நியூசிலாந்தில் உள்நாட்டுப் பறவைக்கு பறவைக் காய்ச்சல்

நியூசிலாந்தில் முதன்முறையாக புலம்பெயராது அங்குள்ள காடுகளில் வாழும் உள்நாட்டுப் பறவை ஒன்றிற்குப் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய H5N1 ரகப் பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் முதல் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்ட சில நாட்களிலேயே இந்த இரண்டாவது பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நியூசிலாந்தின் வட தீவில் உள்ள வைராடப்பா பிராந்தியத்தில், உள்ளூர் மக்களால் ‘காஹு’ என்று அழைக்கப்படும் ‘ஸ்வாம்ப் ஹாரியர் ஹாக்’ வகை பருந்து ஒன்றுக்கே இத்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் உயிரியல் பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரூ ஹொகார்ட் தெரிவித்துள்ளார்.

இந்த பருந்துகள் பொதுவாக குளிர்காலத்தில் வேட்டையாடுவதற்காகக் கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்லக்கூடியவை. அங்கு ஏற்கனவே தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிற பறவைகளை வேட்டையாடி உண்பதன் மூலமோ அல்லது அவற்றின் எச்சங்களை உண்பதன் மூலமோ இப்பருந்திற்குத் தொற்று பரவியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

கடந்த புதன்கிழமை, வெலிங்டன் நகருக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட ‘பிரவுன் ஸ்குவா’ என்ற புலம்பெயர் கடற்பறவை ஒன்றிற்கு நாட்டின் முதலாவது பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதுவரை நாட்டின் வணிக ரீதியிலான கோழிப்பண்ணைகளிலோ அல்லது வளர்ப்புப் பறவைகளிலோ இந்தத் தொற்று கண்டறியப்படவில்லை என அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில், அண்டை நாடான அவுஸ்திரேலியாவிலும் முதன்முறையாக அதன் உள்ளூர் கடற்பறவை ஒன்றிற்கு இத்தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அதற்கு முன்னர் அங்கு பதிவான வழக்குகள் அனைத்தும் வெளிநாடுகளில் இருந்து வந்த புலம்பெயர் பறவைகளுடன் மட்டுமே தொடர்புடையதாக இருந்தன.

உள்நாட்டுப் பறவைக்குத் தொற்று பரவியதை அடுத்து, நியூசிலாந்து சுகாதார மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

நாட்டின் மிக அரிய, அழிவின் விளிம்பிலுள்ள 5 முதன்மையான பறவை இனங்களைச் சேர்ந்த 300 முக்கிய இனப்பெருக்கப் பறவைகளுக்கு விசேட தடுப்பூசி செலுத்தும் திட்டம் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதில் நியூசிலாந்திற்கே உரித்தான, பறக்க முடியாத அரிய பறவை இனங்களான ‘தாகாஹே’ மற்றும் ‘காகாபோ’ கிளிகள் ஆகியவையும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Sajith-Premadasa-2 (1)

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும்  

October 10, 2026

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இச்சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம்

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்