நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்தமைக்கான காரணங்களை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளிடம் தெளிவுபடுத்தியுள்ள ஜனாதிபதி தனிநபரையும் மையமாக கொண்டு அரசாங்கம் இந்த முடிவை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
நீதியை வழங்கும் பொறுப்பு வெறுமனே நீதித்துறையிடம் மாத்திரம் இல்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி அது ஒரு கூட்டு செயன்முறை என தெரிவித்துள்ளார்.
அரசமைப்பின் உத்தேச 22வது திருத்தத்தை எனது தனிப்பட்ட நிலைப்பாடகவோ அல்லது அரசாங்கத்தின் தனிப்பட்ட நிலைப்பாடகவோ கருதவேண்டாம் என ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.