நாட்டில் கடல் மற்றும் வான் வழியாக கடத்தப்படும் போதைப்பொருட்களைத் தடுக்க தீவிர நடவடிக்கை

நாட்டின் இளைய தலைமுறையினரையும், சிறுவர்களையும் குறிவைத்து மேற்கொள்ளப்படும் உள்நாட்டு மற்றும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை முற்றாக ஒழிக்கும் நோக்கில், அரசாங்கம் விசேட தேசிய வேலைத்திட்டத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நாடே ஒன்றாக தேசிய திட்டத்தின் கீழ், கடல் மற்றும் வான்வழி போதைப்பொருள் கடத்தல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன என்று போதைப்பொருள் பிரிவு பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விசேட கலந்துரையாலில் உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டின் மிக முக்கியமான சொத்துக்களான இளைய தலைமுறையினரையும், சிறுவர்களையும் குறிவைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் திட்டமிட்டு நடத்தப்படும் போதைப்பொருள் கடத்தலை நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதற்காக விசேட தேசிய வேலைத்திட்டம் ஒன்று தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இலங்கை ஜனாதிபதியின் தலைமையில், ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள நாடே ஒன்றாக என்ற தேசிய இயக்கம் தொடங்கப்பட்டு தற்போது 7 மாதங்களுக்கும் மேலாகிறது. இக்காலப்பகுதியில் இலங்கை பொலிஸ்துறை, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, முப்படைகள், புலனாய்வுத்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஒன்றிணைந்து நாடு தழுவிய ரீதியில் பல பாரிய சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்.

நாட்டிற்குள் பெரும்பாலான போதைப்பொருட்கள் கடல் வழியாவே கடத்தி வரப்படுகின்றன. இதற்கு அடுத்தபடியாக வான்வழியாகவும் போதைப்பொருட்கள் கொண்டு வரப்படுவது அதிகரித்துள்ளது. கடல் மார்க்கமாக நடைபெறும் இந்த சட்டவிரோத கடத்தல்களைத் தடுப்பதற்காகப் புலனாய்வுப் பிரிவினர், கடற்படையினர் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தினர் இணைந்து கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு, பெருமளவிலான போதைப்பொருட்களைக் கைப்பற்றியுள்ளனர்.

அண்மைக்காலமாக வான்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்தி வரும் சம்பவங்களும் கணிசமாக அதிகரித்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்னர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாகப் போதைப்பொருட்களைக் கடத்த முயன்ற கனேடிய நாட்டுப் பெண் ஒருவர் 35 கிலோ கிராம் போதைப்பொருளுடனும், டொமினிகன் குடியரசைச் சேர்ந்த நபர் ஒருவர் 47 கிலோ கிராம் போதைப்பொருளுடனும் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறான செயற்பாடுகளை முறியடிக்கும் வகையில் நவீன ஸ்கேனிங் மற்றும் சோதனை நடவடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதுமட்டுமன்றி போதைப்பொருட்களைக் கைப்பற்றுவதுடன் நின்று விடாமல் அதன் பின்னணியில் காணப்படும் சர்வதேச கடத்தல் காரர்களின் வங்கிக் கணக்குகள் நிதிப் பரிமாற்றங்கள் மற்றும் அவர்களது உள்நாட்டு முகவர்களைக் கண்டறிந்து சட்டரீதியான நடவடிக்கைகள் குறித்து பல திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. நாட்டிற்குள் போதைப்பொருட்கள் விநியோகிக்கப்படும் இந்த வலையமைப்பை முற்றிலுமாக முடக்கி, அதனை வேரோடு அழிப்பதே அரசாங்கத்தினதும், அதனுடன் தொடர்புடைய அரச நிறுவனங்களினதும் முதன்மையான நோக்கம் ஆகும் என்றார்.

Sakara

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் – சாகர காரியவசம்!

October 13, 2026

நாட்டின் தேசியம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஞானசார தேரர் பலவிடயங்களை வெளிப்படுத்தினார். சிங்கள பௌத்த இனத்தை பாதுகாப்பதற்காக தவறுகளை

mini

அமைச்சரைச் சந்திக்க தமிழ் பெண்கள் சங்கம் கோரிக்கை

October 13, 2026

சிறுவர்கள் மற்றும் யுவதிகளின் கலை, கலாசாரத் திறனை மேம்படுத்தும் நோக்கில் நிறுவுவதற்கு உத்தேசித்துள்ள நவீனமயமாக்கப்பட்ட கலாலயா கலாசார மற்றும் இளைஞர்

zer

சர்வதேச இலத்திரனியல்-கழிவு தினம்; 2050 இல் பூஜ்ஜிய கார்பன் இலக்கு!

October 13, 2026

2050 ஆம் ஆண்டளவில் ‘பூஜ்ஜிய கார்பன்’ (Net Zero) இலக்கை அடைவதே அரசாங்கத்தின் முதன்மையான எதிர்பார்ப்பாகும் என சுற்றாடல் பிரதி

fue

75 புதிய அரச எரிபொருள் நிரப்பு நிலையங்களை நிறுவ நடவடிக்கை

October 13, 2026

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் 75 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 2026

arju

அர்ச்சுனாவின் பதவியில் சிக்கல்: விரைவில் விசாரணை!

October 13, 2026

டாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை மேலதிக விசாரணைக்காக எதிர்வரும்

Navi Pillay York University (6) harini

நவி பிள்ளை: நீதியின் தூதர் மற்றும் தமிழ் மக்களுக்கு ஒரு உத்வேகம் ஹரிணி சிவலிங்கம்

October 12, 2026

ஹரிணி சிவலிங்கம்-கனடா சட்டத்தரணி இந்த வாரம், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கான தளராத அர்ப்பணிப்பால் தனது அசாதாரணமான வாழ்க்கைப்

Chamara_Sampath_1200x675px_06_08_25

சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டது ஏன்?

October 12, 2026

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டமைக்கான காரணங்களை இலங்கை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. இரத்தினக்கல் வியாபாரியொருவரிடம்

anura may 26

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் – எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு

October 12, 2026

சிறையிலடைக்கப்படும் பௌத்தமதகுருமாரின் காவியுடை தொடர்பில் பௌத்தமத பீடாதிபதிகள் முன்மொழிந்த பரிந்துரைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவித்துள்ளது அறிக்கையொன்றில்

batti land

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் இரா சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு

844137579_1823350292179398_4868269684370359471_n

கொக்குவில் பிரம்படி படுகொலையின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்!

October 12, 2026

ஈழத் தமிழர் வரலாற்றில் இந்திய இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட கொடூரமான படுகொலைகளில் ஒன்றான யாழ்_கொக்குவில்பிரம்படி_படுகொலையின்39ஆம்ஆண்டுநினைவு நாள் இன்றாகும் (அக்டோபர் 12, 2026).

gary

நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி

October 12, 2026

ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமை ஆணையாளரும் 2026 நோபல் சமாதான பரிசை பெற்றுள்ளவருமான நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின்