தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வியாழனன்று விசேட பாராளுமன்றக் கூட்டம் – அரசாங்கம்

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டு வந்த அவலமான யுகம் தற்போது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன, அண்மைய சம்பவங்கள் தொடர்பில் ஏற்கனவே சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அத்துடன், தொழிலாளர்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுத்துவது குறித்து ஆராய்வதற்காக, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோரின் தலைமையில், பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பெருந்தோட்ட நிறுவனங்களின் பங்கேற்புடன் வரும் 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் விசேட கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் திங்கட்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த நாட்களாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன. வரலாற்றில் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்களை எதிர்கொண்டுள்ளனர். உண்மையில் இது மிகவும் மோசமான சூழலாகும். எவ்வாறிருப்பினும் அந்த யுகம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

அண்மையில் பதிவான இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பாராளுமன்றத்திலும் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டது. அமைச்சின் செயலாளருடன் நானும் பெருந்தோட்டக் கம்பனிகளை அழைத்து இது தொடர்பில் கலந்துரையாடினோம். பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரின் தலைமையில் 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.

பொலிஸ் உயர் அதிகாரிகள், பெருந்தோட்டக் கம்பனிகளின் பிரதிநிதிகள் மற்றும் பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட சகலரதும் பங்கேற்புடன் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் நாம் எமது கவலையை தெரிவித்துக் கொள்கின்றோம். எவ்வாறிருப்பினும் சிலர் தமது அரசியல் நோக்கங்களுக்காகவும் இதனைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர். இவற்றிலிருந்து பெருந்தோட்ட தொழிலாளர்களைப் பாதுகாத்து, அவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதற்கு என்னும் நாம் முன்னிற்போம் என்றார்.

Sajith-Premadasa-2 (1)

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும்  

October 10, 2026

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இச்சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம்

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்