நமது நாட்டு கலைத்துறை முன்னேற்றத்திற்காகத் தேசிய வேலைத்திட்டமொன்று அவசியம்

நமது நாட்டு கலைத்துறை மற்றும் சினிமாவைப்போற்றுப் பாதுகாப்பதற்குப் புதிய வேலைத்திட்டம் ஒன்று அவசியமாகும். பாரம்பரியமானவற்றைப் பாதுகாத்து, சினிமா மற்றும் கலை ஆகிய கட்டமைப்புகளை நவீனமயமாக்குவதற்குத் தேசிய வேலைத்திட்டமொன்று தேவையாகக் காணப்படுகிறது. கலை, சினிமா மற்றும் ஊடகத்துறையில் ஏற்பட்டுள்ள சாதகமான, முற்போக்கான மாற்றங்கள் மற்றும் புரட்சிகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

உள்நாட்டு சினிமா கலைஞர்கள் சங்கத்தின் இயக்குநர்கள் மற்றும் கலைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடலொன்று இன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

60, 70-ஆம் தசாப்தங்களில் இருந்த கலைத்துறை 80, 90-ஆம் தசாப்தங்களிலும் அதன் பின்னரும் மாற்றமடைந்து காணப்படுகிறது. இக்கலைத்துறையின் தொன்மை மற்றும் மதிப்புமிக்க நிறுவனங்களைப் பாதுகாத்து, புதிய கருத்துக்கள், தொழில்நுட்பம் மற்றும் புதிய கட்டமைப்புகளைத் தாபித்து, பழமையையும் புதுமையையும் ஒன்றிணைத்து இப்பயணத்தை மேற்கொள்ள வேண்டும். அத்துடன், இச்சினிமா துறைக்காகப் புதிய தொழில்நுட்பம், புதிய கருத்துக்கள் மட்டுமன்றி, நிதி சார்ந்த ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு பழைய வளங்களையும் நிறுவனங்களையும் பாதுகாப்பதுடன், இதன் எதிர்கால பயணத்திற்கு அரசாங்கத்தின் தலையீடு, தனியார் தலையீடு மட்டுமன்றி, அரச மற்றும் தனியார் ஆகிய இரு பிரிவினரும் ஒன்றிணைந்து பயணிக்கும் ஒருங்கிணைந்த பயணம் குறித்தும் சிந்திக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இக்கலைத்துறையின் மேம்பாட்டிற்காக விசேட சலுகை வட்டியிலான கடன் திட்டங்களை முன்னெடுக்க முடியும். கடன் வழங்குவது மட்டுமன்றி, இக்கலைப் படைப்புகளைப் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் விதம் குறித்தும் சிந்திக்க வேண்டும். அவ்வாறு நடக்காத பட்சத்தில் கலைஞர்கள் கடனாளிகளாகவே மாறிவிடுவர். யூடியூப் (YouTube), நெட்ஃபிளிக்ஸ் (Netflix), ஏஐ (AI – செயற்கை நுண்ணறிவு) போன்ற துறைகளைப் போன்றே பாரம்பரிய துறைகளையும் வலுப்படுத்தி இக்கலைத்துறையைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.இது தொடர்பாக மேலும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு, பொதுவானதொரு உடன்பாட்டை எட்ட வேண்டும். இதனை ஒரு அரசியல் பந்தாட்டமாக மாற்றிக்கொள்ளாமல், தேசிய சினிமா வேலைத்திட்டத்திற்காக அரச மற்றும் தனியார் துறைகள் இரண்டும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

இது குறித்து பரந்தளவிலான கலந்துரையாடலுக்குச் செல்ல வேண்டும். அதற்கான முறையான கொள்கை சார் மற்றும் நடைமுறை முன்வைப்புகளைச் சமர்ப்பிப்பதற்கு அனைத்துத் தரப்பினரையும் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து, சிறந்ததொரு கொள்கை வடிவமைப்பை மேற்கொண்டு, கலந்துரையாடலை ஏற்படுத்தி, பரந்த வேலைத்திட்டத்தை நோக்கிப் பயணிக்க ஒன்றிணையுங்கள். இதற்காக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தின் கேட்போர் கூடத்தையும் பெற்றுத் தர முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

toronto mayor election

நகரசபைத் தேர்தலுக்கு முன்னதாக மலிவு விலை வாழ்க்கை மற்றும் வீடமைப்பு நடவடிக்கைகளை டொரண்டோ வாக்காளர்கள் விரும்புகின்றனர்

October 13, 2026

டொரண்டோவின் முன்னணி மேயர் வேட்பாளர்கள் இந்த மாத நகரசபைத் தேர்தலுக்கு முன்னதாகத் தங்களது பார்வையையும் திட்டங்களையும் முன்வைத்து நகரம் முழுவதும்

Gnanasara-Thera

ஞானசார தேரர் கடும் மன உளைச்சலில்- நஞ்சருந்தி உயிர்துறக்கப்போவதாக தெரிவித்தார்- பௌத்தமதகுரு

October 13, 2026

பொதுபல சேனாவின் ஞானசார தேரர் கடும் மன அழுத்தத்தில் உள்ளார் விசம் அருந்தி தற்கொலை செய்து கொள்வது குறித்து சிந்திக்கின்றார்

Sakara

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் – சாகர காரியவசம்!

October 13, 2026

நாட்டின் தேசியம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஞானசார தேரர் பலவிடயங்களை வெளிப்படுத்தினார். சிங்கள பௌத்த இனத்தை பாதுகாப்பதற்காக தவறுகளை

mini

அமைச்சரைச் சந்திக்க தமிழ் பெண்கள் சங்கம் கோரிக்கை

October 13, 2026

சிறுவர்கள் மற்றும் யுவதிகளின் கலை, கலாசாரத் திறனை மேம்படுத்தும் நோக்கில் நிறுவுவதற்கு உத்தேசித்துள்ள நவீனமயமாக்கப்பட்ட கலாலயா கலாசார மற்றும் இளைஞர்

zer

சர்வதேச இலத்திரனியல்-கழிவு தினம்; 2050 இல் பூஜ்ஜிய கார்பன் இலக்கு!

October 13, 2026

2050 ஆம் ஆண்டளவில் ‘பூஜ்ஜிய கார்பன்’ (Net Zero) இலக்கை அடைவதே அரசாங்கத்தின் முதன்மையான எதிர்பார்ப்பாகும் என சுற்றாடல் பிரதி

fue

75 புதிய அரச எரிபொருள் நிரப்பு நிலையங்களை நிறுவ நடவடிக்கை

October 13, 2026

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் 75 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 2026

arju

அர்ச்சுனாவின் பதவியில் சிக்கல்: விரைவில் விசாரணை!

October 13, 2026

டாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை மேலதிக விசாரணைக்காக எதிர்வரும்

Navi Pillay York University (6) harini

நவி பிள்ளை: நீதியின் தூதர் மற்றும் தமிழ் மக்களுக்கு ஒரு உத்வேகம் ஹரிணி சிவலிங்கம்

October 12, 2026

ஹரிணி சிவலிங்கம்-கனடா சட்டத்தரணி இந்த வாரம், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கான தளராத அர்ப்பணிப்பால் தனது அசாதாரணமான வாழ்க்கைப்

Chamara_Sampath_1200x675px_06_08_25

சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டது ஏன்?

October 12, 2026

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டமைக்கான காரணங்களை இலங்கை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. இரத்தினக்கல் வியாபாரியொருவரிடம்

anura may 26

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் – எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு

October 12, 2026

சிறையிலடைக்கப்படும் பௌத்தமதகுருமாரின் காவியுடை தொடர்பில் பௌத்தமத பீடாதிபதிகள் முன்மொழிந்த பரிந்துரைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவித்துள்ளது அறிக்கையொன்றில்

batti land

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் இரா சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு