ட்டில் நாளாந்தம் சுமார் 15 தொடக்கம் 17 வரையான மார்பகப் புற்ற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதோடு, நாள்தோரும் 3 பேர் உயிரிழப்பதாக சத்திர சிகிச்வை விசேட வைத்திய நிபுணர் உமேஷ் ஜெயராஜா தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற விசேட ஊடவியளாலர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒக்டோபர் மாதம் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக உலக சுகாதார ஸ்தாபனத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மார்பகப் புற்றுநோயானது உலகளவில் மாத்திரமன்றி இலங்கையிலும் பெண்கள் மத்தியில் மிக அதிகளவில் ஏற்படும் புற்றுநோயாகக் காணப்படுகின்றது. சாதாரணமாக இலங்கையில் ஒரு வருடத்திற்கு 6,000 புதிய மார்பகப் புற்றுநோயாளர்கள் கண்டறியப்படுகின்றனர். நாள்தோரும் 15 தொடக்கம் 17 பேர் அடையாளம் காணப்படுகின்றனர்.
அத்தோடு புற்றுநோயால் நாளாந்தம் 3 பேர் உயிரிழப்பதாகவும் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஆகையால் நோய் தொடர்பான விழிப்புணர்வை அனைவரும் பெற்றிருப்பது அவசியமாகும். மார்பகப் புற்றுநோயானது ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறியப்பட்டால் அதனை பூரணமாகக் குணப்படுத்த முடியும் என்பதுடன், ஏனைய புற்றுநோய்களை விடவும் இதனை ஆரம்பத்திலேயே மிக இலகுவாகக் கண்டறியக்கூடிய வாய்ப்புகளும் உள்ளன.
மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிய, 20 வயதுக்கு மேற்பட்ட அனைத்துப் பெண்களும் சுய மார்பகப் பரிசோதனையை வீட்டில் இலகுவாகச் செய்து கொள்ள முடியும் என்றார். இதன் மூலம் மார்பகங்களில் புதிதாக ஏதேனும் கட்டிகள் தோன்றினாலோ, தோலில் மாற்றங்கள் ஏற்பட்டாலோ அல்லது திரவக் கசிவுகள் காணப்பட்டாலோ அதனை உடனே கண்டறிந்து வைத்தியரை நாட முடியும் . அத்தோடு மாதாந்த சிகிச்சை நிலையங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் வைத்திய நிபுணர்களின் மார்பகப் பரிசோதனை ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதன் மூலமும், மேமோகிராம் பரிசோதனைகள் மூலமும் ஆரம்ப நிலையிலேயே இப்புற்றுநோயைக் கண்டறிய முடியும்.
மேலும், மார்பகப் புற்றுநோய்க்கான சிகிச்சைகளில் சத்திர சிகிச்சை மிக முக்கியமானதாகும். நிலைமையைப் பொறுத்து மருந்துகள் (கீமோதெரபி), கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் ஓமோன் சிகிச்சைகள் போன்ற சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன. ஆரம்பத்திலேயே கண்டறியப்படும் பட்சத்தில், மருந்துகளின் மூலம் கடினமான சிகிச்சைகள் இன்றியே மிக இலகுவாகவும் விரைவாகவும் நோயைக் குணப்படுத்த முடியும்.
சிகிச்சைகள் முடிவடைந்து நோய் குணமடைந்த பின்னரும் கூட, குறிப்பிட்ட காலப்பகுதியில் ஏற்படும் பக்கவிளைவுகள் அல்லது உடல் ரீதியான அசௌகரியங்களைக் கண்டறிவதற்காகத் தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதும், மாதாந்த சிகிச்சைகளுக்கு தவறாது சமூகமளிப்பதும் அவசியம் என்றார்.