அன்டிகுவா மற்றும் பார்புடாவில் நடைபெற்ற 28ஆவது பொதுநலவாய அரச தலைவர்களின் உச்சிமாநாட்டில் (CHOGM 2026) பங்கேற்ற பிரதமர் ஹரிணி அமரசூரிய, தனது உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்துகொண்டு இன்று சனிக்கிழமை (7) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்து இலங்கை திரும்பினார்.
பொதுநலவாய தலைவர்களுடன் இணைந்து பிரதான உலகளாவிய பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி முன்னுரிமைகள் குறித்த கலந்துரையாடல்களில் பிரதமர் ஈடுபட்டார்.
பொதுவான சவால்களுக்குத் தீர்வு காண்பதற்காக உறுப்பு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு மற்றும் பங்குடைமைகளை வலுப்படுத்துவதில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
பல பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்திய பிரதமர், பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் இருதரப்பு உறவுகளையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆராய்ந்தார்.