனை மேலும் குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.