முள்ளிவாய்க்கால் தமிழ் இனப் படுகொலைகளின் நினைவு ஊர்தி பவனி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (12) காலை நல்லூரில் உள்ள தியாக தீபம் நினைவிடத்தில் இருந்து ஆரம்பமானது.
இந்த ஊர்தி பவனியானது, வட, கிழக்கின் பல்வேறு பிரதேசங்களுக்குச் சென்று மே -18ஆம் திகதி முள்ளிவாய்க்காலை சென்றடையவுள்ளது.
இந்த ஊர்தி பவனியின்போது தியாக தீபத்தின் நினைவிடத்தின் முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டது.